siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

அமரர் வாரித்தம்பி நடராஜா ( பஞ்சட்ச்சரம்) 2ம் ஆண்டு நினைவஞ்சலி 05.09.23

தோற்றம்-29 04 1940--மறைவு-27 08 2021
கிளிநொசசி பெரியகுளம் கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், கண்டாவளை நவற்கிரி, கொழும்பு  ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வாரித்தம்பி நடராஜா( பஞ்சட்ச்சரம்)
 அவர்களின்   இரண்டாம் ஆண்டு நினைவு நாள் திதி 05-09-2023.இன்று அன்னார், காலஞ்சென்றவர்களான வாரித்தம்பி  தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிவலிங்கமணி (சிவலிங்கம் ) அவர்களின் அன்புக் கணவரும்,ஜெபா (இலங்கை ) றதி (லண்டன் ) றஞ்சினி (கனடா) மைதிலி  (லண்டன் ) 
 ஆகியோரின் பாசமிகு தந்தையும், 
 காலஞ்சென்றவர்களான துரைராஜா செல்வராஜா ஜெயரத்தினம் ஞானமணி   வித்திலாமணி  பாலசிங்கம் சின்னமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் காலஞ்சென்றவர்களான பூரணம் சுப்பிரமணியம்  திலகவதி சபாரத்தினம் ஐயாத்துரை கமலாதேவி மற்றும் பூமணி (கனடா) ஆகியோரின் 
சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
05.09.2023  செவாய்க்கிழமை  இன்று  
அமரர் வாரித்தம்பி நடராசா  ( பஞ்சட்ச்சரம்)அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவாக முல்லைதீவு கைவேலி இயங்கி வருகின்ற இனியவாழ்வு  இல்ல  குழந்தைகளுக்கு விசேட சிறப்பு உணவு 
VCC 93 O/L & 96 A/L ன் "நட்புடன் கரம் கொடுப்போம்" (ஊரோ டு உறவாடும் பழைய மாணவர்கள்)  அமைப்பின் அனுசரனையுடன் சிறப்பு உணவு வழங்கப்பட்டது அமரர் வாரித்தம்பி நடராசா அவர்களை எமது அமைப்பின் சார்பாக  நினைவுகூர்ந்து பிராத்திப்போம்🙏🏼🙏🏼🙏🏼
அத்துடன் இந்த நிகழ்வுக்கான பணத்தினை வழங்கிய தாசன் மைதிலி(லன்டன்)குடும்பத்தினருக்கு எமது அமைப்பின் சார்பாக மனம் நிறைந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
நீங்காத நினைவுகள் 
 இரண்டு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்,
அப்பாவின் அன்பான நினைவுகள் மறைவதில்லை.
மடியில் அமர்த்தி மகிழ்வாய் சோறு ஊட்டியதை மறக்க முடியுமா..!
கரம்கோர்த்து கல்லூரிக்கு
அழைத்து செல்வதை சொல்லவா..!
நல்லாசிரியராய் இருந்து
நன்மைதீமை சொல்லியதை
மறக்க முடியுமா..!
நல்ல நண்பனாய் இருந்து
நன்மைகள் பல புரிந்ததை சொல்வவா..!
கண்ணுக்கு அழகான கணவனை கரம்பற்ற வைத்ததை சொல்லவா..!
அப்பா உங்களைப்பற்றி ஆயிரம் சொல்லலாம்..!
இப்படி பல செய்து எங்கள் மனதில் இடம்பிடித்த எங்கள் அப்பா..,
எங்கு சென்றீர்கள் எங்களை விட்டு..!
இனி எப்பிறவியில் காண்போம் உங்களை..!
இன்னொரு பிறவி இருந்தால்
எங்கள் தந்தையாக பிறக்க வேண்டும் அப்பா
தகவல்: குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால்
  துயருறும்  மனைவி  பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
பேரப்பிள்ளை ,உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! சாந்தி !!! சாந்தி !!!

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக