யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து சம்பவம் 05-10-2022.அன்று மாலை 3.45 மணியளவில் யாழ். வைத்தியசாலை வீதி, கொட்டடி லைடன் சந்தியில் இடம்பெற்றதுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் யாழ். கொட்டடியை சேர்ந்த 21 வயதான றொபிக்ஷன் என்ற இளைஞரே உயிரிழந்தார் என்று பொலிஸார் கூறினர்.யாழிலிருந்து கொட்டடி நோக்கி வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது என்று பொலிஸார்
தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவத்தில் இடத்தில் உயிரிழந்தார்.மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக