siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 17 நவம்பர், 2023

இந்தியா சூரத் நகரில் கழிவுநீர்த் தொட்டியில் இறங்கிய நான்கு தொழிலாளர்கள் மரணம்

இந்தியா  குஜராத் மாநிலம் சூரத் நகரில் கழிவுநீர்த் தொட்டியில் இறங்கிய 4 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலை பிஹாரைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் சூரத் நகரின் பால்சனா பகுதியில் உள்ள ஒரு சாய ஆலையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போதே இச்சம்பவம் 
பதிவாகியுள்ளது.
2 தொழிலாளர்கள் தொட்டிக்கு உள்ளே இறங்கியபோது மயக்கமடைந்துள்ளனர். . அவர்களை காப்பாற்றும் முயற்சில் மற்ற இரு தொழிலாளர்களும் மயங்கி தொட்டிக்கு உள்ளேயே விழுந்துள்ளனர்.
4 பேரும் தொட்டியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் 4 பேருமே ஏற்கெனவே இறந்துவிட்டதாக அவர்களைப் பரிசோதன செய்த மருத்துவர்கள் 
தெரிவித்துள்ளனர்.
 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேர்ந்த இந்த அவலம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது 




0 கருத்துகள்:

கருத்துரையிடுக