நாட்டில் கொழும்பு 7 இல் உள்ள முன்னணி அரச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 17 வயதுடைய மாணவன் ஒருவர் அதிவேக ரயிலில் பாய்ந்து உயிரிழந்துள்ளார். தெமட்டகொட புகையிரத .நிலையத்திற்கு அருகில் அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக பொலிஸார்
கூறியுள்ளனர்.பேருவளையைச் சேர்ந்த மாணவன் நானுஓயாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதிவேக ரயிலில்
மோதுண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
12ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் மருதானை பிரதேசத்திற்கு பாடசாலையில் விசேட நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றுவதற்காக வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக