siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 11 ஜனவரி, 2024

மரண அறிவித்தல் திரு.சுப்பிரமணியம் கணேசதாஸ் (தாஸ்) 10.01.24

துயர் பகிர்வு உதிர்வு -10-01-2024
யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட  திரு.சுப்பிரமணியம்  கணேசதாஸ் (தாஸ்) 10-01-2024 .அன்று கொழும்பில் இறைவனடி சேந்தார். 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல் குடும்பத்தினர் 

புதன், 10 ஜனவரி, 2024

நாட்டில் மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேசத்தில் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள்

மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல்வேறு தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் 
மூழ்கியுள்ளன.  
இதன் அடிப்படையில் ஓட்டமாவடி பதுரியா நகர், மாஞ்சோலை ஆகிய கிராமங்களின் எல்லைப்பகுதிகள் பெருமளவிலும் மாஞ்சோலை அல்-ஹிரா வித்தியாலம், லெப்பை தம்பி சிறுவர் பூங்கா,குளக்கரை
 பள்ளிவாயல் வளாகம் வெள்ளத்தில்மூழ்கியுள்ளதுடன் மக்களின் வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர்
இதனால் மக்கள் பெரும் அசோகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவ் வெள்ளநீரினை அகற்றும் பணிகள் அக் கிராமங்களில் இன்று (10.01) அதிகாலை முதல் மாஞ்சோலை ஹிழுரிய்யா ஜும்ஆப்பள்ளி வாயலின் ஒத்துழைப்புடன் அக்கிராம சிவில் சமூக அமைப்புக்களினால் கிராம சேவையாளர்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  
வெள்ள அனர்த்ததினால் பாதிப்புற்றுள்ள நிலையில் பொது இடங்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கான சமைத்த உணவுகள் நலன் விரும்பிகளால் வழங்கும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறமை என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




செவ்வாய், 9 ஜனவரி, 2024

மீண்டும் ஜப்பானில் உள்ள ஹோன்சு நகரின் மேற்கு கடற்கரை பகுதியில் பாரிய நிலநடுக்கம்

புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் மேற்கு கடற்கரை பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. 
அவற்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவானது. குறித்த நிலநடுக்கத்தால் இதுவரை 161 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறான நிலையில், ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ஜப்பானில் உள்ள ஹோன்சு நகரின் மேற்கு கடற்கரை பகுதியில் 46 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்று இதுவரை தகவல் கிடைக்கவில்லை. மேலும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. என தகவல் வெளியாகியுள்ளது.என்பதாகும் 





 

திங்கள், 8 ஜனவரி, 2024

புராதன மனித எச்சங்கள் கனடாவில் மீட்கப்பட்டுள்ளன

https:/மனித உடல் பாகங்கள் மீட்பு தொடர்பில் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பரிசோனைக்கு உட்படுத்திய தொல்லியல் ஆய்வாளாகள் இவை புராதன காலத்து மனித எச்சங்கள் என கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வுப் பணிகளுக்காக கட்டின நிர்மான நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த மனித உடல் பாகங்கள் மீட்கப்பட்ட பகுதி கனடிய பழங்குடியின மக்களின் புதைகுழிகளாக இருக்கக் கூடும் என தொல்லியல் ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது



ஞாயிறு, 7 ஜனவரி, 2024

மரண அறிவித்தல் அமரர் இளையதம்பி சுப்பிரமணியம் ( CTB மணியம்)

துயர் பகிர்வு உதிர்வு -06-01-2024
யாழ். ஆவரங்கால் 10 ம் கட்டையடியை பிறப்பிடமாகவும். கனடாவில் வாழ்ந்தவரும் தற்போது ஆவரங்காலில் வசித்து வந்தவருமான. 
அமரர்  இளையதம்பி சுப்பிரமணியம் ( CTB மணியம்)
    அவர்கள் 06/01/24 இன்று சனிக்கிழமை இறைபாதம் அடைந்தார்
அன்னார். திரு திருமதி. இளையதம்பி தம்பதியரின் அன்பு மகனும். 
இரத்தினேஸ்வரி யின் அன்புக் கணவரும்
ஶ்ரீ,சிவா,ரஜனி,மஞ்சு,ராசாத்தி,குமார்,கவி ஆகியோரின்   
பாசமிகு தந்தையும் ஆவார். 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
வீட்டுமுகவரி  
 ஆவரங்கால் 10 ம் கட்டை புத்தூர் 
தகவல் குடும்பத்தினர் 


சனி, 6 ஜனவரி, 2024

அமெரிக்காவில் மருந்துக்கு பதிலாக நீரை செலுத்திய செவிலியர் பத்து பேர் மரணம்

அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் மெட்போர்டு நகரில் அசாந்தே ரோக் மண்டல மருத்துவ மையம் அமைந்துள்ளது. இதில், கடந்த 2022-ம் ஆண்டு இறுதியில் இருந்து 10 பேர் அடுத்தடுத்து திடீரென மரணம் 
அடைந்தனர்.
இதில் அந்த மருத்துவமனையின் முன்னாள் ஊழியர் ஒருவர் மருந்துகளை திருடியிருக்க கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவமனை அதிகாரிகள் கடந்த மாதம் போலீசில் புகார் அளித்தனர்.
இதுபற்றி நடந்த விசாரணையில், சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு கிருமி நீக்கம் செய்யப்படாத குழாய் நீரை அந்த நர்ஸ் கொடுத்த 
திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. இதனை அவரே ஒப்பு
 கொண்டிருக்கிறார். 
அதிலும், வலி நிவாரணியாக உள்ள பென்டனைல் மருந்துக்கு பதிலாக குழாய் நீர் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில், உயிரிழந்த 10 பேரில் ஆலிசன் (வயது 36), சாம்ஸ்டன் (வயது 74) ஆகியோரின் குடும்பத்தினர் மருத்துவ அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளனர்.
அவர்கள், வலி நிவாரண மருந்துக்கு பதிலாக, குழாய் நீரை பயன்படுத்தியதன் விளைவாக தொற்று பாதித்து, உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன என தெரிவித்திருக்கின்றனர். 
இதுபற்றி மெட்போர்டு காவல் துறையின் அதிகாரி ஜெப் கிர்க்பேட்ரிக் கூறும்போது, நோயாளிகள் நலனுக்கு எதிராக செயல்பட்ட அணுகுமுறை கவனத்தில் கொள்ள கூடியது. எனினும், நோயாளிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பின் நீட்சியை பற்றி இன்னும் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டியுள்ளது என கூறியுள்ளார். 
இந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட கைது நடவடிக்கை பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.என்பதாகும் 




 

வெள்ளி, 5 ஜனவரி, 2024

நாட்டில் மின்சார கட்டண மாற்றம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு


நாட்டில்பொது மக்களுக்கான மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான தரவுகளை மின்சார சபை ஏற்கனவே பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக அருந்திக 
தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான அடிப்படை வேலைகள் அதாவது விலை திருத்தம் அடுத்த மாதம் ஆரம்பத்திற்கு முன்னர் கொண்டு வரப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அருந்திக 
மேலும் தெரிவித்தார்.
"எனக்கு சதவீதத்தை இங்கு சொல்ல முடியாது. பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுதான் அதற்கு முழுப் பொறுப்பு. 
நாம் காட்டும் இலக்கத்துக்கும் அவர்கள் காட்டும் இலக்கத்திற்கும் 
இடையில் முரண்பாடுகள் இருந்தால், அது ஒரு 
பிரச்சனையாகிவிடும். விலையை குறைத்து வெயில் காலத்தில் மீண்டும் அதிகரிப்பது எமது நோக்கமில்லை. 
இதனை தொடர்ச்சியாக கொண்டு செல்வதே எமது திட்டம். பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு சுமார் 20 நாட்களாக நாங்கள் வழங்கிய தரவுகளை 
சரிபார்த்து வருகிறது. 
எனவே, அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு முன் விலை திருத்தத்தை வழங்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 4 ஜனவரி, 2024

அமரர் தம்பு. துரைராஜாவின் 21ம் ஆண்டு நீங்காத நினைவுகள் மற்றும் மூவர் து-சிதம்பரம்.து.தங்கரத்தினம். இ .கனகசபாபதி 04.01.2024

 

மலர்வு .15-.04-1926. உதிர்வு .14-01.2004
திதி -04-01-2024.
யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமா​வும் வசிப்பிடமா​கவும் மாகக் கொண்ட
அமரர் ,தம்பு துரைராஜா.அமரர் துரைராஜா-சிதம்பரம். (பூரணம்பிறப்பிடம் மறுவன் புலம்,).அமரர் துரைராஜா தங்கரத்தினம்.
தோற்றம் 06-05-1949-மறைவு-23-01-2004.(தங்காள்பிறப்பிடம் நவற்கிரி . ) அமரர் இராசையா கனகசபாபதி.தோற்றம் 01-04-1949- (தேவர் பிறப்பிடம் கோண்டாவில்) .வாழ்ந்த இடம்நவற்கிரி.)அகியோரின் 
திதி -04-01-2024.. வியாழக்கிழமை  இன்று
 இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
>>>>>>>>>>
 நீங்காத நினைவுடன் இருபத்தி ஓராவது ஆண்டு நினைவஞ்சலி
ஆண்டுகளாய்
வளர்ந்து நிற்பது உங்கள் பிரிவின் சோகம்
எம் இதயம் கவர்ந்த செல்வங்களே  ஏன் - இந்த
உலகம் கடந்து சென்றீர்கள்
அனைவராலும் ஐயா தாத்தா என அழைக்கபட உங்கள்
நீங்காத நினைவுகளுடன்
இருபத்தி ஓராவது ஆண்டுகளல்ல இன்னும் ஓராயிரம் ஆண்டுகள்
நாம் வாழ்ந்தாலும்..
வாழும் காலமெல்லாம் உன் பிரிவின் ஏக்கம் தொடரும்…
நினைவு அஞ்சலி
காலங்கள் கடந்தாலும்
ஆண்டுகள் சென்றாலும்
எங்கள் மனதில்
என்றும் நிலைத்திருப்பாய்
அன்பின் அடையாளமாக
அறத்தின் புதல்வனாக
தர்மத்தின் தலைவனாக
காலத்தை வென்ற தலைமகனாக
தம்பு- மாணிக்கத்தின்
அன்பில் சிவமாக
என்றும் எங்களில்
வாழ்கிறீர்கள் அன்பின்ஐயா
என்றென்றும் எங்கள் தெய்வம் நீங்கள்
…அன்பும் ஆற்றலும்
பண்பும் பாசமும்
உறுதியும் உன்னதமும்
உண்மையும் உழைப்பும்
உற்ற தோழமையும்
இனிக்கும் இன்முகமும்
கொண்ட ஈடுஇணையற்ற
எங்கள் தந்தையே !
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டுகிறோம் ஐயா
ஓம் சாந்தி சாந்தி சாந்தி,,,
உங்கள் பிரிவால் என்றும் வாடும்
அன்புப் பிள்ளைகள் , பிள்ளைகள்,
சகோதர்கள் மருமக்கள்
பேரப்பிள்ளைகள் புட்டப்பிள்ளைகள்
உற்றார், உறவினர்கள், நண்பர்கள்
 வீட்டு முகவரி: 
நவற்கிரி புத்தூர் 
யாழ்ப்பாணம்.
தகவல்:,குடும்பத்தினர்.
எங்கள் அம்மாவே ஆண்டுகள் பல கடந்தும் 
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை..அன்பையும் பண்பையும் பொழிந்த நீங்கள்
ஒரு நொடியில் மறைந்ததேன்?
இனி எப்போது எம் முகம் பார்ப்பாய்?
 உன் புன்முகம் பார்க்க
ஏங்கித் தவிக்கின்றோம்!
தினம் ஒரு சந்தோசம் தந்தீர்கள்
இன்று தினம் தினமாய் உங்களுக்காய் அழுகின்றோம்...உங்கள் இழப்பை எண்ணியெண்ணி
இன்றும் எங்கள் விழிகளில் வழிகின்றதே
 கண்ணீர்த்துளிகள்...உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி  சாந்தி சாந்தி
வீட்டு முகவரி: 
நவற்கிரி புத்தூர் 
யாழ்ப்பாணம்.
தகவல்:,குடும்பத்தினர்
>>>>>>>>
 அமரர் இராசையா கனகசபாபதி.தோற்றம் 01-04-1949- (தேவர் பிறப்பிடம் கோண்டாவில் ).வாழ்ந்த இடம்நவற்கிரி.)
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில் நடந்ததென்ன
நினைத்து பார்க்கு முன்னே நினைக்காமல் போனதென்னநிஜம்தானா என்று நினைக்கின்றோம் தினமும்
திக்கற்று தவிக்கின்றோம் திரும்பி வரமாட்டிரேஎங்கள் இதயதுடிப்பில் அன்பு கொண்ட உம் முகம்
அருகினில் இருப்பது போல் உணர்கின்றோம் அன்பிற்கு இலக்கணமாக இருந்த எங்கள் அப்பாவே 
ஆயிரம் உறவுகள் அணைத்திட இருந்தாலும்
உம்மை போன்று அன்பு காட்ட யாரும் இல்லையம்மா...அன்பால் என்றும் எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் நீங்காது உங்கள் நினைவு
எம் நெஞ்சைவிட்டு...உங்கள் ஆத்ம சாந்திக்காக
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி  சாந்தி சாந்தி
வீட்டு முகவரி: 
நவற்கிரி புத்தூர் 
யாழ்ப்பாணம்.
தகவல்:,குடும்பத்தினர்
>>>>>>
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
உங்கள் அரவணைப்பில்
இல்லறம் வாழ்ந்திருந்தோம்
இன்று நாம் தவிக்கின்றோம்
 நீங்கள் இன்றிஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து வழிகாட்டி
 வளர்த்தீர்கள்!எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
 உன் நினைவு எமை விட்டு அகலாது நாங்கள் உன்னை மறந்தால்
 தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் எண்கள் அக்காவே!!!உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டுகிறோம் அக்கா
ஓம் சாந்தி  சாந்தி சாந்தி,,,
உங்கள் பிரிவால் என்றும் வாடும்
அன்புச் சகோதர்கள் மருமக்கள்
பெறாமக்கள் 
பேரப்பிள்ளைகள் 
உற்றார், உறவினர்கள், நண்பர்கள்
வீட்டு முகவரி: 
நவற்கிரி புத்தூர் 
யாழ்ப்பாணம்.
தகவல்:,குடும்பத்தினர்
>>>>>>>>






புதன், 3 ஜனவரி, 2024

நிலநடுக்கதால் ஜப்பானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அறுபத்தி இரண்டாக உயர்வு

ஆங்கில புத்தாண்டு தினத்தில் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் மிக கடுமையான நிலநடுக்கம் ஜப்பானை ஒருவழியாக்கியது. ஜப்பானில் ஜனவரி 1-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 
7.5 ஆக பதிவானது. 
இதன் காரணமாக அந்நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் சுனாமி அலைகளால் ஊருக்குள் கடல் நீர் புகுந்தது.
இந்த நிலையில், ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக
 அந்நாட்டின் நிலப்பரப்பு மேற்கு நோக்கி 130 செ.மீ. வரை 
நகர்ந்து இருக்கிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் நிலப்பரப்பு ஒரு மீட்டருக்கும் அதிகமாக  நகர்ந்து இருக்கிறது.
 மேலும் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 62 ஆக அதிகரித்து இருக்கிறது. 
மேலும் 300-க்கும் அதிகமானோருக்கு காயங்களும், 20 பேருக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி
 வருகின்றன. 
இதுவரை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 31 ஆயிரத்து 800 பேர் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.என்பதாகும் 



செவ்வாய், 2 ஜனவரி, 2024

இரு விமானங்கள் ஜப்பானில் மோதி பாரிய விபத்து : ஐந்து பேர் பலி

ஜப்பானில் உள்ள ஹனேடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிக் கொண்டிருந்த விமானம் மீது கடலோரக் காவல்படை விமானம் மோதியதில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 
இதில்5 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  
எவ்வாறாயினும், விபத்தில் சிக்கிய கடலோரக் காவல்படை விமானத்தின் விமானி தனது உயிரைக் காப்பாற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
இதற்கிடையில், ஹொக்கைடோவில் இருந்து வந்த ஜேஏஎல் 516 பயணிகள் விமானம் விமானத்தின் மீது மோதியதில் 379 பயணிகளின் உயிரை மீட்புக் குழுவினர் காப்பாற்றியுள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது 




திங்கள், 1 ஜனவரி, 2024

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் மீனவரின் வாடி தீயிட்டு எரிப்பு


$

யாழ்வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் மீனவர் ஒருவரின் வாடி தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
புதுவருடக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்கள்.01-01-2024. இன்று  மாலை 04.30 மணியளவில் குறித்த வாடி எரிவதைக் கண்டு கடற்கரையை நோக்கி விரைந்து தீயை அணைக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.
செல்வரத்தினம்-சுதர்சன் என்னும் குடும்பஸ்தருடைய வாடியே எரிக்கப்பட்டுள்ளதோடு பத்து இலட்சம் பெறுமதியான வலைகளும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ¨
முன்பகை காரணமாகவே சந்தேக நபர் தனது வாடியை 
கொழுத்தியதாகவும் சந்தேக நபர் மருதங்கேணி
 பொலிசில் ஏற்கனவே முறைப்பாடு அளித்தும் பொலிசார் அவரை விடுவித்ததாகவும் பாதிக்கப்பட்ட நபர் குற்றம்
 சாட்டியுள்ளார்.
ஆலயத்தில் லொத்தர் போடப்பட்டு இந்த வருட நாள் தொழிலைக் குறித்த குடும்பஸ்தரே மேற்கொண்ட  நிலையில் அவருடைய வாடி
 தீயிடப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு அருட்தந்தை அமல்ராஜ் அடிகளார் வருகை தந்ததோடு கட்டைக்காடு கடற்றொழிலாளர் சங்கமும் சம்பவத்தை நேரில் பார்வையிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசில் முறைப்பாடு அளிக்கப்படவுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது 


   


 



 

ஞாயிறு, 31 டிசம்பர், 2023

ஐக்கிய அரபு இராஜ்ஜியம் இலங்கை கைதிகளுக்கு அரச மன்னிப்பு வழங்கியது

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) முழுவதும் வெவ்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 44 இலங்கையர்களுக்கு அரச கட்டளையினால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 52வது தேசிய தினமான டிசம்பர் 02 ஆம் திகதி அனுசரிக்கப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 52 வது தேசிய
 தினத்தின் போது இந்த இலங்கை கைதிகள் அரச உத்தரவின் மூலம் மன்னிப்பு பெற்றதாக அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு 
ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க COP28 இல் கலந்துகொள்வதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அண்மையில் விஜயம் செய்ததன் பின்னணியிலும், இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளின் பின்னணியிலும் இலங்கை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது இந்த நட்புறவுகளை மேலும் வலுப்படுத்த உதவும் என அபுதாபியில் உள்ள
 இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச மன்னிப்பைப் பெற்ற இந்த 44 இலங்கையர்களும் உரிய நேரத்தில் ஐக்கிய அரபு அமீரக அரசால் இலங்கைக்குத் திருப்பி
 அனுப்பப்படுவார்கள்.
 அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்க அதிகாரிகள் மற்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து அவர்களைப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்புவதை 
உறுதிசெய்யும்.
அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதுவர் உதய இந்திரரத்னே, இந்த இலங்கையர்களுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததற்காக ஐக்கிய அரபு அமீரக அரசு மற்றும் அதன் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவித்தார்
..என்பதும் குறிப்பிடத்தக்கது





 

சனி, 30 டிசம்பர், 2023

கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த தாய் இரண்டாவது குழந்தை பிறந்து சில நாட்களில் உயிரிழந்தார்

கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாய்,இரண்டாவது குழந்தை பிறந்து சில நாட்களில்
 உயிரிழந்துள்ளார்.
குழந்தை பிறந்து சில நாட்களில் இளம் தாய் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி தனுஷா வயது 33 என்ற இரண்டு பிள்ளைகளின் தாயார் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 சடலம் உடல் கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 




வெள்ளி, 29 டிசம்பர், 2023

அதிகரிக்கும் டெங்கு தொற்று:மன்னாரில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள கோரிக்கை

மன்னாரில் கழிவகற்றல் செயன்முறை ஸ்தம்பிதம் அடைந்துள்ளமையினாலும் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றமையினாலும் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதாகவும் எனவே பொதுமக்கள் அவதானமாக செயல்படுவதுடன் டெங்கு அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறுமாறு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. வினோதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 மன்னாரில் வைத்து இன்று (29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார். -அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

 நாடளாவிய ரீதியில் தற்போது டெங்கு நோயினுடைய தாக்கம் அதிகரித்துள்ளது. முழு இலங்கையும் எடுத்துக் கொண்டால் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

 மன்னார் மாவட்டத்தை பொருத்தவரையில் கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரை 111 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள். அதேவேளை டிசம்பர் மாதத்தில் மட்டும் இதுவரையில் 88 நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள். 

 குறிப்பாக இந்த நோயாளர்களில் பலர் கொழும்பு கண்டி மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் இருந்து அல்லது அந்த பகுதிகளுக்கு சென்று வந்தவர்களாக காணப்படுகிறார்கள்.

 ஆகவே இவர்கள் இந்த டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் இங்கு வரும்போது அவர்களை கடிக்கும் நுளம்புகள் தொற்றுதல் அடைந்து உள்ளூரிலும் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக விடத்தல் தீவு மற்றும் மன்னார் நகரத்தின் சில பகுதிகளிலும் பேசாலை பகுதிகளிலும் அதிகளவான டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 டெங்கு நோயைப் பொறுத்தவரையில் சாதாரண டெங்கு காய்ச்சல் ,குருதி பெருக்குடனான டெங்கு காய்ச்சல் என இருவகையான டெங்கு காய்ச்சல்கள் நிலைமைகள் உருவாகலாம். 
டெங்கு காய்ச்சலில் இந்த காய்ச்சல் ஒரு நோயாளருக்கு உருவாக போகிறது என்பது நோயாளியின் உடலில் உள்ள நீர்பீடன தன்மை அதே போல டெங்கு வைரஸ் பிற பொருட்கள் ஆன்டிஜன் எனப்படும் பிற பொருட்கள் மற்றும் ஏனைய நீர்பீட காரணிகள் தீர்மானிக்கின்றது.

 எது எவ்வாறாக இருக்கின்ற போதும் டெங்கு காய்ச்சலினுடையதும், குருதிப் பெருக்குடனான காய்ச்சலினுடையதும் ஆரம்ப அறிகுறிகளாக நெற்றி பொட்டை அண்டிய தலையடி, கண்ணின் பின்புறம் நோவு, சிலருக்கு தொண்டை நோவு,தசை நோவு சிலருக்கு வயிற்றில் நோவு போன்ற குணங்குறிகள் காணப்படும்.

 எவ்வாறு இருப்பினும் டெங்கு குருதி பெருக்குடனான காய்ச்சலாக மாற்றமடையும் சந்தர்ப்பத்தில் அவர்கள் அதிக கலப்படைந்தவர்களாக உடல் பகுதியில் குளிர்ந்தும் வலது பக்க வயிற்றின் மேல் பகுதி நோவுடனும் காணக்கூடியதாக இருக்கும்.

 இவர்கள் கசிவு என்ற நிலைக்கு உள்ளாகின்ற போது அபாயகரமான கட்டத்தை அடைகிறார்கள். இந்த கசிவு என்பது எமது குருதி நாடிகளில் இருந்து பிரிந்து செல்கின்ற குருதி மைத்துளை குழாய்களூடாக அதிகளமான நீர்பாயம் கலங்களுக்கும் குருதி மைத்துளைகளுக்கும் இடையில் வெளியேறுவதால் ஏற்படுகிறது .

 இந்த கசிவு நிலை ஏற்படுகின்ற போது உடலில் அதிர்ச்சி நிலை ஏற்படும். இந்த அதிர்ச்சி நிலைமை காரணமாக உடலினுடைய குருதி அமுக்கம் குறையும், மூளை இருதயம் போன்றவற்றுக்கு செல்கின்ற குருதியின் அளவு குறையும் இது சிலவேளை மரணத்தை ஏற்படுத்தும். 

 அதே நேரம் இவ்வாறு வெளியே செல்கின்ற நீர்பாயம் மீண்டும் உள் வருவதற்கான தன்மை காணப்படுகின்ற போது அந்த அலர்ஜி காரணமாக அதிகமாக வெளியேறிய குருதி மயிர்த்துளை குழாகளினுடைய துவாரங்கள் மூடுவதன் காரணமாக வெளியேறி திரவம் சில சந்தர்பங்களில் மீண்டும் உள்ளே வர முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு ஏற்படுகின்றபோது அவர்கள் இதயம் சுற்றும் மென்சவ் அலர்ஜி சுவாசப்பை அலர்ஜி மற்றும் மூளை வீக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மரணம் அடைய கூடிய சாத்தியம் இருக்கின்றது. 

 ஆகவே இந்த டெங்கு குருதி பெருக்குடன் காய்ச்சல் நோயாளிகள் கட்டாயமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும். அவர்களுடைய குருதியின் சிறுதட்டுக்கள் எண்ணிக்கை குறைவடையும். ஆனால் குருதி சிறு தட்டுக்கள் உடைய எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் விட குறைவடைவதற்கு முன்பதாக சிலருக்கு கசிவு நிலை ஏற்படலாம்.

 ஆகவே சில குணங்குறிவுகளை அடிப்படையாகக் கொண்டு உடலில் அதிகளவு களைப்பு, வயிற்றில் நோவு, தொடர்ந்து சத்தி, இப்படியான குணங்குறிகள் இருப்பின் அவர்கள் கட்டாயம் வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற வேண்டும் . 

 அவர்களுக்கு வழங்கப்படும் திரவமானது அவர்களுடைய உடலுக்கு தேவையானது சரியானதும் அளவில் கொடுக்கப்பட வேண்டும். அதிகமாகவும் வழங்கக்கூடாது. குறைவாகவும் வழங்க கூடாது. அது வைத்தியசாலையில் தான் சரியான முறையில் அளவிட்டு தீர்மானிப்பார்கள் ஆகவே அவர்கள் வைத்திய சாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவது கட்டாயமாகும் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது








 

வியாழன், 28 டிசம்பர், 2023

கப்டன் விஜயகாந் உடல்நிலை குறைவு காரணமாக இன்று காலமானார்

 கப்டன் விஜயகாந் நடிகரும் அரசியல்வாதியுமானவர்.28-12.2023. இன்றைய தினம் காலமானார்
 உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்திருந்தமை மக்கள் மனதில் பெரும் துன்பமாய் அமைந்துள்ளது.
தமிழ் திரையுலகில் முக்கியமானவர் விஜயகாந்த். அவர் ஒரு நடிகராகவும், அரசியல்வாதியாகவும் தனது பங்களிப்பிற்காக அறியப்படுகிறார். 1970களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையுலகில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய விஜயகாந்த், அதன்பிறகு ஏராளமான படங்களில் நடித்து, "
கேப்டன் பிரபாகரன்" திரைப்படத்தில் நடித்ததைத் தொடர்ந்து 
"கேப்டன்" என்ற பெயரைப் பெற்றார். அவர் தனது திரையில் பன்முகத்தன்மைக்காக அங்கீகரிக்கப்பட்டவர் மற்றும் அதிரடி, நாடகம் மற்றும் நகைச்சுவை வகைகளில் பரந்த அளவிலான கதாபாத்திரங்களை 
சித்தரித்துள்ளார்.
விஜயகாந்த் தனது வெற்றிகரமான நடிப்பு வாழ்க்கையைத் தவிர, அரசியலிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். 2005 இல், அவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (DMDK) அரசியல் கட்சியை 
நிறுவினார் மற்றும் தமிழக அரசியல் நிலப்பரப்பில் 
தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவரது அரசியல் பிரவேசம் அவரை மாநிலத்தின் சமூக-அரசியல் அரங்கில் முக்கிய நபராக மாற்றியுள்ளது.
திரையுலகம் மற்றும் அரசியல் ஆகிய இரண்டிற்கும் விஜயகாந்த் ஆற்றிய பங்களிப்புகள் அவருக்கு பல தரப்பிலிருந்து 
அர்ப்பணிப்புள்ள ரசிகர் பட்டாளத்தையும் மரியாதையையும் பெற்றுத் தந்துள்ளது. அவர் ஒரு செல்வாக்கு மிக்க நபராகத் தொடர்கிறார், அவருடைய தனித்துவமான பாணி மற்றும் திரைக்கு உள்ளேயும் வெளியேயும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்
 அத்தோடு இலங்கையின் முக்கிய செய்திகளாக தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு அரசியல் அறிவு உள்ள நபர் ஒருவரே பொருத்தமான ஒன்றாக அமையும் என  பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று தெரிவித்திருந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!


புதன், 27 டிசம்பர், 2023

மயங்கி விழுந்த நிலையில் பண்டாரவளையில் தாதி ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றிய தாதி ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். 
பண்டாரவளை மகுலெல்ல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான சதுனிகா சமரவீர என்ற தாதியே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். 
விடுமுறைக்காக பண்டாரவளையில் உள்ள தனது 
வீட்டிற்குச் சென்றிருந்த அவர், அங்கு உல்லாசப் பயணமாகச்
 செல்லத் தயாரான நிலையில், 
திடீரென மயங்கி
 விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 
இருப்பினும் அவர் முன்னதாகவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரதுமரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை எனவும், உடல் உறுப்புகள் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்பதும் குறிப்பிடத்தக்கது

செவ்வாய், 26 டிசம்பர், 2023

போதனா வைத்தியசாலையில் பல்கலைகழக மாணவியின் மரணம் குறித்து சகோதரி தெரிவித்த தகவல்

தரமற்ற ஊசியை செலுத்தியதாலும் சரியான முறையில் சிகிச்சை வழங்காததினாலுமே தனது தங்கை உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் உடன் பிறந்த சகோதரி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவி குணரத்தினம் சுபீனா அவர்கள் உடல் சுகயீனம் காரணமாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 
$அவர் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலைக்கு 
மாற்றப்பட்ட பின்னர் கடந்த 23 ஆம் திகதி இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து
 தெரிவிக்கயிலேயே குறித்த மாணவியின் சகோதரி இவ்வாறு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தங்கச்சிக்கு உடல் டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மருத்துவர் பார்வையிடுவதற்கு வரும்போது வாந்தி காணப்பட்டதால் அதற்கு ஒரு ஊசி போடுமாறு தாதியருக்கு கூறினார். இந்நிலையில் குறித்த ஊசியை தாதியர் ஏற்றிவிட்டு போகும்போது மூச்சுத்திணறல், தலைவலி என்ற எனது தங்கை துடித்துள்ளார். 
இந்நிலையில் அந்த ஊசி மருந்துக்கு எதிரான தடுப்பு மருந்து ஒன்றினை கொடுத்துவிட்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர்.
 அதன்பின்னர் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. பின்னர் மருத்துவர் 
வந்து “இதே ஊசி ஏனையோருக்கும் ஏற்றப்பட்டது. ஆனால் உங்களது தங்கச்சிக்கு தான் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. 
ஒவ்வாமை ஏதாவது இருக்கிறதா”
 என்று கேட்டார். 
ஆனால் ஏற்கனவே வைத்தியசாலையில் பதிவுகள் மேற்கொள்ளும் போது ஒவ்வாமை எதுவும் இல்லை என்று கூறினோம். பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பவுள்ளதாக 
கூறினர். பின்னர் தெல்லிப்பழை வைத்தியசாலையின் எந்தவிதமான ஆவணங்களும் யாழ்ப்பாணம் போதனா 
வைத்தியசாலைக்கு அனுப்பப்படாமலேயே தங்கச்சியை அனுப்பி வைத்தனர். 
இதயத்தை தொழிற்பட வைப்பதற்காக கழுத்துக்கு
 கீழ் பகுதியில் இருந்து துளையிட்டார்கள். ஏனென்றால் இதயத்தின் தசைநார்கள் இறுகிவிட்டன. ஆகையால் உடல் பாகங்களுக்கு இரத்தம் செல்லவில்லை. முகம் வெளிறி, கால்கள் மஞ்சள் நிறமாக மாற்றமடைந்தது. பின்னர் இரவு என்னையும் எனது அம்மாவையும் அழைத்த வைத்தியர், ஏற்கனவே ஏற்றப்பட்ட ஊசியின் தாக்கத்தினை தடுப்பதற்காக சிகிச்சைகள் வழங்கவுள்ளோம் என்றனர். 
இரவு எட்டு மணிக்குத்தான் சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டது. எந்தவிதமான மருந்துகளும் வைத்தியசாலையில் இல்லாதது போல 
எல்லா மருந்துகளும் எங்களையே வாங்கி தருமாறு கூறினர். பின்னர் அடுத்தநாள் வைத்திய ஆலோசகருடன் பேசும்போது 90 வீதம் 
அபாய கட்டத்தில் இருந்து தற்போது 60 வீதம் நிலைமைகள் சீருக்கு வந்துள்ளது. ஆகையால் பயப்படத் தேவையில்லை 
என்று கூறினார். 
பின்னர் திடீரென செயற்கையாக இதயத்தை தொழிற்பட வைக்கும் மருந்தை குறைத்தனர். இவ்வாறு குறைத்ததால் மூன்று மணத்தியாலத்தில் திரும்பவும் அபாய கட்டத்திற்கு எனது தங்கச்சி சென்றார். இதன்போதே
 ஏதாவது எனது தங்கச்சிக்கு நடந்துவிட்டதா தெரியவில்லை. எனது தங்கச்சிக்கு ஏற்கனவே போட்ட ஊசி என்ன என நான் வைத்தியரை கேட்டவேளை அவர் என்ன ஊசி என்று கூறவில்லை. கண்ணுக்கு பிளாஸ்டர் போட்டு
 ஒட்டி இருந்தனர். 
பின்னர் இரவு எங்களை அழைத்தவேளை நாங்கள் போய் பார்த்தோம் வென்டிலேட்டர் குழாயில் இரத்தம் காணப்பட்டது. 
ஊசி ஏற்றுவதற்கு முன்னர் செவ்வாய்க்கிழமை பரிசோதனைகள் செய்யப்பட்டது. ஆனால் புதன்கிழமை பரிசோதனை செய்யவில்லை. ஏனென்றால் மெசின் பழுதாகி 
விட்டதாக கூறினர். 
இரத்த அளவீடு பார்க்காமல், குருதிச் சிறு தட்டுகளின் அளவு பார்க்காமல், டெங்கின் அளவுகள் பார்க்கால் எவ்வாறு ஊசியை ஏற்றினார்கள்? அத்துடன் ஏற்றப்பட்ட அந்த ஊசி தரக்குறைவான ஊசி என அழியமுடிகிறது.
 போடப்பட்ட ஊசியின் பெயரோ அல்லது அது தொடர்பான விபரங்கள் எவையும் பதிவுகளில் இடம்பெறவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது ஊசியின் தாக்கத்தினால் தான் எனது தங்கச்சி உயிரிழந்துள்ளதாக. எனவே 
இவ்வாறான இனி எந்த சம்பவங்களும் இனிமேல் நடக்கக்கூடாது. எனது தங்கச்சிக்கு நீதி வேண்டும் என்றார்.என்பதாகும்   


திங்கள், 25 டிசம்பர், 2023

கொரோனா அச்சம் வடக்கில் இல்லை டெங்கின் தாக்கம் அதிகரித்ப்பு சுகாதார பணிப்பாளர் தகவல்

வடக்கில் கொரோனா அச்சம் இல்லை எனவும், ஆனால் டெங்கின் தாக்கம் அதிகரித்து செல்வதனால், டெங்கு தொடர்பில் அதிக 
கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளரும், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளருமான த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 
 அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கொரோனா தொற்று எவையும் நீண்டகாலமாக வடமாகாணத்தில் பதிவாகவில்லை. 
ஆனால் அண்மைய நாட்களாக டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றன. 
 தினமும் சராசரியாக 100 பேர் வரையில் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர். எனவே வடமாகாண மக்கள் கொரோனா தொற்று தொடர்பில் அச்சமடைய 
தேவையில்லை. 
ஆனால் டெங்கு நோய் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது





 

ஞாயிறு, 24 டிசம்பர், 2023

பல்கலைக்கழக மாணவி யாழ் போதனா வைத்தியசாலையில் மரணம் .

யாழ் பல்கலைக்கழக மாணவியொருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். 
குணரத்தினம் சுபீனா என்ற 25 வயது மதிக்கத்தக்க மாணவியே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் குறித்த மாணவி
 காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.  
இந்நிலையில் குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி.23-12-2023. அன்றய  தினம் உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் உடற்கூறு பரிசோதனைக்கு பின்னர் தெரியவரும் என காவல்துறையினர் 
தெரிவித்துள்ளனர்.  
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது.


சனி, 23 டிசம்பர், 2023

நிகழ்ந்த கார் விபத்தில் பிரான்சில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

பிரான்சில் 22-12-2023.வெள்ளிக்கிழமை அன்று  இரவு பிரான்ஸ் Yvelinesல்  மாவட்டத்தில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலியாகியுள்ளனர். Bailly எனும் நகருக்கு அருகே ஊடறுத்துச் செல்லும் 307 இலக்க சாலையில் இந்த விபத்து 22-12-2023ஆம் திகதி
 இடம்பெற்றது. 
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் Peugeot 206 மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென மகிழுந்து கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு மகிழுந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மகிழுந்தைச் செலுத்திய 32 வயதுடைய ஒருவரும் அவரது சகோதரி (வயது 34) தாய் (வயது 62) தந்தை (வயது 71) ஆகிய
 நால்வரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்துக்குள்ளான இரண்டாவது மகிழுந்தினை 34 வயதுடைய பெண் ஒருவர்
 செலுத்தியுள்ளார். 
அவரது மகிழுந்தில் இரண்டு மற்றும் மூன்று வயதுடைய குழந்தைகள் இருந்துள்ளனர். அவர்கள் மூவரும் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 


வெள்ளி, 22 டிசம்பர், 2023

நாட்டில் மாத்தளையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெரிய வெங்காயம் கண்டுபிடிப்பு

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தை களஞ்சியசாலைகளில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவல் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை விசாரணைகளை 
ஆரம்பித்துள்ளது.
 இதேவேளை, மாத்தளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள தனியார் களஞ்சியசாலையொன்றை சோதனையிட்டதில் பாகிஸ்தான், இந்தியா, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெருந்தொகையான வெங்காயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 இந்நிலையில், மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்ட நிறுவனங்கள் அல்லது விற்பனை வலையமைப்புகள் தொடர்பான சரியான தகவல்களை முன்வைப்பதற்கான குறிப்பிட்ட ஆவணங்கள் அவர்களிடம் காணப்படவில்லை என்றும் மாத்தளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபை 
தெரிவித்துள்ளது.
 அதன்படி, சம்பந்தப்பட்ட தரப்பினரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாக மாத்தளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.  என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>