நாட்டில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று, கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கலனிகம பகுதியில்.23-11-2023. இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்று காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், ஆடைத்
தொழிலாளி உட்பட மூவர் காயமடைந்து
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக வீதியின் கலனிகம போக்குவரத்துப் பொலிஸார்
தெரிவித்தனர்.
விபத்தின் போது காரில் இருவர் பயணித்துள்ளதுடன் அவர்கள் இருவரும் மற்றும் பேருந்தில் பயணித்த ஆடைத் தொழிலாளி ஒருவருமே காயமடைந்துள்ளனர்.
பேருந்து சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும்
தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக