siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 16 செப்டம்பர், 2024

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் கடைக்காரர் சுட்டுக்கொலை

சிகரெட் விற்க மறுத்த மளிகைக்கடைக்காரரை அடையாளம் தெரியாத சிலர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை 
ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது . 
அவ்வூரைச் சேர்ந்த சாரதா யாதவ், 55, தம்முடைய மளிகைக்கடைக்கு வெளியே படுத்திருந்தார்.அப்போது, மோட்டார்சைக்கிளில் வந்த சிலர் அவரை எழுப்பி சிகரெட் தருமாறு கேட்டுள்ளனர்.
அதற்கு, கடையின் சாவி வீட்டிற்குள் உள்ளது என்றும் நள்ளிரவு நேரத்தில் கடையைத் திறக்க முடியாது என்றும் கூறி, 
யாதவ் மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மர்ம மனிதர்கள், அவரது தொண்டையைப் பிடித்து, அவரது கழுத்தில் சுட்டனர். வீட்டின் மாடியில் படுத்திருந்த யாதவின் மனைவி, துப்பாக்கிச் சத்தம் கேட்டு 
ஓடோடி வந்தார். 
ஆனால், அதற்குள் அந்த மர்ம மனிதர்கள் தப்பிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த யாதவை அவருடைய குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆயினும், அவர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.
என்பது குறிப்பிடத்தக்கது




 

சனி, 14 செப்டம்பர், 2024

ரயிலுடன் மோதுண்டு தெஹிவளையில் ஒருவர் மரணம்

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 
இந்த விபத்து.14-09-2024. இன்று  பிற்பகல் 3.00 மணியளவில் 
இடம்பெற்றுள்ளது.  
மருதானையில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த விரைவு ரயிலிலேயே குறித்த நபர் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
என்பது குறிப்பிடத்தக்கது 





 

வெள்ளி, 13 செப்டம்பர், 2024

நாட்டில் களுவாஞ்சிகுடி மயானத்தில் ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளன

நாட்டில் மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயானம் ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர்
தேற்றாத்தீவு மயானத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ள குறித்த அடையாளம் காணப்படாத சடலத்திற்கு அருகாமையில் சமய வழிபாடுகள் இடம் பெற்றதற்கான தடயங்கள் காணப்படுவதாக பொலிசார்
 தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் நரபலி பூஜைகள் எதுவும் நடாத்தப்பட்டதா என்பது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் குறித்த பகுதிக்கு வந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் மற்றும் குற்றத்தடவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சடலம் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதனால் அடையாளம் காண்பதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக தெரியவருகின்றது.
குறித்த சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது



வியாழன், 12 செப்டம்பர், 2024

எம்பாக்ஸ் எனப்படும் குரங்கம்மை வைரசின் பரவல் பாகிஸ்தான் அடுத்தடுத்து கண்டறியப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் நாட்டில் எம்பாக்ஸ் எனப்படும் குரங்கம்மை வைரசின் பரவல் அடுத்தடுத்து கண்டறியப்பட்டு வருகிறது. 
இதுபற்றி கைபர் பக்துன்குவா மாகாணத்தின் சுகாதார மந்திரி காசிம் அலி ஷா வெளியிட்டு உள்ள செய்தியில், சவுதி அரேபியாவில் இருந்து
 பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்திற்கு 33 வயதுடைய நபர் கடந்த 7ந்தேதி வந்து 
சேர்ந்துள்ளார்.
இதன்பின் பெஷாவர் நகரில் ஓட்டல் ஒன்றில் தங்கினார். அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டவுடன் தனியார் கிளினிக் ஒன்றில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து, லோயர் திர் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். 
சவுதியில் இருந்து திரும்பிய பின் உறவினர்கள் யாரையும் சந்திக்கவில்லை. பாகிஸ்தானிலும் வேறு யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். பாகிஸ்தானில் குரங்கம்மை தொற்றுக்கு 
ஆளான 5வது நபர் இவராவார். கடந்த 1-ந்தேதி 4-வது நபருக்கு பாதிப்பு அறியப்பட்டது.
இதற்கு முன் தொற்று பாதித்த 4 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் அனைவரும் தொற்று இல்லை என உறுதியான பின்னர், கடந்த 8-ந்தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 
உலக சுகாதார அமைப்பு, குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக கடந்த ஆகஸ்டு மத்தியில் அறிவித்தது. இதன் பாதிப்பு ஆப்பிரிக்காவில் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால், நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என ஆப்பிரிக்காவில் 13 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு 
கண்டறியப்பட்டு உள்ளது. இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. ஐரோப்பாவின் சில நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.குறிப்பிடத்தக்கது என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 11 செப்டம்பர், 2024

மரண அறிவித்தல் அமரர் திரு கதிரிப்பிள்ளை சச்சிதானந்தர் 10.09.24

துயர் பகிர்வு தோற்றம் 07-06-1950-மறைவு-10-09-2024
யாழ். நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  கொழும்பில் வசித்து வந்த அமரர் கதிரிப்பிள்ளை சச்சிதானந்தர்
10-09-2024அன்று இறைவனடி சேந்தார்.அன்னார் காலம் சென்ற கதிரிப்பிள்ளை ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனுமாவார் அன்னாரின்  நல்லடக்கம்,11-09-2024.அன்று கொழும்பில் நடைபெற்றது 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
.தகவல் குடும்பத்தினர் 
 ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!

நல்லடக்க முகவரி புகைப்படத்தில் இணைப்பு 







 

செவ்வாய், 10 செப்டம்பர், 2024

இலங்கையில் எடை குறைந்து பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் குழந்தைகளின் போசாக்கின்மை நிலைமை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற 
விசேட குழுவின் அறிக்கை அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
எடைக் குறைவு, வளர்ச்சி குன்றிய நிலை, வளர்ச்சி குன்றிய நிலை மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாடு - முக்கியமான 
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லாதது - குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது என்று அந்த அறிக்கை 
சுட்டிக்காட்டியுள்ளது.
2,500 கிராம் அல்லது அதற்கும் குறைவான பிறப்பு எடையுடன் பிறக்கும் குழந்தைகள் குறைந்த எடை கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள் மற்றும் 2022 இல் நடத்தப்பட்ட தேசிய ஊட்டச்சத்து மற்றும் 
நுண்ணூட்டச் சத்து ஆய்வின்படி,  குறைந்த பிறப்பு எடையின் 
பாதிப்பு 15.9% ஆகும்.
மேலும், ஜூன் 2023 ஊட்டச்சத்து மாத மதிப்பீடு, 2022 உடன் ஒப்பிடும்போது, ​​கைக்குழந்தைகள் மற்றும் 02 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே எடை குறைவு மற்றும் வளர்ச்சி குன்றியதைக் கண்டறிந்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் 24.6% அதிக 
எடை குறைந்த விகிதம் பதிவாகியுள்ளது. அதன்படி, ஒவ்வொரு நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை மிதமான அல்லது கடுமையான
 எடை குறைவாக உள்ளது.
ஜூன் 2023 இல், இலங்கையில் வறுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விகிதம் 10% ஆகும் என்று இந்த 
அறிக்கை கூறுகிறது.
5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளில் 1.2% கடுமையான கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 16,000 குழந்தைகள் இத்தகைய கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.
ஊட்டச்சத்து மாதம் 2023 அறிக்கை, 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே வளர்ச்சி குன்றியதில் 10.3% அதிகரிப்பு, முந்தைய ஆண்டை விட 9.2% அதிகரித்துள்ளது.
அதே வயதுடைய குழந்தைகளுடன் ஒப்பிடும்போது உயரம் குறைவாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் நாள்பட்ட ஊட்டச்சத்து குறைபாட்டிற்கான காரணங்கள் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏற்படுவதாக அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், 2022 கணக்கெடுப்பு 5-18 வயதுடைய குழந்தைகளின் தேசிய பிரதிநிதித்துவ மாதிரியில் வயதுக்கு ஏற்ப உடல் எடை குறைவு
, அதிக எடை மற்றும் உடல் பருமன் அதிகரித்து 
வருவதாகக் கண்டறிந்துள்ளது.
குடும்ப அளவில் உணவுப் பாதுகாப்பின்மையும் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்குக் காரணம் என்று அறிக்கை 
காட்டுகிறது.
2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, மொத்த மக்கள் தொகையில் 98% உணவு விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதன் விளைவாக, ஆய்வு செய்த 74% குடும்பங்கள் கடந்த 
ஆறு ஆண்டுகளில் உணவு அல்லது அன்றாட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியவில்லை. அந்த ஆண்டின் மாதங்கள், அறிக்கையின்படி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், உணவுப் பாதுகாப்பற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 2023 மார்ச் 2023 இல் 17% ஆக இருந்து 2023 மூன்றாவது காலாண்டில் 24% ஆக
 அதிகரித்துள்ளது.
அனைத்து குடும்பங்களிலும் மூன்றில் ஒரு பகுதியினர் சமைப்பதற்கான அதிர்வெண்ணைக் குறைத்துள்ளனர் அல்லது அவற்றின் நுகர்வை மட்டுப்படுத்தியுள்ளனர், மேலும் கால் பகுதியினர் அண்டை வீட்டாரின் உணவில் வாழ்கின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


திங்கள், 9 செப்டம்பர், 2024

நாட்டில் மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட கணவன்

மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குந்திக்குளம் பகுதியில் கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார்
 தெரிவித்தனர்.
இச்சம்பவம் 07-09-2024 சனிக்கிழமை  இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் குந்திக்குளம், மிஹிந்தலை பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய கணவரும் 56 வயதுடைய மனைவியுமே 
உயிரிழந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் 
தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.அதேபோல கடந்த வெள்ளிக்கிழமை (6) இரவு கணவன் - மனைவிக்கு இடையே வாக்குவாதம் 
ஏற்பட்டுள்ளது.
இதன்போது, கணவன் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை 
செய்துகொண்டுள்ளார்.
இதனையடுத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது சம்பவம் இடம்பெற்ற இடத்தில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடரியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். உயிரிழந்த இருவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலையில் 
வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் மிஹிந்தலை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். என்பதாகும் 
 

ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

இலங்கையில் இருவேறு பகுதிகளில் யானை தாக்குதல் இருவர் பலி

இலங்கையில் கல்முனை மற்றும் கபித்திகொல்லேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.  
இவர்களில் ஒருவர் கல்முனை பஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ள வீதியில் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். திருவள்ளுவர் மத்திய பகுதியை சேர்ந்த 68 வயதுடைய புட்லா என்பவரே 
உயிரிழந்துள்ளார்.
 இதேவேளை, கபிதிகொல்லாவ, கன்வுட்டுவ மயானத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது காட்டு யானை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். 
மஹரலபனாவ, கபிதிகொல்லாவ பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். குறிப்பிடத்தக்கது என்பதாகும் 

சனி, 7 செப்டம்பர், 2024

நாட்டில் போகஸ்லன பிரதேசத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

நாட்டில் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஸ்லன பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக
 நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த 
தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது 
செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதுடைய லாஹுகல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பிடத்தக்கது என்பதாகும் 

 இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>> 







;

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

துணுக்காய் பகுதியில் கண்ணிவெடி வெடித்ததில் நான்கு பணியாளர்கள் படுகாயம்

நாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம்- துணுக்காய் பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 
கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் நால்வர் கண்ணிவெடி விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். 
 இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (05) இடம்பெற்றுள்ளது. குறித்த வெடிவிபத்தில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும்
 பணியில் ஈடுப்ட்டிருந்த நான்கு பெண் பணியாளர்களே படுகாயமடைந்துள்ளனர்.
 காயமடைந்தவர்கள் 43 , 40 , 39 வயதுடையவர்கள் என்பதுடன் இவர்களில் மூவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு 
செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்களுக்காக 
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்
.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 5 செப்டம்பர், 2024

நாட்டில் பிபில, நாகல பகுதியில் பஸ் விபத்தில் பலர் காயம்.

நாட்டில்  பிபில, நாகல பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் மீது பின்னால் இருந்து மற்றுமொரு பஸ் மோதியதில் பலர் 47 காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கு‌றி‌த்த விபத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 47 பேர் காயமடைந்து பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் - பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது



புதன், 4 செப்டம்பர், 2024

நாட்டில் கிளிநொச்சியில் இலஞ்சம் பெற்ற வருமானவரி பரிசோதகர்கள் கைது

 

கிளிநொச்சியில் 60,000 ரூபா இலஞ்சம் பெற்ற இரண்டு வருமான வரி பரிசோதகர்களை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பிரதேச சபையின் அனுமதியின்றி காணியொன்றில் கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற 
முறைப்பாட்டிற்கு சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காகவும் அதனை உடைத்து அகற்றாமல் இருப்பதற்கும் இந்த தொகை கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதற்காக முதலில் 350,000 ரூபா பணம் கோரப்பட்டதாகவும், பின்னர் அது 1 இலட்சமாக குறைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் 
60,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் 
தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி பிரதேசத்தில் பெண் ஒருவர் செய்த 
முறைப்பாட்டின் படி, கரைச்சி பிரதேச சபையின் இரண்டு வருவான வரி பரிசோதகர்கள் குறித்த பெண்ணின் வீட்டிற்கு முன்பாக பணத்தை பெற்றுக்கொண்ட போது இவ்வாறு கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது
 என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 3 செப்டம்பர், 2024

மரண அறிவித்தல் அமரர் செல்லத்துரை சின்னம்மா 03.09.24

துயர் பகிர்வு-- உதிர்வு -04-09-2024
யாழ் தோப்பு  அச்சுவேலியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட
அமரர்  செல்லத்துரை சின்னம்மா  அவர்கள் .03-08-2024.செவாய்க்கிழமை  அன்று இறைவனடி சேந்தார்.
அன்னார் காலம் சென்ற  செல்லத்துரை  தம்பதிகளின் அன்புமகளும் காலம் சென்ற சரஸ்வதி (சீனியம்மா) பாக்கியம் தங்குட்டி  ரத்தினம் சின்னவள் மற்றும் தேவி ஆகியோரின் சகோதரியும் ஆவர் அன்னாரின் இறுதிக்கிரியை 
திகதி-  04-09-2024. புதன்கிழமை  10:00 மு.ப — 11.00 பி.ப.வரை   அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  நல்லடக்கம்
04-08-2024.புதன்கிழமை அன்று 
அன்னாரின் நல்லடக்கம் தோப்பு 
இந்து மயானத்தில் நடை பெறும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
.தகவல் குடும்பத்தினர் 
 ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!


திங்கள், 2 செப்டம்பர், 2024

மரண அறிவித்தல் திருமதி சந்திரசேகரி லீலாவதி 02.09.2024

துயர் பகிர்வு 3-- உதிர்வு -02-09-2024
 சிவன்,அம்மன் வீதி நல்லூர் ,யாழ்ப்பாணதை  பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாக கொண்ட 
 திருமதி  சந்திரசேகரி லீலாவதி அவர்கள்.02-09-2024.அன்று  கனடாவில் இறைபாதம் அடைந்தார் 
அன்னார் காலம் சென்ற திரு திருமதி  இளையதம்பி நாகம்மாதம்பதிகளின் பாசமிகு  மருமகளும் 
சந்திரசேகரி(கனடா)அவர்களின் அன்பு மனைவியும் காலம் சென்ற ராஜரத்தினம் நடேசன் மற்றும் குணம் (தங்கா) (கனடா) புவனேஸ்வரி
(இலங்கை ) ஆகியோரின் மைத்துனியும் 
பிள்ளைகள் கிருஷ்ணவேணி(கனடா),
திருவேணி(கனடா),
பத்மவேணி(கனடா)ஆகியோரின் தாயாரும் 
மருமக்கள் பரணீதரன்( கனடா)
ஸ்ரீரஞ்சன்(கனடா)
கருணதாஸ்(கனடா) சசிலேக்கா ( Sasileka)()இலங்கை  ஆகியோரின்
 மாமியாரும் ஆவர் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல் குடும்பத்தினர்.



ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

யாழ் பலாலி சென்னை இடையே இன்டிகோ ஏயார்லைன்ஸ் விமான சேவை ஆரம்பம்

சென்னைக்கும் பலாலி யாழ்ப்பாணத்திற்குமிடையேயான இண்டிகோ ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய விமான சேவை இன்று ஆரம்பமாகியது. இன்று முதல் தினந்தோறும் சென்னையிலிருந்து யாழ்
 விமான சேவை நடத்தப்படவுள்ளதாக இண்டிகோ ஏயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து பயணத்தை ஆரம்பித்த விமானமானது 52 பயணிகளுடன் இன்று பிற்பகல் 3.07 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இதன்போது இனியம் இசைக்க விருந்தினர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து வருகை தந்த பயணிகள் அழைத்து வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கு ஏற்றல், வரவேற்பு நடனம், நினைவுப் பரிசில்கள் வழங்கல், கேக் வெட்டுதல் மற்றும் விருந்தினர்களின் உரை என்பன இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து குறித்த விமானமானது சென்னை நோக்கி 
பயணத்தை ஆரம்பித்தது.
யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் 74 பயணிகள் சென்னை நோக்கி பயணத்தை மேற்கொண்டனர்.
விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் யாழ்ப்பாண உற்பத்திகளான பனம் பானம் உள்ளிட்ட யாழ்ப்பாண உற்பத்திகள் வழங்கப்பட்டன.
அதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதால், கொழும்பிற்கு செல்லாமல் மிகவும் இலகுவான முறையில் பயணத்தை மேற்கொள்ள கூடியவாறு உள்ளதாக பயணிகள் தெரிவித்தனர்.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்.இந்திய துணை தூதுவர் சாய் முரளி, விமானப்படை அதிகாரிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், பதவிநிலை அதிகாரிகள், பயணிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>