siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 14 அக்டோபர், 2022

இலங்கையில் கோதுமை மாவின் விலை சடுதியாக குறைப்பு

சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன இந்த விடயத்தினை 
தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது என அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஒரு கிலோகிராம் கோதுமை மா 300 ரூபா முதல் 400 ரூபா வரையில் விற்பனையானது எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை, 25 கிலோகிராம் நிறையுடைய கோதுமை
 மா மூடை ஒன்றின் விலை 7,250 ரூபாவாகும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கோதுமை மா இறக்குமதி செய்யப்பட்டுள்ளதன் காரணமாக, இவ்வாறு விலை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக