கொழும்பு, பாதுக்கை பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 20 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று குறித்த யுவதியின் பெற்றோர் வங்கித் தேவை நிமித்தம் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்ததாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
பெற்றோர் தமது வேலைகளை முடித்துக்கொண்டு மீண்டும் வீடு திரும்பியபோது, மகள் தனது அறையில் அசைவற்ற நிலையில் காணப்பட்டதை அவதானித்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து அவரை உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தத் திடீர் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் பாதுக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம்
தெரியவரும்.
இளம் வயதில் உயிரிழந்த யுவதியின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தகவல்: குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/2026/10/blog-post_20.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக