சீதுவ பகுதியில் நபரொருவரை கொடூரமாக கொலை செய்து சூட்கேஸில் வைத்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 6 பேரை
பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களால் கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் கடந்த தினம் தடுகம் ஓயாவில் பயணப் பொதி ஒன்றில் இருந்து கண்டு
பிடிக்கப்பட்டது.படுகொலை செய்யப்பட்ட நபரை சந்தேகநபர்கள் ,புறக்கோட்டை பிரதேசத்தில் வைத்து காரில் ஏற்றிக்கொண்டு சீதுவை பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரு மகன்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக