பிறப்பு-17 06. 1963 - இறப்பு-26 01 2018
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் செல்வகுமார் ( குமார்)அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி
திதி: 09-02-2022-அன்று
நாட்கள் நகர்கின்றதா இல்லை பறக்கின்றதா!
எங்களை நிர்க்கதியாய் தவிக்கவிட்டு
எங்களின் உயிருக்குயிரானவனேஎங்களைப் பிரிந்து நான்கு ஆண்டுகள் மறைந்ததையா
காலம் நகரலாம் கண்ணீரும் கவலையும்- என்
இதயத்திற்கு மட்டுமே சொந்தமாய் போனதையாஎன்னுயிரே!
ஏன் இந்த சுமை தந்தீர்?
என் உயிர் உள்ளவரை சோகத்தை....
ஏன் சுமக்கவைத்து விடைபெற்றீர்!துன்பம் என்ற சொல்லை
நீங்கள் பிரியும் வரை அறியவில்லை
இன்று வரை.........எங்கள் இதயம் உங்கள் பிரிவை
ஏற்கவில்லை.........நடந்தவை கனவாகப் போகாதோ..?
மீண்டும் ஒருதரம் வாய்விட்டு அழைத்து
எங்களை அரவணைக்க மாட்டீர்களா?உங்கள் பிரிவால் ஆறாத் துயரில்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
நேரில் வரமாட்டீர்களோ அப்பா!உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
வாடிநிற்கும் குடும்பத்தினர்.தகவல்: குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக