முல்லைத்தீவு ஒட்டி சுட்டான் பெரிய சாளம்பன் கிராமத்தில் வயல் நிலத்துக்காக பாதுகாப்புக்கு போடப்பட்ட மின்சார வேலியில் சிக்குண்டு கொம்பன் யானை ஒன்று 21-11-2023.அன்று
உயிரிழந்துள்ளது.
சுமார் 15 வயது மதிக்கத்தக்க யனையே இவ்வாறு உயிரிழந்துள்ளந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யானையின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க முல்லைத்தீவு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளதுடன் பொலிஸாரும் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை சாளம்பன் கிராமத்தில் காட்டு யானையினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் கருத்து
தெரிவித்துள்ளனர்.
தங்கள் கிராமத்துக்கான யானை வேலி இதுவரை அமைத்துக் கொடுக்கப்படவில்லை என்றும் இதனால் தொடர்ச்சியாக விவசாய நிலங்கள் அளிக்கப்பட்டு வருவதாகவும் யானையால் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் விவசாயிகளும் மக்களும் அங்கலாய்க்கின்றார்கள்.
என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக