siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 31 அக்டோபர், 2022

நாட்டில் வாகன விபத்து ஒன்றில் மூளை சாவடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம்

வாகன விபத்து ஒன்றில் மூளை சாவடைந்த நபரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் அனுமதி வழங்கியுள்ளனர். இந்நிலையில் குடும்பத்தினரின் இந்த முடிவை பலரும் பாராட்டியுள்ளனர்.ஹசலக மகாஹஸ்வெத்தும கிராமத்தில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 48 வயதான எம்.ஜீ. சந்திம என்பவர் இவ்வாறு விபத்தில் மூளை சாவடைந்துள்ளார்.ஹசலக பிரதேச சபையில் சாரதியாக தொழில் புரிந்து வந்த இந்த நபர், பணி முடிந்து பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, பேருந்தில் இருந்து...

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

நாட்டில் வடமாகாணத்தில் 4 ஆம் திகதி வரை மழைவீழ்ச்சிக்கு கூடிய சாத்தியக் கூறுகள்

 வங்கக்கடலில் தற்போது நிலவி வருகின்ற தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 4 ஆம் திகதி வரை மழைவீழ்ச்சி வடமாகாணத்தில் கிடைக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 9ஆம் திகதி அளவில் ஒரு பலமான தாழமுக்கம் ஒன்று உருவாவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதுடன், இதனால் பலத்த மழை வீழ்ச்சி இலங்கையின் பல பகுதிகளுக்கு கிடைக்கலாம். எனஅனர்த்தமுகாமைத்துவமத்தியநிலையம் தகவல் வெளியிட்டுள்ளது இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா...

சனி, 29 அக்டோபர், 2022

நாட்டில் மீண்டும் குறைகிறது லிட்ரோ எரிவாயு விலை

நாட்டில் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் மீண்டும் லிட்ரோ எரிவாயு விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த விடயத்தை.29-10-2022. இன்றைய தினம் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று காலை மற்றுமொரு எரிவாயு கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.இந்த நிலையில் 3,700 மெற்றிக் தொன் எரிவாயு இறக்கும் பணி நாளைய தினம் (30.10.2022) ஆரம்பமாகும். இதேவேளை உலக சந்தையில் எரிவாயுவின்...

வெள்ளி, 28 அக்டோபர், 2022

சவூதி அரேபியாவில் இலங்கை பெண்ணுக்கு மரண தண்டனை

பணிப்பெண்ணாக சவூதி அரேபியா வீடொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அந்த வீட்டிலிருந்த சிறுமிக்கு சூனியம் செய்து கொலை செய்தார் எனக்கூறி சவூதி நீதிமன்றம், அப்பெண்ணுக்கு மரண தண்டனை விதித்திருந்தது.இந்த நிலையில் சவுதியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளின் தலையீட்டால், சிறுமியின் உடற்பாகங்களை இரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தியபோது சிறுமி புற்றுநோயால் இறந்ததாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.அதன்பின்னர் இலங்கை பெண் சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் கடந்த 16ஆம்...

குருமன்காடு பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி குற்றவாளி தப்பியோட்டம்

வவுனியாவில் விபத்தினை ஏற்படுத்தி ஒருவரின் உயிரிழப்பு காரணமான நபர் ஒருவர் தப்பியோடியுள்ள நிலையில் குறித்த நபரை கண்டு பிடிக்க காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.வவுனியா, குருமன்காடு பகுதியில் கடந்த 1ம் திகதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் விபத்தினை ஏற்படுத்திய உந்துருளியில் தப்பிச்சென்றுள்ளது.படுகாயமடைந்த நபர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி...

வியாழன், 27 அக்டோபர், 2022

மரண அறிவித்தல் அமரர் பொன்னம்பலம் இந்திராணி (இந்திரா ) 27.10..22

தோற்றம் -20-03-1951-மறைவு-27-10-2022.யாழ்.  நவற்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர் பொன்னம்பலம் இந்திராணி  (இந்திரா ) அவர்கள் 27.10.2202  அன்று காலமானார்இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்  கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு   ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து...

நாட்டில் பக்கவாதத்தினால் வருடாந்தம் 4,000 பேர் உயிரிழப்பு

இலங்கையில் வருடத்திற்கு சுமார் 4,000 பேர் பக்கவாதம் காரணமாக உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.உயர் இரத்த அழுத்தமே பக்கவாதத்திற்கு முக்கிய காரணமாக அமைவதால் வருடத்திற்கு இரண்டு முறையாவது இரத்த அழுத்தத்தை அளவிட வேண்டும் என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சமிந்தி சமரகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....

புதன், 26 அக்டோபர், 2022

உதுவன்கந்த பகுதியில் இடம்பெற்ற கோரவிபத்து..! 37 பேர் காயம் ஒருவர் உயிரிழப்பு

மாவனெல்லை – உதுவன்கந்த பகுதியில் 25-10-2022.அன்றுஇரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 37 பேர் காயமடைந்துள்ளனர்.இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிததுள்ளனர்.கேகாலையிலிருந்து கண்டி நோக்கி தனியார் பேருந்து பயணித்துள்ளதுடன், மாவனெல்லையிலிருந்து கேகாலை நோக்கி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பயணித்துள்ளது.விபத்தில்...

செவ்வாய், 25 அக்டோபர், 2022

நுவரெலியாவில் திடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அருந்தப்பு

நுவரெலியா நகரில் ஒரே குடும்பத்தினர் பயணித்தஓட்டோவொன்று  25-10-2022.இன்று பிற்பகல் தீப்பிடித்து எரிந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.நுவரெலியா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருளை நிரப்பிக்கொண்டு லவர்ஸ்லிப் பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே, முச்சக்கரவண்டி இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.ஓட்டோ இவ்வாறு தீப்பற்றி எரிந்த போது, ஓட்டோவுக்குள் தாய், தந்தை மற்றும் மகளும் பயணித்துக்கொண்டிருந்ததுடன், தந்தையே...

திங்கள், 24 அக்டோபர், 2022

இன்சியான் நகரில் இருந்து பயணித்த விமானம் ஓடுதளத்தை விட்டுவிலகி புல்வெளிக்குள் பாய்ந்தது -

அடைமழை காரணமாக விமானத்தை அவசரமாக தரையிறக்க, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் விமானம் புல்வெளிக்குள் நழுவிச்சென்று மயிரிழையில் 173 பயணிகள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.இந்த சம்பவம் .23.10.2022.அன்று  பதிவாகியுள்ளது.தென்கொரியாவின் இன்சியான் நகரில் இருந்து 162 பயணிகள் 11 பணியாளர்கள் என மொத்தம் 173 பேருடன் பயணித்த விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.இதையடுத்து பிலிப்பைன்ஸ் நாட்டின் மேக்டன்-செபு சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.அப்போது,...

ஞாயிறு, 23 அக்டோபர், 2022

சாவகச்சேரி டச் வீதியில் வீடொன்றில் வெடித்து சிதறிய சமையல் எரிவாயு

சாவகச்சேரியில் வீடொன்றில் 22-10-2022 அன்று மதியம் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.இச் சம்பவம் சாவகச்சேரி டச் வீதியில் இடம் பெற்றுள்ளது வீட்டில் இருந்த பெண்மணி சமையல் செய்துகொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.மேலும் அடுப்பு சேதமடைந்ததுடன் வீட்டில் இருந்த எவருக்கும் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>...

சனி, 22 அக்டோபர், 2022

நாட்டில் புலமைப்பரிசில் பரீட்சையில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள்

நாட்டில்  இம்முறை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை நடத்தும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி.தர்மசேன வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இதனடிப்படையில், இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் இரண்டாவது வினாத்தாளை முதலிலும் முதலாவது வினாத்தாளை இரண்டாவதாகவும் வழங்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் கடந்த ஆண்டு நேர அட்டவணை சம்பந்தமாக விரிவா ஆராய்ந்து இந்த...

வெள்ளி, 21 அக்டோபர், 2022

நாட்டில் சப்ரகமுவ பல்கலைக்கழக விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் பல்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய மாணவன் இன்று அதிகாலை பல்கலைக்கழக விடுதியில் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இதுவரை இடம்பெற்றுள்ள நிலையில், மரணத்திற்கான காரணம் இதுவரை கணடறியப்படவில்லை.உயிரிழந்த மாணவரும் பல்கலைக்கழகத்தின் கபடி அணியில் அங்கம் வகித்தவர் என பல்கலைக்கழக மாணவர் நலன்புரி பணிப்பாளர் பேராசிரியர் மனோஜ் ஆரியரத்ன தெரிவித்தார்.சடலம்...

வியாழன், 20 அக்டோபர், 2022

பலாலி சர்வதேச விமான நிலையம் தொடர்பில் மகிழ்ச்சி தகவல்

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் விரைவாக ஆரம்பிக்கப்படுமென தெரிவித்த அமைச்சர், இந்திய அரசின் நிதியுதவியுடன் அது முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.நாடாளுமன்றத்தில் நடைபெற்ற, வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது, எதிர்க்கட்சி எம் .பி புத்திக...

புதன், 19 அக்டோபர், 2022

பாடசாலை மாணவர்களை யாழ் தியேட்டருக்கு அழைத்து சென்ற பதிவு.

யாழ்ப்பாணத்தில் கடந்த. 14-10-2022.வெள்ளிக்கிழமை ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை பார்க்க முல்லைத்தீவு வலய பாடசாலை மாணவர்களை தனியார் கல்வி நிறுவனம் ஒன்று அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பில்வடமாகாண கல்வி அமைச்சு கவனத்தில் எடுத்துள்ளது.சனி, ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களில் தனியார் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் திரையரங்கிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதற்காக மாணவி ஒருவரிடம் இருந்து 1500 ரூபாய்...

செவ்வாய், 18 அக்டோபர், 2022

கரவெட்டியை சேர்ந்த இளைஞன் மர்மமான முறையில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கரவெட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.நீர்வேலி பகுதியில் மேசன் வேலையில் ஈடுபட்டு வந்த விஜயபாகு நிதர்ஷன் எனும் 27 வயதுடைய இளைஞர் நேற்றிரவு உறங்கி விட்டு அதிகாலையில் எழும்போது உயிரிழந்துள்ளார்.வீடு ஒன்றின் கட்டுமான பணிக்காக நீர்வேலி பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து கொண்டிருந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த இளைஞரின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணை செய்யப்பட்ட வேலை குடும்பத் தகராறு காரணமாக...

திங்கள், 17 அக்டோபர், 2022

நாட்டில் மீண்டும் அதிகரித்த டொலரின் பெறுமதி இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய (ஒக்டோபர் 17) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.இதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 360 ரூபா 35 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 370 ரூபா 86 சதமாகவும் பதிவாகியுள்ளது.இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 418ரூபா 52 சதமாகவும் அதேசமயம் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின்...

ஞாயிறு, 16 அக்டோபர், 2022

இடம்பெற்ற விபத்தில் கொலம்பியாவில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமாக டுமாகோவிற்கும் காலிக்கும் இடையே பஸ் ஒன்று சென்றுகொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>...

இடம்பெற்ற கோர விபத்தில் கனடாவில் பிறந்தநாள் அன்றே உயிரிழந்த இளைஞர்

கனடா மார்க்கமில் கடந்த வாரம் இடம்பெற்ற வித்தில் தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், விபத்து தொடர்பில் உறவினர்கள் பதில்களை எதிர்பார்க்கிறார்கள்.இந்த விபத்தில் 21 வயதான படீரன் புவனேந்திரன் மற்றம் 23 வயதான நிலுக்சனா புவனேந்திரன் ஆகியோர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் மாமாவான சுவென் பூபாலசிங்கம் இவ்வாறு கூறியுள்ளார்.இது எதையும் மாற்றப்போவதில்லை. ஆனால், வேறு எந்த குழந்தைகளுக்கும் இவ்வாறு நடக்காமல் இருக்க, எங்களுக்கு ஏதாவது ஒரு நீதி வேண்டும்.தனது...

சனி, 15 அக்டோபர், 2022

நாட்டில் மோசமான வானிலையால் 21,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களின் 34 பிரதேச செயலகப் பிரிவுகளில் 21,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதுவரை 03 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.வரகாபொல, தும்பலிஎத்த பகுதியில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல் போன இருவரின் சடலங்களும் அவர்களுள் அடங்கும். அந்த வீட்டில் இருந்த...

வெள்ளி, 14 அக்டோபர், 2022

இலங்கையில் கோதுமை மாவின் விலை சடுதியாக குறைப்பு

சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.இதன்படி, தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த காலங்களில் ஒரு கிலோகிராம் கோதுமை மா 300 ரூபா முதல் 400 ரூபா வரையில் விற்பனையானது எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.இதேவேளை, 25...

வியாழன், 13 அக்டோபர், 2022

ஒரேநாளில் யாழில் திடீரென லட்ஷதிபதியான நபர்.குவியும் வாழ்த்துக்கள்.

யாழ்ப்பாண மாவட்ட தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் கிளை முகவரில் ஒருவரான கனகலிங்கம் திலகவதி என்பர் மூலம், தேசிய லொத்தர் சீட்டினை பெற்றுக்கொண்ட கொக்குவிலை சேர்ந்த வி.சிவராஜ் என்பவருக்கு 35 இலட்சம் ரூபா கிடைத்துள்ளது.குறித்த நபருக்கான காசோலையினை வழங்கிவைக்கும் நிகழ்வு 13-10-2022.அன்று  இடம்பெற்றுள்ளது.இந்த நிகழ்வு 13-10-2022.அன்று  யாழ். கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள லொத்தர் சபை முகவரின் கூடத்தில் கனகலிங்கம் திலகவதி தலைமையில்...

புதன், 12 அக்டோபர், 2022

மின்னல் தாக்கி ஓமந்தையில் 11 உயிர்கள் சம்பவஇடத்தில் உயிரிழப்பு

வவுனியா, ஓமந்தை பகுதியில் மின்னல் தாக்கத்தின் காரணமாக 11 மாடுகள் பலியாகியுள்ளன.இன்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா, ஓமந்தை, அரச முறிப்பு பகுதியில் மாலை நேரம் மாடுகள் மேய்ச்சலில் ஈடுபடுக்கொண்டிருந்த போது மழை பெய்த்துள்ளதுஇதன்போது, மாடுகள் மேய்சலில் ஈடுபட்ட பகுதியில் உள்ள மரத்தின் மீது இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டு மாடுகளை தாக்கியமையால் 11 மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளன.இதேவேளை, வவுனியாவில் கடந்த சில நாட்களாக...

செவ்வாய், 11 அக்டோபர், 2022

காசர்கோடு மாவட்டத்தில் கோவில் உணவை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்த சைவ முதலை. உயிரிழப்பு

கேரளத்தின் காசர்கோடு மாவட்டம் அனந்தபுரம் ஸ்ரீ அனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில் குளத்தில் வசித்த முதலையாழ்வார்”பபியா”.பூஜை நேரங்களில் குளத்திலிருந்து கோவிலுக்கு வந்து ஸ்வாமியை தரிசித்து விட்டு ப்ரஸாதம் பெற்றுவிட்டுபக்தர்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படுத்தாது அமைதியாக குளத்திற்கு திரும்பிவிடுவார்! என்னதான் குளத்தில் வசித்தாலும் குளத்திலுள்ள மீன்களை உட்கொள்ளாது கோவில் ப்ரஸாதத்தை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்ததால் இவருக்கு “சைவ முதலை” என்ற மற்றொரு...