siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

திடீரென அல்ஜீரியாவில் பரவிய காட்டுத் தீ - 37 பேர் உடல் கருகி உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான‌ அல்ஜீரியாவில் ஆண்டுதோறும் காட்டுத்தீ பரவுவது வழக்கம். இதேபோன்று தற்போதும் வடபகுதியில் உள்ள 8 மாகாணங்களில் திடீரென காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இந்த காட்டுத்தீயில் சிக்கி 37 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக உள்துறை மந்திரி கமெல் பெல்ஜாத் கூறியுள்ளார். இந்நிலையில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்புத்துறை வீரர்கள் கடுமையாக
 போராடி வருகின்றனர்.
அதோடு ஹெலிகாப்டர் மூலமாகவும் தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து தீ கட்டுக்குள் வராத காரணத்தினால் நூற்றுக்கணக்கான மக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த காட்டுத்தீயினால் தற்போது வரை 16 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அந்நாட்டு அதிபர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



மரண அறிவித்தல் ஐயம்பிள்ளை சந்திரசேகரம்19.08.2022

தோற்றம் -07-12-1955-மறைவு-19.08.2022
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர் ஐயம்பிள்ளை சந்திரசேகரம்
 ( சந்திரன் )19-08-2022.அன்று  இறைவனடி சேர்ந்தார் அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்புமகனும் காலஞ்சென்றவர்களான துரைராஜா சிதம்பரம்(பூரணம் ) தம்பதிகளின் பாசமிகு மருமகனும் சந்திரசேகரம் கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும் சந்திரசேகரம் பண்ணீர்தாஸ் ((பண்ணீர்)(பிரான்ஸ் )
காலஞ்சென்ற சுகதீபா(தீபா)    மற்றும் டர்சிகா (லண்டன்)  (தரிசி)ஆகியோரின் பாசமிகு தந்தையும் சுகந்தினி (பிரான்ஸ் )  மற்றும் அமரர்  சுரேஸ்குமார் மற்றும் செல்வகுமரன்  (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பாசமிகுமாமனாரும்
 கவிஷன் தஸ்மிகா  அஸ்விகா  ஆகியோரின்
 பாசமிகு பேரனும்   காலஞ்சென்ற பத்மவதி  காலஞ்சென்ற கந்தசாமி )மற்றும் ராசரத்தினம்(ரத்தி) (கனடா ) 
(கனடா ) சண்முகம் (இலங்கை )நல்லம்மா  (அருந்தவம்)(கனடா ) சுப்பையா (ஞான ன்- இலங்கை) பாக்கியம் (பாக்கி இலங்கை)  அகியோரின் அன்புச்சகோதனும் 
காலஞ்சென்ற தங்கரத்தினம் (தங்காள் )மற்றும் பாலையா ( ஓய்வு பெற்ற யாழ் போதனா வையித்தியசாலை ஊழியர் இலங்கை )காலஞ்சென்ற இரத்தினம்(சின்னம்மான்-சின்னண்ணை ககேசன்துறை சீமெந்து தொழில் சாலை முன்னாள் ஊழியர் ) சரஸ்வதி/(கனடா ) தியாகராஜா(தேவன்-ராஜா  சுவிஸ் ) இராசேஸ்வரி (இலங்கை )கணேசலிங்கம் (கனடா ) சந்திரன் (ஜேர்மனி )ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்  .
அன்னாரின் இறுதிக்கிரியை 21-08-2022.ஞாயிற்றுக்கிழமை   
அன்று அவரது இல்லத்தில்
 நடைபெற்று .பின்னர் நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம்  நடைபெறும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
. எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
தகவல் குடும்பத்தினர்
இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


வியாழன், 18 ஆகஸ்ட், 2022

சர்வதேச சந்தையில் குறைவடையும் தங்கம் மற்றும் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் தங்க விலையானது மூன்றாவது நாளாக  1800 டொலர்களாக சரிந்து காணப்படுகின்றது.
இதற்கமைய, தங்கம் விலையானது சற்று குறையலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.
பணவீக்கத்திற்கு எதிராக தங்கம் இருந்து வரும் நிலையில் தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு பெரியளவில் மாற்றமின்றி, 1790.70 டொலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.
டொலரின் மதிப்பு தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் தங்க விலையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளதாகவும் இருப்பினும் மீண்டும் அதிகரிக்கலாம் என்றும்
 கணிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



புதன், 17 ஆகஸ்ட், 2022

கோப்பாய் பகுதியில் நண்பர் வீட்டுக்கு சென்றவர் திடீரென உயிரிழப்பு


யாழ் கோப்பாய் பகுதியை சேர்ந்த நபரொருவர் தனது நண்பனின் வீட்டுக்கு சென்று கதிரையில் அமர்ந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவமானது 16-08-2022. அன்றைய தினம் நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – கோப்பாயை சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஐயர் கணநாதசர்மா (வயது 34) என்பவரே இவ்வாறு
 உயிரிழந்துள்ளார்.
அங்கு கதிரையில் அமர்ந்தவர் சிறிது நேரத்தில் திடீரென மயங்கி விழுந்துள்ளதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட உடல் கூற்று பரிசோதனையின்போது அவர் கையில் ஊசி மூலம் போதை பொருளை செலுத்தியதாலேயே உயிரிழப்பு ஏற்பட்டடுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று மாத கால பகுதிக்குள் 7க்கும் மேற்பட்டவர்கள் போதை பொருளை ஊசி மூலம் செலுத்தியதில் உயிரிழந்துள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

மண்டைதீவு பகுதியில் இடம்பெற்ற சம்பவம் மூவர் வைத்தியசாலையில்

யாழ்.மண்டைதீவு பகுதியில்.16-08-2022. இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சாரதிப் பயிற்சியாளர் உட்பட 3 பேர்
 காயமடைந்துள்ளனர்.
சாரதிப் பயிற்சி வழங்கிக் கொண்டிருந்த ஆட்டோ மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து
 மோதியுள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர், சாரதிப் பயிற்சியாளர் உட்பட 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



திங்கள், 15 ஆகஸ்ட், 2022

கண்டி பிரதான வீதியில் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து

நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பாரிய விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நுவரெலியா பகுதியிலிருந்து லபுக்கலை பகுதியை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் லபுக்கலை மேற்பிரிவு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பயணிகளை ஏற்றிக் கொண்டு லபுக்கலை பகுதி நோக்கி நேற்று மாலை பயணிக்கும் போதே பிரதான வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து ஏற்படும் போது பேருந்தில் 30ற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளதாகவும், விபத்தின் போது, 4 பேர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர் எனவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த 4 பேரும், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தொடர்ந்தும் சிகிச்சை 
பெற்று வருகின்றனர்.
இவ்வாறு காயமடைந்தவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விபத்து தொடர்பில் காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது, பேருந்து சாரதிக்கு வேக கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து நேர்ந்ததாக  
தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு 
வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

உங்ககளுக்கு இல்லற தர்மம் எது என்பது தெரியுமா

கட்டிய மனைவிக்கு துரோகம் செய்யக் கூடாது. கடைசி வரை கட்டிய மனைவியை கண் கலங்காமல் காப்பவன் ஒரு போதும் 
தவம் செய்ய தேவையில்லை.
இருபத்தியொரு வயது வரை அவனவன் சொந்த ஆன்மா கர்ம 
செயலுக்கு வராது.
அந்த ஆன்மாவின் ஸ்தூலத்தை தாய் தந்தை கர்மாவே வழி நடத்தும். 96 தத்துவங்கள் முடிவு பெறுவது 21 வயதிலே.
அதன் பிறகு தான் அவன் சொந்த கர்மா, கர்ம 
செயலில் இறங்கும்.
சிவமாக இருந்தால் மட்டும் சிரசு ஏற முடியாது. சக்தியோடு 
துணை சேர வேண்டும்.
தியான மூலம், பக்தி மூலம், ஞான மூலம், யோக மூலம், தீட்சை மூலம், சிவசக்தி மூலம் என சிரசு ஏற பல
 வழிகள் உள்ளது.
ஆனால், சிறந்த மூலம் இல்லற தர்மம் ஒன்றே. சிவம் பிறக்கையிலே அவனுக்கு முன்பே சக்தி பிறந்து விடுகிறது.
சக்தி மாறி சிவம் சேர்ந்தால் 
பிறவியே சிக்கலே.
உடல் பொருத்தம் பூமியில் ஜெயிப்பதில்லை. ஆன்ம பொருத்தமே
 பிறவியை ஜெயிக்கும்.
அப்பேற்பட்ட சக்தியோடு சிவம் சேரும் போது சர்வமும் சாந்தியாகும்.
சிவசக்தி சங்கமத்தில் ஊடலும் கூடலும் 
உற்சாகம்தானே.
ஆனால் சக்தியின் கண்ணீர் துளிகளுக்கு சிவன் காரணமானால் அதை விட கொடிய கர்மா உலகில் இல்லை.
ஒருவன் வாழ்வை ஜெயிக்க ஆயிரம் வழிகள் தர்மத்தில் உள்ளது.
ஆனால் உறவுகளைக் கொண்டே உலகம் தன்னை வெல்வதும் பிறவிப்பிணி அறுக்கவும் உலகம் அறியாத ஒரு வழி உள்ளது.
சொந்தம் என்பது பழைய பாக்கி என்பதை அறிந்தவனுக்கு சொந்தம் 
ஒரு சுமை இல்லை.
நட்பு என்பது பழைய பாக்கி என்பதை பண்போடு அறிந்தவனுக்கு 
பதற்றம் இல்லை.
எதிரி என்பவன் தன் கர்மாவின் தார்மீக கணக்கே என தனித்தன்மையோடு உணர்ந்தவனுக்கு எதிரி இல்லை.
உனது எதிரியும் நீயே உனது செயலே கர்மாவாகி அந்த கர்மாவே 
நீ எதிரி என நினைக்கும்.
ஒரு உயிருள்ள சடலத்தை உனக்கெதிராக பயன்படுத்துகிறது என நீ உணரும் போது. உன் எதிரி முகத்தில் உனது கர்மா உன் கண்களுக்கு தெரியவந்தால், எதிரி உனக்கு எதிரே இருந்தாலும் கலக்கம் 
தேவைப்படுவதில்லை.
உன்னை உடனிருந்தே கொல்லும் உறவும் உன்னோடு பிறக்கும்
 பழைய கணக்காய்.
பழைய கணக்கு புரிந்தால் பந்தபாசம் சகோதரத்துவம் மீது பற்றற்ற பற்று வைத்து பிறவி கடனை வெல்லலாம்.
கர்மாவின் கணக்கு புரிந்தால் உனக்கு, பக்கத்தில் சரிபாதி அமரும் மனைவி யார் என்று உனக்கு புரியும்.
தாய் தந்தையரை அன்போடு பூஜிப்பவன் தந்தை வழி தாயார் வழி ஏழேழு ஜென்ம கர்மாவில் இருந்து தப்பிக்கலாம்.
உறவுகளுக்கு அவர்கள் தரும் இன்னல்கள் பொறுத்து உபகாரமாக உதவி வந்தால் எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் 
உனது ஏழேழு ஜென்மத்து சமுதாய கர்மாவில் இருந்து தப்பிக்கலாம்.
கோவில்கள் செல்வதாலோ குடந்தை சென்று மகாமக திருக்குளத்தில் புண்ய நீராடுவதாலோ உன் வாழ்க்கையில் ஒன்றும் மாறாது சிறிது காலம் சிறு இன்பம் மட்டும் கிடைக்கும்.
ஆனால் ஒரேயொரு உறவை நீ பூஜித்தால் பிறவிப்பிணி இன்னல்
 மொத்தமாய் தீரும்.
அது அந்த புனிதமான உறவு உன் அன்பு மனைவியே.
உலகிலேயே மனைவியை மகிழ்ச்சியாக வைப்பது சிரமம்
 மட்டும் அல்ல.
அதுதான் உலகிலேயே தலைசிறந்த தவம். தவம் என்பது 
சாமான்யர்களுக்கு சிரமமே
தாலி கட்டிய மனைவியையும் உன் மூலம் அவள் பெற்ற பிள்ளைகளையும் உளமார நேசித்து உன்னதமாக உனது வாழ்வை ஆனந்தமாக நீ அர்ப்பணித்தால் அதுவே உலகின் தலைசிறந்த தர்மம் 
சிறந்த தவம் ஆகும்.
தினமும் தன் தாய் தந்தையரை வணங்குபவன் பித்ரு தோஷம் நீங்க இராமேஸ்வரம் போக தேவையில்லை.
தன் உற்றார் உறவினர்களை மதிப்பவன் கிரகதோஷம் நீங்க திருவண்ணாமலை சென்று இடைக்காடரை தேட தேவையில்லை. நவக்கிரகங்களையும் சுற்ற தேவையில்லை.
கட்டிய மனைவியை அவள் மூலம் பெற்றெடுத்த குழந்தைகளை அன்போடு நேசிப்பவன், அவர்களை ஒரு கஷ்டமும் இல்லாமல் ஆனந்தமாக வைத்திருப்பவன், கர்ம விமோசனம் தேடி பாபநாசம் சென்று அகத்திய முனிவரை தேட தேவையில்லை.
இதற்காகத்தான் நமது முப்பாட்டன், இல்லற வாழ்க்கை மூலம் அமைத்தான் ஆதியோக வம்சம்.
மனைவி அழும் இல்லம் நரகம், மனைவி சிரிக்கும் இல்லம் சொர்க்கம். உன் இல்லம் நரகமா? சொர்க்கமா? என்பதை நீதான் 
தீர்மானிக்க வேண்டும்.
சக்தியை உணர்ந்தாலே போதும் அங்கு 
சிவம் ஜோதியாக ஜொலிக்கும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


சனி, 13 ஆகஸ்ட், 2022

மரண அறிவித்தல்அமரர் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் ( வெடிமான்)13 08 22


மறைவு-13 08 2022.
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம்
 ( வெடிமான்) 13/08/2022.அன்று  இறைவனடி சேர்ந்தார் அன்னார், காலஞ்சென்றவர்களானகணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புமகனும் ஆவர் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-08-2022.சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில்
  அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம்  நடைபெற்றது 
தகவல் குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

அந்தியேட்டி கிரியை 31ம் நாள் திருமதி குணரத்தினம்.கமலராணி (ராணி )13.08.2

தோற்றம் -23-03-1959-மறைவு 14--07-2022.
யாழ் துணுக்காயை  பிறப்பிடமகவும் யாழ் , புத்தூரை வாழ்விடமாகவும்  நவற்கிரியில் வசித்தவரும் தற்போது  சுவிஸ் பேர்ண்னில் வசித்து வந்த திருமதி ,குணரத்தினம்(ராணி)  அவர்களின் அந்தியேட்டி கிரியை 31ம் நாள் 
13-08-2022.சனிக்கிழமை  அன்று   அன்னார் திரு குணரத்தினம்(குணம் ) அவர்களின்  பாசமிகு மனைவியும்
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வீரகத்தி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,றஜிதா, சஜிதா, விஜிதா ஆகியோரின்
 பாசமிகு தாயாரும்,ஆவார் அன்னாரின் ஆத்மா சாந்திப்பிரத்தனை   நிகழ்வுகள் 13,10,2022,சனிக்கிழமை  அன்று  பிற்பகல்,12,மணிஅளவில் சுவிஸ் பேர்ண் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர்  ஆலய மண்டபத்தில் நடைபெறும்   அன்னாரின்   ஆத்மா சாந்திப்பிரத்தனையிலும்  அதனைத்   தொடர்ந்து நடைபெறும் 
மதியபோசன நிகழ்விலும்  கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்
 இங்கனம் -குடும்பத்தினர் 
எமக்கு ஆறுதல் கூறி உறுதுணையாக
 இருந்தவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தோர்களுக்கும் அன்புத் தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடிவந்தவர்களுக்கும் அயல் ஊரில் இருந்து வந்தவர்களுக்கும்,
 தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
 கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள்
31ம் நாள் அந்தியேட்டி கிரியை.13-08-2022..சனிக்கிழமை  அன்று 
>>>>> 
அம்மா -அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்தவரே
அன்பின் விருட்சமாகி எமக்கெல்லாம் நிழலாக
நின்று கருணை மழை பொழிந்து கண்ணயராது
எமையெல்லாம் காத்து, வளர்த்து வாழ்வழித்து
கலங்கரை விளக்காய் வாழ்க்கை என்னும் 
ஓடத்திற்கு ஒளி காட்டி வழிகாட்டி
சீரும் சிறப்புமாக வாழ வைத்த எம் அன்னையே! 
குணம் என்னும் குன்றேறி நின்று எம்மை 
மகிழ்ச்சி யென்னும் மாகடலில்
திழைக்க வைத்த எங்கள் மாமியே!
கட்டியணைத்து முத்தமிட்டு பேரன்புடன்
எமையெல்லாம் வளர்த்தெடுத்த எங்கள் பாட்டியே!
 நீங்கள் தந்த அன்பு பாசம் எல்லாம் சரித்திரத்தில்
மாறாத நினைவுகளோடு நாமும் வாழ்வோம்,
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டும் 
கணவர் பிள்ளைகள், சகோதரர்கள் மருமக்கள் , 
பெறாமக்கள், பேரப்பிள்ளைகள், 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனை பிரார்த்திக்கின்றோம்
தகவல்-
குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

மூளாய் , முன்கோடை பகுதியில் பசு மாட்டுக்கு இடம்பெற்ற கொடூர சம்பவம்

யாழ் -வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்டபகுதியில் மேய்ச்சலுக்கு கட்டப்பட்டிருந்த பசு மாடொன்றின் கால் ஒன்றினை விஷமிகள் துண்டாடியதுடன், மற்றுமொரு காலிலும் காயத்தை 
ஏற்படுத்தியுள்ளனர்.
மூளாய் , முன்கோடை பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது வாழ்வாதாரத்திற்காக பசு மாடுகளை வளர்த்து வருகின்றார்.
அந்நிலையில் வழமை போன்று தனது பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் பசுவை மேய்ச்சலுக்காக கட்டியுள்ளார்.
மாடுகளை அவிழ்க்க சென்ற போது பசுவின் கால் ஒன்று துண்டாடப்பட்ட நிலையில் மற்றுமொரு காலில் காயம் ஏற்படும் வகையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் மாடு கிடந்துள்ளது.
அதனை அங்கிருந்து மீட்ட போதிலும் மாடு வலியினால் உணவு
 உட்கொள்ளாது இருக்கின்றது.
இது தொடர்பில் வட்டுக்கோட்டை கால் நடை வைத்திய அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் மாட்டின் உரிமையாளர் முறைப்பாடு 
அளித்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை 
முன்னெடுத்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

பொக்குண சந்தியில் பாடசாலை மாணவன் கார் மோதி உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை மலமுல்ல பொக்குண சந்தியில் துவிச்சக்கரவண்டியை நிறுத்திக்கொண்டிருந்த 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் இன்று (11) கார் மோதியதில் பரிதாபமாக
 உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பாணந்துறை பின்வல பகுதியைச் சேர்ந்த விஹாகா சதேவ் டி சில்வா என்ற 14 வயதுடைய பாடசாலை மாணவனே உ
யிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவன் பாணந்துறை ராஜகீய வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி கற்று வருவதாக பொலிஸார் 
தெரிவித்தனர்.
மாணவன் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மாலமுல்ல கிராமிய வங்கிக்கு முன்பாக உள்ள வீதிக்கு அருகில் தனது துவிச்சக்கர வண்டியை நிறுத்திய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற , ‘எல்’ அட்டை பொருத்தப்பட்ட காரே வீதியை விட்டு விலகி, மாணவனின் மீது மோதியது.
விபத்தில் படுகாயமடைந்த மாணவன் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




புதன், 10 ஆகஸ்ட், 2022

இலங்கையில் மண்ணெண்ணெய் நெருக்கடிக்கு கிட்டியது தீர்வு அமைச்சர் தகவல்

மண்ணெண்ணெய் விநியோகம் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் தொடரும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர 
தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் தலைமையில் இன்று(10) நாடாளுமன்ற கூடிய போது மண்ணெண்ணெய் விநியோகம் தொடர்பில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி முன்வைத்த கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் பதில் வழங்கிய அவர்,
“சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதால் கடற்றொழிலாளர்கள், குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மண்ணெண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
புத்தளம், தங்காலை, கிரிந்திவெல ஆகிய பகுதிகளில் கடற்றொழிலாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மண்ணெண்ணெய்
 விநியோகிக்கப்பட்டுள்ளது.
மசகு எண்ணெய் கப்பல் எதிர்வரும் 13 ஆம் திகதி நாட்டை வந்தடையும். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 15 ஆம் திகதி திறக்கப்பட்டு 19 ஆம் திகதி முதல் மண்ணெண்ணெய் விநியோகம் வழமை போல் முன்னெடுக்கப்படும்.
கடற்றொழிலாளர்கள், குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற காரணத்தினால் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 87 ரூபாவிற்கு வழங்கப்படுகிறது.
ஒரு சில பேருந்து உரிமையாளர்கள் டீசலுக்கு பதிலான மண்ணெண்ணெயை பயன்படுத்துகிறார்கள்.எதிர்வரும் நாட்களில் மண்ணெண்ணெய் விலை திருத்தம் செய்யப்படும்” என்றார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




செவ்வாய், 9 ஆகஸ்ட், 2022

இலங்கையில் மின்சாரக் கட்டணம் 75 சதவீதத்தினால் அதிகரிப்பு

நாட்டில்  மின்சார கட்டணத்தை பாரியளவு அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75 சதவீதம் அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி 
வழங்கியுள்ளது.
நாளைய தினம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த மின்கட்டண அதிகரிப்பிற்கான அனுமதி மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
பல தடவைகள் கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளை பரிசீலித்து இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 
அறிவித்துள்ளது.
மேலும் 2013ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல்தடவையாக இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் தேசியத்தமிழ்.இணையச்செய்திகள் >>>



திங்கள், 8 ஆகஸ்ட், 2022

இலங்கையில் இங்கிலாந்துப் பெண்ணுக்கு அவர் வசித்த வீட்டில் நேர்ந்த சம்பவம்

இலங்கையில் வசித்த இங்கிலாந்து பிரஜை ஒருவர் தம்மை தாமே மாய்த்து கொண்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
52 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததோடு மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.
இதன்போது ஹபராதுவ பகுதியில் அவர் வசித்த வீட்டிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவர் உயிரிழப்பதற்கு முன்பாக தமது சொத்துக்கள் தொடர்பில் எழுதிய பல கடிதங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.



இங்குஅழுத்தவும் தேசியத்தமிழ்.இணையச்செய்திகள் >>>



ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

நவகமுவ பொலிஸ் நிலையத்திற்குள்ளே குத்திக் கொல்லப்பட்ட நபர்

கொழும்புக்கு அருகில் நவகமுவ பொலிஸ் நிலையத்திற்குள் கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டை இன்று முற்பகல் விசாரித்துக்கொண்டிருந்த போது, இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் 
தெரிவித்துள்ளது.
பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாட்டின் பிரதிவாதி ஒருவரும், மற்றுமொரு நபரும் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் மற்றைய நபர் பிரதிவாதியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
சம்பவத்தில் 52 வயதான நபரே கொல்லப்பட்டுள்ளார். கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து நவகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை
 நடத்தி வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



சனி, 6 ஆகஸ்ட், 2022

சீரற்ற காலநிலையால் நாட்டின் 10 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 10 மாவட்டங்களைச் சேரந்த 65 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 
தெரிவித்துள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விடுக்கப்படும் ஆலோசனைகளை பின்பற்றி நடக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்தங்கள் ஏதும் நிகழுமாயின் 117 என்ற துரித இலக்கத்தத்தினூடாக குறித்த நிலையத்திற்கு அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

அளவிற்கு அதிகமாக யாழில் ஆசைப்பட்ட நபருக்கு நேர்ந்த நிலை

யாழ்ப்பாணத்தில் அரிசியின் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த இரு வர்த்தகர்களுக்கும்,சமையல் எரிவாயு சிலிண்டரை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவருக்கும் தண்டம் 
அறவிடப்பட்டுள்ளது.
குறித்த மூன்று வர்த்தகர்களும் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புகொண்டமையை அடுத்து மூவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் 
அறவிடப்பட்டுள்ளது.
மாவட்ட பாவனையாளர் அதிகாரசபையினருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை 
  05-07-2022.அன்று .நடாத்தப்பட்டது.
இதன் போது பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்த மூன்று வர்த்தகர்கள் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

வியாழன், 4 ஆகஸ்ட், 2022

இலங்கையில் ஒமைக்ரொன் திரிபு தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் ஒமைக்ரோன் திரிபுடன் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன
 தெரிவித்துள்ளார்.
நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக, மரண வீதமும் அதிகரித்துள்ளது. எனவே மக்கள் வெளியில் செல்லும் போதும், பொதுப்போக்குவரத்தினை பயன்படுத்தும் போதும் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் கோரிக்கை
 விடுத்துள்ளார்.
அத்துடன், மாணவர்களுக்கு நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்களை பாடசாலைக்கு அனுப்பாது, உரிய வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




புதன், 3 ஆகஸ்ட், 2022

எளிதாக்கிடைக்கும் கொய்யா பழத்தில் இத்தனை சத்துக்கள் உள்ளதா

கொய்யா பழத்தில் விட்டமின் சி, விட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பொஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும். கண் பார்வை கோளாறுகளை சரி செய்கிறது.
கொய்யா பழத்தில் செம்பு சத்து அதிகம் உள்ளது. செம்பு சத்து தைரொய்ட் சுரப்பியை மற்றும் அது சுரக்கும் ஹார்மோன்களின் சமசீர் தன்மையை மேம்படுத்தி உடல் நலத்தை பாதுகாக்கிறது.
தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தினம் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது. .
கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும். கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துகள் உள்ளன. இதனால் தோலை நீக்கிச் சாப்பிடக் கூடாது.
தினந்தோறும் காலை அல்லது மதியத்தில் ஒரு கொய்யா பழம் சாப்பிடுவது மலச்சிக்கல் பிரச்னையை விரைவில் தீர்க்கும். அல்சர், குடல்களில் ஏற்படும் புண்களையும் ஆற்றும் தன்மை கொண்டது கொய்யா பழம்.
வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுப்பெறும். ஜீரணக் கோளாறுகளைக் 
குணப்படுத்துகிறது.
 இரத்தத்தில் இருக்கும் உடலுக்கு கேடு விளைவிக்கும் நச்சுகளை அகற்றி ரத்தத்தை சுத்தப் படுத்துகிறது. இதனால் இரத்த ஓட்டம் சீராகி இரத்தத்தின் 
அளவு அதிகரிக்கிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

இலங்கையில் கோதுமை மாவுக்கு கடுமையான தட்டுப்பாடு

நாட்டில் கடுமையான கோதுமை மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கு கோதுமை மா பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது கோதுமை மாவுக்கு கடுமையான தட்டுப்பாடு 
நிலவுவதாக கூறப்படுகின்றது.
எரிபொருள் நெருக்கடியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு 50 கிலோகிராம் கோதுமை மா மூடையை கொண்டு செல்லும் போது ஒரு மூடைக்கு 300 ரூபா மேலதிகமாக அறவிடப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
திருகோணமலையில் இருந்து மருதானைக்கு கடந்த காலங்களில் தொடருந்தில் கோதுமை மா கொண்டு செல்லப்பட்டதாகவும், தற்போது தொடருந்தில் கோதுமை மா கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


திங்கள், 1 ஆகஸ்ட், 2022

இந்தியாவில் குரங்கு அம்மையால் முதல் மரணம் பதிவு

இந்தியாவில் மங்கி பொக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோயால் முதலாவது உயிர் பறிபோயுள்ளது.
இதில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து கேரளாவின் - திருச்சூர் பகுதிக்கு பிரவேசித்திருந்த 22 வயதான இளைஞர் நோய் அறிகுறிகள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனையில் அவருக்கு குரங்கு அம்மை தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கேரள சுகாதார அமைச்சர் 
அறிவித்துள்ளார். 

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>