siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

அடுக்குமாடிக் கட்டிடத்த்தில் சுவிட்சர்லாந்தில் தீ விபத்தில் இருவர் மரணம்

 

சுவிட்சர்லாந்தில் தீயில் எரிந்துபோன அடுக்குமாடிக் கட்டிடத்திற்குள் இருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர், மேலும் பலர் காணவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. 
கிழக்கு சுவிட்சர்லாந்தின் துசிஸ் பகுதியில், உணவகம் மற்றும் குடியிருப்பு அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கொண்ட ஒரு கட்டிடத்தில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. 
இந்நிலையில், "கட்டிடத்திற்குள் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன" என்று கிராபுண்டன் மாகாண காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
மேலும், "இறந்தவர்களை அடையாளம் காணும் பணி இன்னும் நிலுவையில் உள்ளது" என்றும் தெரிவித்துள்ளது
தீப்பிடித்து எரிந்த கட்டிடத்திலிருந்து பதினான்கு பேர் தப்பித்ததாகவும் அவர்களில் எட்டு பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் அறியப்படுகிறது..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



0 கருத்துகள்:

கருத்துரையிடுக