வவுனியா ஏ9 வீதி சாந்தசோலை சந்தியில்.18-11-20-23. இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.
ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த நபர் எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இதில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் குறித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அக்கராயன் பகுதியைச் சேர்ந்த பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவில் பணியாற்றிய 27 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக