siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

நாட்டில் 220 மில்லியன் ரூபாய் தங்கக் கடத்தல் மோசடிகண்டுபிடித்தனர்

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் 27-09-2021.அன்று பெரிய அளவிலான தங்க கடத்தல் மோசடி ஒன்றை கண்டுபிடித்தனர்.இந்த பாரிய தங்க கடத்தல் ஒரு போலியான வர்த்தக பெயரில் விமான சரக்கு பகுதியில் கொரியர் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் நகரத்திலிருந்து வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் மின் இயந்திரங்களின் பாகங்கள் இறக்குமதி செய்யப்படுவதாகக் தெரிவித்து 16 கிலோ தங்கம் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது.இந்த...

சனி, 25 செப்டம்பர், 2021

இலங்கையில் பால்மா விலை 200 ரூபாவால் அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால்மா விலை 200 ரூபாவினால் அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பால்மா இறக்குமதி செய்யப்படும் நிறுவனங்களின் அமைப்பு இதற்கான கோரிக்கையை விடுத்திருந்தது. இந்நிலையில் வாழ்க்கை செலவு குழு அதற்கு அனுமதியை வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. நிலாவரை.கொம் செய்திகள் >>>...

வியாழன், 23 செப்டம்பர், 2021

வடமராட்சி நவிண்டிலில் வெளிநாடு செல்லவிருந்த இளம் பெண் திடீர் மரணம்

யாழ்.வடமராட்சி நவிண்டில் பகுதியில் வெளிநாடு செல்லவிருந்த இளம் பெண் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தொியவருகின்றது. குறித்த பெண் 21-09-2021. அன்றிரவு  இவர் உயிரிழந்துள்ளார்.வெளிநாட்டில் திருமணம் முடித்த நிலையில் மிக விரைவில் கணவரிடம் செல்லவிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.மேலும் குறித்த பெண் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றவர் எனவும் கூறப்படுகின்றது. சம்பவத்தில் நவிண்டில் பகுதியைச் சேர்ந்த தவேந்திரன் துளசிகா...

புதன், 22 செப்டம்பர், 2021

.திருநெல்வேலி பகுதியில் காரில் பயணித்தவர்களிடம் சிக்கிய பொருட்கள்

யாழ்.திருநெல்வேலி பகுதியில் காரில் பயணித்த நால்வரை சோதனையின் பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.இச்சம்பவம் 20-09-2021அன்று இடம்பெற்றுள்ளது.சந்தேக நபர்களிடமிருந்து உயிரிக்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் 2 கிராம் 94மில்லிக்கிராமும் வாள் ஒன்றும் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. நிலாவரை.கொம் செய்திகள் >>>...

ஸ்கந்தபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் பலி

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் 20-09-2021அன்று  இரவு நிகழ்ந்துள்ளது.இச்சம்பவத்தில் ஸ்கந்தபுரம் 2ம் பாடசாலை வீதியில் வசித்துவரும் பேரின்பநாதன் கேசவன் எனும் 27 வயதான இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,சிறிய வியாபார நிலையமொன்றை நடாத்திவரும் குறித்த இளைஞன் நேற்றைய தினம் இரவு பிஸ்கட் எடுத்து...

திங்கள், 20 செப்டம்பர், 2021

வட்ஸ்அப் பயனாளர்களுக்கு இலங்கையில் முக்கிய அறிவிப்பு

வட்ஸ்அப் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் இருவர் தெஹிவளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் நைஜீரிய பிரஜைகள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.பொலிஸ் கணினி குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் வசமாக சிக்கியுள்ளனர்.இந்த நிலையில் சந்தேகநபர்கள் இருவரும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இலங்கை பெண்ணொருவருக்கு பரிசு கிடைத்துள்ளதாகவும்,...

மரண அறிவித்தல் திரு இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா 20.09.21

தோற்றம்-14 01 1956-    மறைவு-20 09 2021  யாழ். வளலாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 20-09-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசையா(இளைப்பாறிய ஆசிரியர்), தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு கடை குட்டியும், காலஞ்சென்ற திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற தர்மரத்தினம், ஜெயசீவரட்ணம், கமலலோஜினி மற்றும் சந்திரவதனா(பிரித்தானியா),...

நாட்டில் மேலும் மூன்று பொருட்களுக்கு விலை அதிகரிப்பு

இலங்கையில் பால் மா, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை எதிர்வரும் தினங்களில் அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.நுகர்வோர் விவகார அதிகார சபையின் விலை குழுவினால் நடத்தப்பட்ட கண்காணிப்பின் பிரகாரம், வாழ்க்கை செலவுக் குழுவின் அனுமதியுடன் இந்த பொருட்களுக்கான விலையை அதிகரிக்க நேரிடும் என அவர் கூறியுள்ளார்.இந்த பொருட்களுக்கான விலை, சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ள...

ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

மரண அறிவித்தல் திருமதி கதிரவேலு இராசலக்சுமி அவார்கள் 19.09.21

                    தோற்றம்-04-07-1932.-  மறைவு-20 09 2021                           யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி கதிரவேலு இராசலக்சுமி அவார்கள் 19.09.21ஞாயிற்றுக்கிழமை    இன்று இயற்கை எய்தினார்.அன்னார் காலஞ்சென்ற கதிரவேலுவின் பாசமிகு மனைவியாரும் காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை...

மகிழ்ச்சியான செய்தி தங்கத்தின் விலை தமிழகத்தில் திடீர் வீழ்ச்சி

தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக ஆபரணத் தங்கத்தின் விலை சரிவை கண்டு வருவதனால் வாடிக்கையாளர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில்  (செப்டம்பர் 18) விற்பனையில் சவரனுக்கு ரூ.16 வரை விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.பொதுவாக சுபமுகூர்த்த நாட்கள், பண்டிகை நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விற்பனையானது அதிகமாக காணப்படுவது வழக்கம். அந்த நாட்களில் தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்து விற்பனை செய்யப்படும்.ஆனால் கொரோனா 2...

மக்களே அவதானம் மெல்ல மெல்ல விஷமாக மாறும் குடிநீர் இப்படி இல்லாவிடின் குடிக்காதீர்கள்.

உண்மையை உணருங்கள், மற்றவருக்கும் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளவும் !குடிநீர் பாட்டில்களில் மெல்லக் கொல்லும் விஷமாகி” நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை.குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த...

வெள்ளி, 17 செப்டம்பர், 2021

நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு. அடுத்த மாதத்தின் பின் மின்சார தடை

அடுத்த மாதத்தின் பின்னர் மின்சார விநியோகத்தில் சிக்கல் நிலைமை ஏற்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.மின்சாரம் பயன்படுத்தும் மக்கள் 44 பில்லியன் ரூபாய் மின்சார கட்டணம் செலுத்தாமையினால் இந்த நிலைமை ஏற்படும் அபாயம் உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில் மக்கள் உடனடியாக மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.எனினும் மக்களை சிரமத்திற்குள்ளாக்கும் வகையில் மின்சார தடை செய்து...

வியாழன், 16 செப்டம்பர், 2021

மரண அறிவித்தல் திருமதி இளைய தம்பி தனலட்சுமி அம்மா (பாக்கியம்)16.09.21

 தோற்றம் -28 07 1927-மறைவு  16.09.2021யாழ். புத்துரைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி, டென்மார்க், பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி தனலட்சுமிஅம்மா அவர்கள் 16-09-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பிறைசூடி சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துவேலு பறுவதப்பிள்ளை தமப்திகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற முத்துவேலு இளையதம்பி அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான...

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

நாட்டில் பருப்பின் விலை மீண்டும் அதிகரிப்பு. அதிர்ச்சியில் மக்கள்

  இலங்கையில் பருப்பின் விலை மேலும் அதிகரிக்ககூடும் என அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.சந்தையில் பருப்பின் விலையானது தற்போது 250 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளதுநாட்டிற்கு அவுஸ்திரேலியா மற்றும், கனடாவில் இருந்து பருப்பு கொள்வனவு செய்யப்படும் நிலையில், கனடாவில் விளைச்சல் குறைந்துள்ளமையால் பருப்பின் விலை அதிகரிக்கும் சாத்தியம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை,...

திங்கள், 13 செப்டம்பர், 2021

கர்ப்பிணிப் பெண் ஒருவர் யாழ் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழப்பு

கொவிட்-19 தொற்றுக்குள்ளான கர்ப்பிணிப் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த இமானுவேல் ராஜன் மரியதெஸ்ரா (வயது-36) என்பவரே உயிரிழந்தார். கடந்த முதலாம் திகதி காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு கொவிட்-19 சிகிச்சை விடுதியில் சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பயனின்றி நேற்று (12)இரவு உயிரிழந்தார்.இறப்பு விசாரணையை யாழ்ப்பாண...

இலங்கையை சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் கொந்தளிப்பாக காணப்படும்

சப்ரகமுகாலியிலிருந்து ஹம்பாந்தோடடை ஊடாகபொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கரையோரத்தை அண்டிய பகுதிகளில் 2 – 2.5 மீற்றர் உயரம் வரை (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.வ, மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இலங்கையின் இன்றைய வானிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்...

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

இன்று முதல் நாட்டில் பெரிய வெங்காயம் விலையில் திடீர் மாற்றம்

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கு 40 ரூபா இறக்குமதி வரியை அறவிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இத்தகவலை விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.அதன்படி இன்று முதல் இந்த வரி அறவீடும் நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நிலாவரை.கொம் செய்திகள் >>>...

கோர விபத்த்தில் வவுனியாவில் சம்பவ இடத்தில் இளைஞன் பலி

வவுனியா ஈரப்பெரியகுளத்தில் கடற்படை பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (06) இரவு இடம்பெற்ற விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியாவில் இருந்து ஈரப்பெரியகுளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஈரப்பெரியகுளம் சந்தியில் எதிரே வந்த கடற்படையின் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் சாரதி பலியாகியுள்ளார்.அனுஸ்க அபயரத்தின லக்மால் (வயது 28) என்ற இளைஞனே மரணமடைந்துள்ளவராவார்.விபத்து...

யாழில் மரணத்திலும் இணைபிரியாத வயதான தம்பதிகள்

யாழில் கணவன் – மனைவி இருவரும் கொரோனாவுக்கு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சோி – நுணாவில் பகுதியில் கொரோனா தொற்றினால் மனைவி உயிரிழந்து ஒரு வாரத்தில் கணவனும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.கடந்தவாரம் 87 வயதான வயோதிப பெண்மணி கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவருடைய சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்.07-09-2021. இன்று அவருடைய சடலம் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில்...

திங்கள், 6 செப்டம்பர், 2021

நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் உயிரிழக்க இதுதான் முக்கிய காரணமாம்

நாட்டில் கொரோனா நோயாளிகள் உரியநேரத்தில் வைத்தியசாலைக்கு வருவதில்லை என்பது பெரும் குறைபாடாக இருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.அதிக காய்ச்சலுடன் ஏனைய வருத்தங்கள் இருக்கின்ற பொழுது கட்டாயம் வைத்திய ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அபர் மேலும் தெரிவித்துள்ளார்.06-09-2021..இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,...

சனி, 4 செப்டம்பர், 2021

மரண அறிவித்தல் திருமதி கருணாகரன் பரமேஸ்வரி(புனிதம்) 04.09.21

யாழ். சிறுப்பிட்டி வல்லையப்புலம் அருள் மிகு ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மணி) அம்பாள் தேவஸ்தானத்தின் சப்பர திருவிழா உபயகாரரும், ஆலய திருப்பணி வேலைகளுக்கும் பங்காற்றிய சிறுப்பிட்டியை சேர்ந்த  அமரர் இளைய தம்பி கருணாகரன் (கருணை )அவர்களின் அன்பு மனைவி யேர்மனி டோட்முணட் நகரில் வாழ்ந்து வந்த திருமதி கருணாகரன் பரமேஸ்வரி(புனிதம்) 04/09/2021 அன்று காலமானார்  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்தகவல்:...

மரண அறிவித்தல் திரு கந்தையா கனகரத்தினம் 04.09.21

தோற்றம்  28-04-1945 -மறைவு  04-09-2021 யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தோப்பு மற்றும் வவுனியாவையும்  வதிவிடமாகவும் கொண்ட(லொறிஉரிமையாளர் )திரு கந்தையா கனகரத்தினம் அவர்கள்  04.09.2021 அன்று  காலமாகி விட்டார். அன்னார் காலம் சென்ற கந்தையா தம்பதிகளின் அன்புமகனும் காலம் சென்ற (லொறிஉரிமையாளர் ) வன்னியசிங்கம் அவர்களின் சகோதரனும் காலம் சென்ற ஜெயசந்திரன் (லொறிச்சாரதி )அவர்களின் சகலனும் மற்றும் கந்தசாமி...