நாட்டில் பஸ் கட்டணம் 17 வீதத்தால் அதிகரிபட்டுள்ளது. அதற்கமைய ஆரம்பக் கட்டணம் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.இதற்கமைய ஆரம்ப கட்டணம் 14 ரூபாவில் இருந்து 17 ரூபாவாக அதிகரிப்பதோடு ஏனைய கட்டணங்களும்
அதற்கமைய உயர்கிறது.
இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் பயணிகள் சேவை அனுமதிப் பத்திரத்தின் கீழ் பயணிக்கும் தனியார் பஸ்களின் கட்டணம் இவ்வாறு உயர்கிறது.அண்மையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட நிலையில் பஸ்கட்டணங்களை அதிகரிக்க கடந்த மாதம் 29 ஆம் திகதி முடிவு செய்யப்பட்டது.
12 அம்சங்களை கொண்ட தேசிய கொள்கைக்கு அமைவாக கணிப்பிடப்பட்டு புதிய கட்டண பட்டியல் நேற்று திங்கட்கிழமை வெளயிடப்பட்டது.நாளை புதன்கிழமை முதல் புதிய கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வரவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக