siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 20 அக்டோபர், 2022

பலாலி சர்வதேச விமான நிலையம் தொடர்பில் மகிழ்ச்சி தகவல்

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
 தெரிவித்தார்.
பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் விரைவாக ஆரம்பிக்கப்படுமென தெரிவித்த அமைச்சர், இந்திய அரசின் நிதியுதவியுடன் அது முன்னெடுக்கப்படும் என்றும் 
குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற, வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது, எதிர்க்கட்சி எம் .பி புத்திக பத்திரண எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் 
இவ்வாறு தெரிவித்தார்.
பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்தியுள்ளோம். அதற்கு தேவையான சான்றுகளை விமான சேவைகள் அதிகார சபையினூடாக பெற்றுக்கொண்டதாகவும் அமைச்சர் கூறினார்.
பின்னர் இந்தியாவின் விமான சேவைகள் நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்தாகவும் ஏற்கனவே அந்த விமான சேவை நிறுவனத்தினர் அதற்கு இணங்கியிருந்தனர்.

எனினும் பலாலி விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் அங்கு விமானம் வருகை தரவில்லை. அது அவர்கள் பக்க தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகளாக இருக்கலாம். அது தொடர்பான நடவடிக்கைகள் பின்தங்கியுள்ளன.
எவ்வாறாயினும் இந்த மாத இறுதியில் விமானங்கள் சில வரும் என்று தெரிவிக்கப்படுகிறது. முடிந்தளவு அந்த விமான சேவை மூலம் இந்திய சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கு எதிர்பார்க்கின்றோம். அதேவேளை, இந்திய அரசாங்கத்தினால் இந்த 
விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளுக்காக நிதி வழங்கப்பட்டுள்ளது.
அதனை பயன்படுத்தி ஓடுபாதையை நீடிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அங்கு பெரிய விமானங்கள் வரக் கூடிய வகையில் ஓடுபாதையை 
அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக