siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 13 அக்டோபர், 2022

ஒரேநாளில் யாழில் திடீரென லட்ஷதிபதியான நபர்.குவியும் வாழ்த்துக்கள்.

யாழ்ப்பாண மாவட்ட தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் கிளை முகவரில் ஒருவரான கனகலிங்கம் திலகவதி என்பர் மூலம், தேசிய 
லொத்தர் சீட்டினை பெற்றுக்கொண்ட கொக்குவிலை 
சேர்ந்த வி.சிவராஜ் என்பவருக்கு 35 இலட்சம் ரூபா கிடைத்துள்ளது.குறித்த நபருக்கான காசோலையினை வழங்கிவைக்கும் நிகழ்வு 13-10-2022.அன்று  இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு 13-10-2022.அன்று  யாழ். கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள லொத்தர் சபை முகவரின் கூடத்தில் கனகலிங்கம் திலகவதி தலைமையில் இடம்பெற்றது.
காசோலையினை வழங்கிவைப்பதற்காக தேசிய லொத்தர் சபையின் தலைவர் அஜித் குணரத்ன நாரகல கலந்துகொண்டு வெற்றிபெற்ற பயனாளிக்கு வி.சிவராஜ்க்கு காசோலையினை கையளித்தார்.
இந் நிகழ்வில் வடகிழக்கு பிராந்திய முகாமையாளர் ஐ.டி.பி.குமாரசிறி யாழ். மாவட்ட விற்பனை மேம்படுத்தல் அதிகாரி எம்.தவகோகுலன்,மற்றும் லொத்தர் சபையின் யாழ் மாவட்ட கிளை முகவர்கள், வாடிக்கையாளர்கள் பயனாளிகள் பலரும் கலந்துகொண்டனர்.
அத்துடன் தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் அஜித் குணரத்ன நாரகல யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்ததுடன் காரைநகர், மாதகல், யாழ் மத்திய நகர், கோப்பாய், மருதங்கேணி ஆகிய பகுதிகளுக்கு
 சென்று கடந்த மாதங்களில் தமது லொத்தர் சபை முகவர்களின் மூலமாக எற்படுகின்ற குறைபாடுகள் அவர்களுக்கு தேவையான இடவசதிகள் தொடர்பாகவும் கலந்துறையாடப்பட்டது என்பது 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக