siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 12 ஆகஸ்ட், 2017

யாழ் நல்லூர் முருகன் ஆலயத்தில் தீக்குள் வீழ்ந்த பெண்!

யாழ் நல்லூர் முருகன் ஆலயத்தின் முன்புறத்தில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
ஆலயத்தின் முன்பாக கற்பூரம் கொளுத்தப்படும் பகுதியில் கற்பூரம் கொளுத்த முற்பட்ட போது அவர் தீக்குள் தவறி விழுந்தார் என்று 
தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் நடந்துள்ளது. காயமடைந்தவர் 51 வயதுடையவர் என்றும் கூறப்படுகின்றது.
காயமடைந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது கையிலும், முகத்திலும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>







லிந்துலையில் பச்சிளம் சிசுவை புதைத்து வைத்த இரு பெண்கள் கைது

தலவாக்கலை, லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுக்கலை ஏழாம் இலக்க கொலனியில் பிறந்த சிசுவை யாருக்கும் தெரியாமல் புதைத்த இரு பெண்களை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
லிந்துலை பகுதியில் நேற்று முன்தினம் பிறந்த பச்சிளம் சிசு ஒன்றை சிசுவின் தாயாரும், பாட்டியும் இணைந்து புதைத்து வைத்துள்ளதாக தெரியவருகின்றது.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்த லிந்துல பொலிஸார் குறித்த சிசுவின் தாயையும், சிசுவின் பாட்டியையும் இன்றைய தினம் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த விசாரணைகளின் பின்னர் சிசுவின் தாய் லிந்துல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் நாளைய தினம் நுவரெலியா மாவட்ட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக லிந்துல பொலிஸார் தெரிவித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மரண அறிவித்தல் திரு வல்லிபுரம் கார்த்திகேசு.09.08.17

பிறப்பு : 29 மே 1940 — இறப்பு : 9 ஓகஸ்ட் 2017
யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் கார்த்திகேசு அவர்கள் 09-08-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி நாகமுத்து தம்பதிகளின் 
அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகுமாரன்(சுகு- சுவிஸ்), சுமங்கலா(சுமதி- லண்டன்), சுதாகரன்(கரன்– ஜெர்மனி), மோகனாம்பாள்(மோகனா- லண்டன்), விஜேந்திரன்(விஜய்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலசிங்கம், கருணாகரன், சிறிதரன், விஜிதா, பகிர்தா, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுபாசினி, சுபாஸ்கரன் ஆகியோரின் அன்பு பெரிய தந்தையும்,
இலக்கியா, தாரங்கி, இலக்‌சன், சங்கீர்த்தனா, கெளசிகன், சந்தூஸ்யா, சாம்பகி, காவியன், கவிநயன், அக்‌ஷயன், அனுஷயன்,
 அஸ்மிதன், நிறோசன். கபிலன், டிலக்சன், கஸ்தூரி, கயனிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
நயனியா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்,
அன்னாரின் இறுதிக்கிரியை 13-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் 
செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிறி, சுபா — இலங்கை
தொலைபேசி: +94212050443
சுகுமாரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41787951750
சுமதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447476186167
மோகனா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447496278011
விஜய் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765159149
கெளசி — கனடா
தொலைபேசி: +15143519492
கரன் — ஜெர்மனி
தொலைபேசி: +491736987773
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

கிளிநொச்சியில் யாழ் இளைஞர்கள் மீது கிராம மக்கள் தாக்குதல்!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சி, இயக்கச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதல் தனிப்பட்ட மோதல் காரணமாக ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பகுதியை சேர்ந்த பெண்ணொருவரின் முறையற்ற உறவுமுறை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மனைவியின் செயற்பாடு காரணமாக மனஉளைச்சல் அடைந்த கணவன் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
விஷம் அருந்திய நிலையில், பாதிக்கப்பட்ட கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் குணமடைந்த நிலையில் மூன்று நாட்களின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்றிருந்த அவரின் நண்பர்கள், குழப்பத்திற்கு காரணமான பிறிதொரு நபரை
 தாக்கியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் யாழிலிருந்து சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். யாழ். பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த மூவரே இவ்வாறு வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் 35, 25, 19 வயதுடையவர்களே வாள் வெட்டுக்கு இலக்காகி இருந்தனர்.
அண்மைக்காலமாக யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டுத் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 7 ஆகஸ்ட், 2017

மஸ்கெலியாவில் 30 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி!

ஹட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெந்தகொலை பிரதேத்தில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி பாதையை விட்டு விலகி 30 அடி பள்ளத்தில் பாய்ந்து வித்துக்குள்ளாகியுள்ளது
இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் காயமடைந்த பெண் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலை அதிகாரிகள் 
தெரிவித்தனர்
காயமடைந்த இருவரும் பிரவுஸ்வீக் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.



ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

நீதிபதி இளஞ்செழியன் வட்டுக்கோட்டை படுகொலை விசாரணையை நடத்த தடை!

வட்டுக்கோட்டை கொலை வழக்கு விசாரணையை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் விசாரணை செய்யக்கூடாதென மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி 
இளஞ்செழியனின் தீர்ப்பில் நம்பிக்கையில்லையென மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேன்முறையீடு செய்திருந்தார். இதற்கமையவே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2014 மார்ச் 15ம் திகதி வட்டுக்கோட்டை பிக்னல் மைதானத்தில் யாழ்ப்பாண கல்லூரிக்கும், சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடந்த துடுப்பாட்ட போட்டியில் கைகலப்பு இடம்பெற்றது. இதன்போது அமலன் என்பவர் அடித்து கொல்லப்பட்டிருந்தார்.
இதில் தொடர்புடையவர்கள் என 6 பேருக்கு எதிராக யாழ் மேல்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் ஒரு சந்தேகநபரிற்கு எதிராக எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார். இந்த வழக்கு 
விசாரணையொன்றின் பின், நீதிபதி இளஞ்செழியன் வழக்கு பற்றி கருத்து கூறினார் என சந்தேகநபரால் சுமந்திரனிடம் கூறப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரிக்கும் தகுதி இளஞ்செழியனிற்கு இல்லையென்றும், வேறொரு மேல்நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்க வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று முன்தினம்  ஏற்றுக்கொண்டது. இந்த மனு தொடர்பான பதில் அறிக்கையை சட்டமா அதிபர் எதிர்வரும் ஒக்ரோபர் 20ம் திகதி வரை மன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும், அதுவரை கொலைவழக்கு விசாரணையை யாழ் மேல்நீதிமன்றில் நடத்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என மேன்முறையீட்டு நீதிமன்று அறிவித்தது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



காடுகளில் தீ வைப்பதற்கு காரணமாக யாராக இருந்தாலும் சுட்டுத்தள்ளுங்கள்! இராணுவத்தினருக்கு உத்தரவு

உலகில் காடுகளை பாதுகாப்பதில் அரசாங்கங்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அதிக சிரத்தை எடுத்துவருகின்றன.
ஒவ்வொரு தனி மனிதனும் மரங்களைப் பாதுகாப்பதில் உரித்துடையவர்களாகின்றார்கள். மரம் வளர்ப்போம், இயற்கையை பேணுவோம் என்பது இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒன்றாக அமைந்திருக்கிறது.
மரங்களை அழிப்பதனால் இயற்கையாக கிடைக்கும் மழை பொய்த்துப் போய்விடுகின்றது. இதனால் விவசாயத்திற்குத் தேவையான நீர் மட்டுமன்றி, குடிநீர்க்காகவும் அலைய வேண்டியிருக்கிறது.
மரங்கள் பூமித்தாயின் சொத்து. அதனை அழிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. பல்வேறு நாடுகளில் மரங்களை வெட்டுவதற்கு அனுமதியில்லை.
தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மரங்களை வெட்டுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுமாயின், அதற்கு முறையான அனுமதி பெறப்படுவதுடன், வெட்டப்பட்ட மரங்களுக்கு நிகராக மற்றொரு கன்று நாட்டப்பட வேண்டும் என்பது சட்டமாக்கப்பட்டும் இருக்கின்றன
 பல நாடுகளில்.
இயற்கையைப் பாதுகாப்பது என்பது எதிர்கால சந்ததியினருக்கான வாழ்க்கைக்குமானது. ஆனால் சில தனி நபர்களின் அசமந்தப் போக்கினாலும், அசட்டையீனங்களினாலும் மரங்கள் 
அழிக்கப்படுகின்றன.
வெளிநாடுகளில் தனிநபர் சண்டையினை மையப்படுத்தி காடுகளுக்கு தீ வைப்பது சகஜமான ஒன்றாக இருக்கிறது. இது தொடர்பாக பல காடுகள் தீக்கு இரையாகியிருக்கின்றன.
மனிதர்களால் மாத்திரமன்றி இயற்கையின் வறட்சியினால் காட்டுத் தீ ஏற்படுவதும் உண்டு.
அதேபோன்று இந்தோனேசியாவில் உள்ள காடுகளில் அடிக்கடி தீப்பிடித்து பெருமளவில் சேதம் ஏற்படுகிறது. குறிப்பாக வறட்சியான காலங்களில் ஏற்படும் காட்டுத் தீயானது, அருகில் உள்ள சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் வரை பரவும்.
இந்த ஆண்டின் கோடைக்காலம் தொடங்கும் முன்பே, காடுகளில் தீப்பிடிக்கும் சம்பவம் மிக அதிகமாக உள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்திருக்கிறது.
ஜூலை 27-ம் திகதி நிலவரப்படி 173 இடங்கள் தீப்பிடிக்கும் அபாயம் உள்ள பகுதியாக அவதானிக்கப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக இந்த எண்ணிக்கை உயர்ந்து ஜூலை 30-ம்திகதி 239 இடங்கள் மிகவும் வெப்பம் அதிகம் உள்ள பகுதியாக கண்டறியப்பட்டது.
பல்வேறு பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த இராணுவம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை ஊழியர்களுடன் தேசிய பேரிடர் தடுப்பு முகமையும் போராடி வருகின்றது.
எனினும், தீயை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. 5 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, காடுகளில் சிலர் வேண்டுமென்றே தீ வைப்பதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. எனவே, அதுபோன்ற செயலில் யாராவது ஈடுபட்டால் அவர்களை சுட்டுத் தள்ளும்படி ஜாம்பி மாகாண இராணுவ அதிகாரி இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் தெற்கு சுமத்ரா மாகாணத்திலும் இதேபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் 
வெளியாகி உள்ளது.
செப்டம்பர் மாதத்தில் காட்டுத் தீயின் உக்கிரம் மேலும் அதிகமாக இருக்கும் என தேசிய பேரிடர் தடுப்பு முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் உள்ள அத்தனை வளங்களையும் பாதுகாக்க வேண்டியது 
மனிதனது கடமையாகும்.
ஆனால் மனிதர்கள் தங்களின் அசிங்கத்தை காடுகளில் காட்டுவது முறையற்றது என்று சூழலியலாளர்கள் கருத்து வெளியிடுகின்றார்கள்.
இந்நிலையில் இராணுவ அதிகாரியின் இந்த உத்தரவிற்கு அமைய கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சனி, 5 ஆகஸ்ட், 2017

மரண அறிவித்தல் திருமதி. தயாபரன் நந்தினி .04.08.17

மறைவு  04-08-2017 
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தயாபரன் நந்தினி அவர்கள் 04-08-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுந்தரலிங்கம் தவமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நவரட்ணம், இராசலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,தயாபரன் அவர்களின் அன்பு மனைவியும்,திவீஷன், திஷாந், திவர்ஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,குமுதினி, காலஞ்சென்ற தயாபரன், சுபேந்தினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,தயாநிதி, சந்திரமோகன், நவனீதமோகன், பரமேஸ்வரன், ரவீந்திரராஜா, சந்திதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சியானா, சகானா, சகீசன, சிந்துஜன், சஞ்ஜித் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்..
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் .
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனை பிரார்த்திப்போம்
தகவல் குடும்பத்தினர்
கணவர் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41216243849
மகன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41791748485
செல்லிடப்பேசி: +41798550565
ரவி(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41794232712
சந்திரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786640397
பதிதாஸ் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779242573
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 07/08/2017, 07:30 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Chemin du Capelard 5, 1007 Lausanne Switzerland 
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/08/2017, 11:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Chemin du Capelard 5, 1007 Lausanne Switzerland 
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 08/08/2017, 07:30 மு.ப — 06:30 பி.ப
முகவரி: Chemin du Capelard 5, 1007 Lausanne Switzerland 
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 09/08/2017, 07:30 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chemin du Capelard 5, 1007 Lausanne Switzerland 
கிரியை
திகதி: புதன்கிழமை 09/08/2017, 09:30 மு.ப — 11:45 மு.ப
முகவரி: Chemin du Capelard 5, 1007 Lausanne Switzerland
அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய நாமும் இறைவனை
 பிரார்த்திக்கின்றோம்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

புதன், 2 ஆகஸ்ட், 2017

நாளையும் குறிகாட்டுவான் நயினாதீவு படகுச் சேவை நடக்காது

குறிகாட்டுவான் – நயினாதீவு இடையே படகுச் சேவையில் ஈடுபடும் படகு உரிமையாளரகள் நேற்றுத் தமது சேவைகளை நிறுத்தினர். அவர்களின் சேவைப் புறக்கணிப்புப் போராட்டம் இன்றும் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தென்னிலங்கையைச் சேர்ந்த சிலர் திடீரென இங்கு படகுச் சேவையில் ஈடுபடுகின்றனர். அதனால் எமது வாழ்வாதாரம் பாதிப்படைகின்றது. இது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியே அவர்கள் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் உரிய பதில் வழங்கப்படாததால் நாளையும் போராட்டம் தொடரும் என்று அவர்கள்
 தெரிவித்தனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




மரண அறிவித்தல் திருமதி. பாலசிங்கம் கமலாதேவி.01.08.17

 உதிர்வு- 01-08-2017
யாழ் சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகக்கொண்ட திருமதி.  பாலசிங்கம் கமலாதேவி.
அவர்கள் 01-08-2017 அன்று இறைபதம் அடைந்தார்.
இவர்காலம்சென்ற வ. பாலசிங்கத்தின் அவர்களின்அன்பு மனைவியும், நந்தன்அவர்களின் பாசம்மிக்கதாயாரும் , (காலஞ் சென்ற கந்தசாமி) பரமேஸ்வரி, ‌சின்னத்துரை ( காலம்சென்ற செல்லத்துரை, 
சின்னராஐாவினது சகோதரியும் )
பரமேஸ்வரி, செல்லம்மா, மலர் (காலஞ் சென்ற பரராசசிங்கம், பூபாலசிங்கம் ) பரமேஸ்வரியின் மைத்துனியும்
விக்கினேஸ்வரன், ஸ்ரீஸ்கந்தராஐா, கலா ,லீலாவதி, சுதாகரன் ஆகியோரின் சித்தியும்
மகேந்திரராஐா (காலஞ்சென்று புஸ்பராணி) சாந்தகுமாரி,ஸ்ரீகண்ணதாஸ்,ஐெயலஸ்மி, ஐெயறஞ்சினி, ஐெயகிருஸ்ணா, ஐெயறுாபனா, ஐெயசந்தரா, ஐெயசித்திரா, ஐெயபாரதி, ஐெயறுாபவேல், ஐெயசத்திவேல், ஐெயகுகவேல், ஐெயராஐவேல், ஐெயப்பிரகாஸ், ஐெயதர்சன், ஐெயா மதன், ரதி (காலம் சென்ற றஞ்சன்) நளினி,ஆகியேரின் பாசமிகுமாமியாரும் ஆவர்
அன்னாரின் இறுதித்தகனம் 02.08,2017 இன்று நடைபெற்றது  
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் .
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனை பிரார்த்திப்போம்
தகவல் குடும்பத்தினர்




வெள்ளி, 28 ஜூலை, 2017

துன்னாலை பகுதியில்பொலிஸ் அதிகாரி மீது இளைஞர் குழு தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரி மீது இளைஞர் குழுவொன்று 27.07.2017 தாக்குதல் நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ். துன்னாலை பகுதியில் வைத்து 3 இளைஞர்கள் கொண்ட குழுவொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொடிகாமம் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக
 தெரியவந்துள்ளது.
இதேவேளை. இத் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது கடமையை முடித்து விட்டு பொலிஸ் அதிகாரி வீடு திரும்பும் போதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக 
குறிப்பிடப்படுகின்றது.
மேலும், தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 27 ஜூலை, 2017

மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த தனியார் சொகுசுப் பேரூந்து விபத்து

இன்று அதிகாலை மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசுப் பேருந்து ஒன்று கல்லாறு பாலத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பயணிகள் எவருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை. ஆனால் பாலமும் பேருந்தும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
சாரதியின் கவலையீனமே இவ் விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 19 ஜூலை, 2017

இனந்தெரியாதோர் யாழ். ஆசிரியர் மீது தாக்குதல்!!

வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியரொருவரை வழிமறித்து இனந்தெரியாதோர் சிலர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று பகல் 1.45 மணியளவில் செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரஞ்சித் கண்ணா எனும் 29 வயதான ஆசிரியர் பாடசாலை நிறைவடைந்ததும் செட்டிக்குளம் ஆசிரியர் விடுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் 
சென்றுள்ளார்.
இதன்போது 25 முதல் 30ற்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு இளைஞர்கள் செட்டிக்குளம் முதலியார்குளம் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் மீது இரும்புக்கம்பியால் கடுமையாக தாக்குதல்
 நடத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள், அந்த ஆசிரியர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீதும் தாக்குதல் நடத்தி விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து காயமடைந்த ஆசிரியர் உடனே தனது சக ஆசிரியர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பினை ஏற்படுத்தி நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.
அத்துடன், தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு 
மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்கள் கல்லூரிக்குள் பிரவேசிப்பதற்கு தடை!

பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் அண்மையில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்கள் மறு அறிவித்தல் வரை கல்லூரிக்குள் பிரவேசிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள முடிவினை ஏற்றுக் கொள்வதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் 
தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இது தொடர்பாக முழுமையான விசாரணைகளின் பின்பு குற்றம் நிரூபிக்கப்படுகின்ற மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தவும், ஒழுக்காற்று குழுவினரின் பரிந்துரைகளையும் நான் 
ஏற்றுக் கொள்கின்றேன்.
இந்த ஒழுக்காற்று குழுவின் தீர்மானத்திற்கு நான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றேன். அதே நேரம் குற்றம் நிரூபிக்கப்படுகின்ற மாணவர்கள் தொடர்பாக எந்தவிதமான தயக்கமும் இன்றி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நான் தயாராக
 இருக்கின்றேன்.
ஒரு சிலரின் நடவடிக்கை காரணமாக கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைவதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது” என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்
 தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>

பாடசாலை சிறுமியின் உடலை சிதைத்த டிப்பர்; மக்கள் கொந்தளிப்பு!

.தலைமன்னார் பிரதான வீதி கரிசல் சந்தியில் இன்று மாலை இடம் பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
தலைமன்னாரில் இருந்து கரிசல் வீதியூடாக மன்னார் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனத்தில் மோதியே குறித்த மாணவி உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவி பெரிய கரிசல் கிராமத்தைச் சேர்ந்தவர் எனவும்,புதுக்குடியிருப்பில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5ல் கல்வி கற்கும் ஜிப்ரி பாத்திமா றிஸ்னா (வயது-10) என 
தெரிய வந்துள்ளது.
குறித்த மாணவி பாடசாலை முடிந்து பேருந்தில் பெரிய கரிசல் கிராமத்தில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீடு நோக்கிச் சென்றுள்ளார்.
பேருந்தில் இருந்து இறங்கி வீடு நோக்கி சக மாணவனுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது இன்று மாலை 3 மணியளவில் தலைமன்னார் வீதியூடாக மன்னார் நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனம் குறித்த சிறுமி மீது மோதியுள்ளது.
இந்நிலையில் குறித்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
சம்பவ இடத்தில் மக்கள் ஒன்று கூடிய நிலையில் அவ்விடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டதோடு, குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதியையும்,உதவியாளரையும் மக்கள் கடுமையாக தாக்கிய நிலையில் குறித்த இருவரையும் மீட்ட பொலிஸார் மன்னார் வைத்தியசாலையில் 
அனுமதித்தனர்
மன்னார்-தலைமன்னார் வீதி கரிசல் சந்தியில் மக்கள் ஒன்று கூடியமையினால் நீண்ட நேரம் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருந்தது.
சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் மற்றும் பேசாலை பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் 
கொண்டு வந்தனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சடலத்தை பார்வையிட்டு மரண விசாரணைகளை மேற்கொண்டனர்.
பின்னர் சடலத்தை மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


இடம்பெற்ற இ போ.சபைக்கு சொந்தமான பஸ் விபத்தில் 10 மாணவர்கள் படுகாயம்!

கண்டி பிரதான வீதியின் பகதொழுவ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பாடசாலை மாணவர்கள் 10 பேர் படுகாயமடைந்துள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த விபத்து பகதொழுவ பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பகதொழுவையிலிருந்து நோட்டன் பிரிட்ஜ் வரை சேவையில் ஈடுபடும் இ.போ.சபைக்கு சொந்தமான பஸ் பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த போது, நாவலப்பிட்டியிலிருந்து கினிகத்தேன நோக்கி பயணிகளை ஏறிவந்த தனியார் பஸ் முந்திச்செல்ல முற்பட்டபோதே இவ் விபத்து 
ஏற்பட்டுள்ளது.
விபத்தில் இ.போ.ச பஸ்ஸில் பயணித்த கடவளை வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம்-6 மற்றும் தரம்-7 சேர்ந்த மாணவ மாணவிகள் 10 பேர் கயமுற்ற நிலையில் கினிகத்தேன வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக இரண்டு மாணவர்களும் 1 மாணவியுமாக மூவர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் தனியார் பஸ் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணையை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






திங்கள், 10 ஜூலை, 2017

நேற்றய துப்பாக்கிச்சூட்டால் பருத்தித்துறை பகுதியில் சாலையில் எரியும் ரயர்கள்!

கலிகைச் சந்திக்கும், துன்னாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் சாலையில் ரயர்களைக் கொழுத்தி மக்கள் போக்குவரத்தைத் தடை செய்துள்ளனர்.
பருத்தித்துறை – கொடிகாமம் சாலையூடான போக்குவரத்து இதனால் தடைப்பட்டுள்ளன.
நேற்று பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் துன்னாலை மேற்கைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதனை அடுத்து அப்பகுதியில் சற்று பதற்றமான நிலை எழுந்துள்ளதுடன் அதிகளவான பொலிசார் குவிக்கப் பட்டுள்ளமையும் 
குறிப்பிடத் தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



ஜனாதிபதித் தேர்தல் 2019இல் நிச்சயமாகியுள்ளதாம் ?

அரசமைப்புத் திட்டத்தின்படி அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2019ஆம் ஆண்டில் நடைபெறவேண்டும் என்பது  நிச்சயமாகியுள்ளது என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அரசமைப்புத் திட்டத்தின் 7ஆவது பிரிவின் 30 (1)ஆம் ஷரத்தின்படி ஜனாதிபதியொருவரின் உத்தியோகபூர்வ காலம் ஐந்து வருடங்களாகும். அதன் 31 (3)ஆம் ஷரத்தின்படி ஜனாதிபதியொருவரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒருமாத காலத்துக்குக் குறையாததும் இரண்டு மாத காலத்துக்கு மேற்படாததுமான கால எல்லைக்குள் புதிய தேர்தல் நடத்தப்படவேண்டும்.
தற்போதைய ஜனாதிபதி 2015 ஜனவரி 8ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்தார். அதன்படி அவரது ஐந்து வருடப் பதவிக்காலம் 2020 ஜனவரி 8இல் முடிவடைகிறது. அதனால் அடுத்த தேர்தல் 2019 நவம்பர் 8இற்கும் டிசம்பர் 8இற்கும் இடையில் நடைபெறவேண்டும். எனவே, 2020 வரை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாது என அரசு பகிரங்கமாகக் கூறிவருவது அரசமைப்புக்கு முரணானது.
அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மைத்திரிபால சிறிசேனவும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கவும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டு வருகின்றது.
பொது எதிரணியான மஹிந்த அணி  சார்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்குவார் என பரவலாகப் பேசப்பட்டு வந்தாலும், அரசியலில் இறங்கும் உத்தேசம் தனக்கு இல்லையென அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


யாழ் வடமராட்சி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; பொலிஸார் இருவர் அதிரடி கைது

  பருத்தித்துறை வடமராட்சி கிழக்கு பகுதியில் லொறியின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணல் காடு பிரதேசத்தில் பொலிஸார் உத்தரவை மீறி சென்ற லொறியின் மீது நேற்று பொலிஸார் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் 24 வயதுடைய ஒருவர் பலியானார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மரண அறிவித்தல் திரு காங்கேசு சிவராஜா 08.07.17

தோற்றம் : 10 சனவரி 1956 — மறைவு : 8 யூலை 2017 
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காங்கேசு சிவராஜா அவர்கள் 08-07-2017 சனிக்கிழமை
 அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காங்கேசு, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை மணியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சசிலா அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சிகா, தசிகரன், தனுசியா, சிதுர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அம்பிகாவதி, நல்லம்மா, பழனி, விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிறஞ்சன், ராகவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதவன், அர்யுனன் ஆகியோரின் 
அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் .
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனை பிரார்த்திப்போம்
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 11/07/2017, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Friedhof Rosenberg Cemetery, Am Rosenberg 5, 8400 Winterthur, Switzerland. 
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 12/07/2017, 02:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Friedhof Rosenberg Cemetery, Am Rosenberg 5, 8400 Winterthur, Switzerland. 
கிரியை
திகதி: திங்கட்கிழமை 17/07/2017, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Friedhof Rosenberg Cemetery, Am Rosenberg 5, 8400 Winterthur, Switzerland. 
தொடர்புகளுக்கு
தசிகரன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797522858
சந்திரபவன்(நண்பர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787510221
கனிஸ்டன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797055809
ராகவி(மருமகள்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797536323
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மரண அறிவித்தல் திருமதி குணரட்ணம் கருணா

தோற்றம் : 28 டிசெம்பர் 1960 — மறைவு : 9 யூலை 2017
யாழ். அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கருணா குணரட்ணம்
 அவர்கள் 09-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று
 இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகராஜா,(அருணா ரான்ஸ் போட்)  இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
கெவின்(Kevin), புளொறா(Flora) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனுஷன் அவர்களின் அன்பு மாமியாரும்,
அருணா, சுகுணா, றுகுணா, பூபாஜினி, திலோத்தமை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவபாலசிங்கம், குணசேகரம், புஷ்பராணி, பிருந்தா, ஞானசேகரம், விவேகானந்தன், யோகேந்திரன், மோகனகாந்தன், ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திலக்சன், வித்தகி ஆகியோரின் அன்புச் சித்தியும்,
நிஷாந்தன், நிரோஷன் ஆதவன், சுருதி, ஆர்த்தி, அபிநயன், ஆதிரை, ஜஸ்ரின் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் 
அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் .
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனை பிரார்த்திப்போம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராசா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447861756006
கேந்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447718396974
மோகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447900256696
கணவர் — பிரித்தானியா
தொலைபேசி: +442085521553
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி

புதன், 5 ஜூலை, 2017

சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் 9 வது ஆண்டு குருபூஜை

யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் முன்னாள் பெருந்தலைவர் சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் ஒன்பதாவது ஆண்டு குருபூஜை வைபவம் இடம்பெற்வுள்ளது.
குறித்த நிகழ்வு நாளை 04) காலை 09 மணியளவில் தேவஸ்தானத்தில் நடைபெறவுள்ளது
ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தலைமையில் விஷேட பூஜை, அன்னையின் நினைவாலயத்தில் வழிபாடு, அன்னையின் உருவச் சிலை வழிபாடு, திருமுறை மடத்தில் விஷேட பூஜை வழிபாடு என்பன
 இடம்பெற்றவுள்ளது.
இதனை தொடர்ந்து காலை 09.40 அளவில் அன்னபூரணி மண்டபத்தில் குருபூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகவுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


கேரள கஞ்சா தலைமன்னார்- கொழும்பு புகையிரத்தில் இருந்து மீட்பு

தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த நேற்று முன்தினம் பயணித்த புகையிரதத்தில் இருந்து சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப் பொதிகளை மடு பொலிஸார்
 மீட்டுள்ளனர்.
தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதத்தில் கஞ்சாப்பொதிகள் கடத்தப்படுவதாக மடு பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு தலைமன்னார் பொலிஸ் நிலைய அதிகாரிகள் வழங்கிய தகவலுக்கமைய, குறித்த கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக மடு 
பொலிஸார் தெரிவித்தனர்.
மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ.மடவல தலைமையில் விரைந்து செயற்பட்ட விசேடபொலிஸ் குழுவினர், மடு புகையிரத தரிப்பிடத்தில் பரிசோதனையை மேற்கொண்டபோது இரண்டு பையில் சுமார் 20 கிலோ 585 கிராம் எடை கொண்ட கஞ்சா போதைப் பொருளை
 மீட்டுள்ளனர்.
இந்த கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் என்று இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இருப்பினும் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>