siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 6 ஜனவரி, 2022

மயிரிழையில் யாழ் தீவுப்பகுதியில் தப்பிய 100 க்கு மேற்பட்டவர்கள்

யாழ்.நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சமுத்திரதேவி படகு நடுக்கடலில் பழுதடைந்த நிலையில் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.இன்று காலை 100ற்கு மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திர தேவி படகு இடை நடுவில் பழுதடைந்த 
நிலையில் பின்னர்
வடதாரகைப் படகின் உதவியுடன் குறிகட்டுவான் நோக்கி இழுத்து செல்லப்பட்டது.சுக்கான தடி உடைந்தமையினால் இடைநடுவில் பயணிகளை வடதாரகைப்படகிற்கு மாற்ற முடியாத நிலையிலும் பல இடையூறுகள் மத்தியிலும் வடதாரகைப்படகு இழுத்து 
செல்லப்பட்டது.
காலை 07.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்பட்ட மக்கள் காலை 10.00 மணியினை அண்மித்தே குறிகட்டுவான் இறங்கு துறைமுகம் வந்து சேர்ந்த குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக