யாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த சேவை அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படும் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி
வெளியிட்டுள்ளது.
பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமானக் கட்டணம் கொழும்பு மற்றும் சென்னைக்கு இடையிலான விமானக் கட்டணங்களை விட கணிசமாகக் குறைவாக இருக்கும் என விமான சேவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விமான சேவைகளை மீள ஆரம்பிப்பது மற்றும் குறைவான விமானக் கட்டணங்கள் வடமாகாண மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா
தெரிவித்தார்.
இதேவேளை, விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தளபதி சந்தன விஜயசுந்தர தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக