siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 14 நவம்பர், 2026

மரண அறிவித்தல் எம்.கே. சிவாஜிலிங்கம் காலமானார்

துயர்  பகிர்வு-மலர்வு:-00-உதிர்வு: 14-11-2026
இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாண சபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் நகர பிதாவுமாகிய எம்.கே.சிவாஜிலிங்கம் என அழைக்கப்படும் மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் சனிக்கிழமை நள்ளிரவு காலமானார்.

சிலவருடங்களாக சிறுநீரக செயலிழப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த சிவாஜிலிங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் , கொழும்பில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருந்தார். 
அந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் கடுமையான உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் பருத்தித்த்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,நேற்றைய தினம் சனிக்கிழமை நள்ளிரவை அண்டிய நேரம் காலமானார்.
வடமராட்சி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட எம்.கே சிவாஜிலிங்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) போராளியாக இருந்து,  தனது நீண்ட அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து வந்த கால பகுதியில் வடக்கு மாகாண சபை உறுப்பினராகவும், கடந்த ஆண்டு முதல் வல்வெட்டித்துறை நகரசபையின் நகர பிதாவாகவும் பொறுப்பேற்று, சேவையாற்றி வந்தார்.
 தமிழ் தேசிய அரசியல் களத்தில் சமரசமற்ற நிலைப்பாடுகளுக்காகவும், உரிமைப் போராட்ட குரல்களுக்காகவும் பரவலாக
 அறியப்பட்டவர் 
அவரது மறைவு தமிழ் தேசிய அரசியல் வட்டாரத்திலும், அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறை மக்களிடையேயும் பெரும் சோகத்தை 
ஏற்படுத்தியுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி 
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/10/blog-post_20.html




 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக