siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 11 ஜனவரி, 2022

நாட்டில் இலங்கையில் வாடகை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சி

வீடு தேவைப்பட்டு வாடகை வீடுகளில் வாழும் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மலிவு விலையில் நிரந்தர வீடுகளை வழங்கும் முயற்சியில் ‘சொந்துரு மஹால் நிவாச’ என்ற வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை
 ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான ரன் பொக்குன கமவில் அமைந்துள்ள காணித்துண்டில் 72 வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வீடு அல்லது வீடமைப்பதற்கு காணியொன்று இல்லாமையால் வாடகை வீடுகளில் வாழ்கின்ற, உண்மையான வீட்டுத் தேவையுள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானங்கொண்ட குடும்பங்களுக்கு நியாய விலைக்கு நிரந்தர வீடுகளை வழங்கும் நோக்கில் ´சொந்துரு மஹல்´ எனும் பெயரிலான வீடமைப்புத் திட்டத்தை தேசிய வீடமைப்பு அதிகாரசபை மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு கிராமிய, வீடமைப்பு மற்றும் கட்டுமானங்கள் கட்டடப்பொருட்கள் கைத்தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு 5 இலட்சம் ரூபாய் ஆரம்பத் தொகையாகச் செலுத்துவதற்கான ஆற்றல் இருக்க வேண்டியதுடன், வீட்டுப் பெறுமதியின் எஞ்சிய தொகை வருடமொன்றில் தவணைக் கட்டணமாக அறவிடப்படும் என
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவைக்கேற்ப வங்கியின் மூலம் கடனைப் பெற்றுக்கொள்வதற்கும் தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>






0 கருத்துகள்:

கருத்துரையிடுக