கேரளத்தின் காசர்கோடு மாவட்டம் அனந்தபுரம் ஸ்ரீ அனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில் குளத்தில் வசித்த முதலையாழ்வார்”பபியா”.பூஜை நேரங்களில் குளத்திலிருந்து கோவிலுக்கு வந்து ஸ்வாமியை தரிசித்து
விட்டு ப்ரஸாதம் பெற்றுவிட்டு
பக்தர்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படுத்தாது அமைதியாக குளத்திற்கு திரும்பிவிடுவார்! என்னதான் குளத்தில் வசித்தாலும் குளத்திலுள்ள மீன்களை உட்கொள்ளாது கோவில் ப்ரஸாதத்தை மட்டுமே உண்டு
வாழ்ந்து வந்ததால் இவருக்கு “சைவ முதலை” என்ற
மற்றொரு பெயருண்டு.
நேற்று இந்த முதலையாழ்வார் உடல்நலக் குறைவால்
வைகுந்த ப்ராப்தம் அடைந்தார் . திருக்கோவில் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடந்த பிறகு , அடக்கம் செய்யப்பட்டது.சனாதன தர்மத்தில் பக்தியுள்ள
விலங்குகளுக்கு கூட தனி மரியாதை உண்டு.தமிழகத்தில் பக்தியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் சில மனித மிருகங்களுக்கு இந்த செய்தியை தெரிவிக்க ஆசைப்படுகிறேன்.திருநாவுக்கரசு ,தலைவர் ,
தேசிய சிந்தனை பேரவை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக