மூதூரில் நாவல் பழம் பறிக்கச் சென்ற சிறுவன் மரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயங்களுக்குள்ளான சம்பவம் ஒன்று
இடம்பெற்றுள்ளது.
மூதூர் நடுத்தீவு பகுதியைச் சேர்ந்த எஸ்.சகான் (வயது 14) என்ற சிறுவனே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
அச் சிறுவன் தனது நண்பர்களுடன் நாவல் மரத்தில் ஏறி நாவல் பழம் பறித்துக் கொண்டிருக்கும்போது தவறி விழுந்துள்ளதாக
தெரிய வந்துள்ளது.
காயங்களுக்குள்ளான சிறுவன் சிகிச்சைக்காக மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சிறுவன் இடுப்பு எலும்பு முறிவுக்குள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக