உப்பு, மிளகாய் தூள் தொட்டு மாங்காய் சாப்பிட்டால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து
காண்போம்.
கோடையில் அதிகப்படியான வெப்பத்தால் உடலின் நீர்ச்சத்தை இழந்து, அதனால் உடல் வெப்பமடைந்து காய்ச்சல் அல்லது சில நேரங்களில் சுய நினைவை இழக்க நேரிடும். ஆனால் மாங்காயை உட்கொண்டு வருவதன் மூலம், அதில் உள்ள சக்தி வாய்ந்த குளிர்மிக்க உட்பொருள், உடலில் நீர்ச்சத்தை சீராக பராமரித்து, இப்பிரச்சனையைத் தடுக்கும்.
மாங்காயில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது உடலில் எலக்ட்ரோலைட் அளவை பராமரிக்க உதவி, அதனால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்து, இதய நோயின் அபாயத்தில் இருந்து
பாதுகாக்கும்.
நீங்கள் அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்பட்டு வந்தால், பச்சை மாங்காயை சாப்பிடுங்கள்.
பச்சை மாங்காய் கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளைத் தடுக்கும். ஏனெனில் மாங்காய் பித்தநீரின் சுரப்பை அதிகரிக்கும் மற்றும் குடலை பாக்டீரியா தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும்.
பச்சை மாங்காயில் ஆவியாகக் கூடிய உட்பொருட்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது செரிமான திரவத்தின் உற்பத்தியைத் தூண்டி, செரிமான பிரச்சனைகளில் இருந்து தடுத்து, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பருவ நிலை மாற்றம் அல்லது ஏதேனும் வைரஸ் தொற்றுக்களால் நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுபவராயின், பச்சை மாங்காயை சாப்பிடுங்கள். ஏனெனில் பச்சை மாங்காயில் வைட்டமின் சி மற்றும்
ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக