siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 12 நவம்பர், 2018

வடமராட்சியில் குடும்பஸ்தர் மின்சாரம் தாக்கி பலி

வீட்டில் தண்ணீர் இறைக்கும் இயந்திரத்தை திருத்த முற்பட்ட நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நெல்லியடி கரணவாய் பகுதியில் இன்று ர,12.11,2018, இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.


ஞாயிறு, 11 நவம்பர், 2018

யாழ் மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலி

இரத்தினபுரி பலாங்கொடை, பான் குடா ஓயாவில் நீராட சென்ற சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி
 உயிரிழந்துள்ளனர்.
 இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் .உயிரிழந்த மூவரின் விபரங்கள் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. 
குறித்த சம்பவத்திர் 25 வயதான செல்வரட்ணம் திசான் 23 சரவணபவன் கோபிசன்  மற்றும் 25 வயதான கோபாலகிருஷ்ணன் சாரங்கன்  ஆகிய மூவருமே உயிரிழந்தனர்.
உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
 சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


சனி, 10 நவம்பர், 2018

மரண அறிவித்தல் திருமதி மாணிக்கவாசகர் நாகபூசணி அம்மாள். 09,11,18

மண்ணில் : 22 மார்ச் 1942 — விண்ணில் : 9 நவம்பர் 2018
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நவக்கிரி நிலாவரைசந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகபூசணி அம்மாள் மாணிக்கவாசகர் அவர்கள் 09-11-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபாதம்
 அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு மனைவியும்,
இராகுலன் அவர்களின் அன்புத் தாயாரும்,
பராசக்தி, முத்தம்மா, நடேசலிங்கம்(பழனி), குமரகுருபரன்(குரு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தியாகராஜா, இராஜரட்ணம், அலங்காரம், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் நிலாவரை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி, அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நடேசலிங்கம் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4967318583
குமரகுருபரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773647025
காந்தரூபன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776258098
விபுலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447903254423
நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 9 நவம்பர், 2018

இளைஞர் ஒருவர் கைதடிப் பகுதியில் சடலமாக மீட்பு

தனிமையில் இருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கைதடி கிழக்கை சேர்ந்த இராசையா ரூபதர்மன் (வயது 32) என்ற இளை ஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவரது சகோதரர்கள் கொழும்பில் வசித்து வருகின்றனர்.  இந்த நிலையில் தீபாவளிதினத்தன்று உறவினர் வீட்டில் மதிய உணவு அருந்திவிட்டு சென் றுள்ளார். இரவு உணவு 
உண்பதற்கு வரவில்லை. 
இந்த நிலையில் அடுத்த நாள்காலை அவரது வீட்டில் சடலமாக காணப்பட்டுளளார். உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டது. இந்த மரண விசாரணையை தென்மராட்சி பகுதி மரண விசாரணை அதிகாரி இளங்கீரன்
 மேற்கொண்டிருந்தார்.
இதேவேளை கோப்பாயிலும்  தனிமையில் இருந்த முதியவர் சடலமாக மீட்பு
வீட்டில் தனிமையில் வசித்து வந்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப் பட்ட சம்பவம் கோப்பாய் பகுதியில் 
இடம்பெற்றுள்ளது. 
கோப்பாய் வடக்கை சேர்ந்த சின்னத் தம்பி இராசு (வயது 65) என்பவர் வீட்டில் தனிமையாக வசித்து வந்துள்ளார். கடந்த செவ்வாய்கிழமை இவர் வீட்டில் இருப்பதை அயலவர்கள் அவதானித்துள்ளனர். 
நேற்று முன்தினம் குறித்த நபரை காண வில்லை என வீட்டினுள் சென்று பார்த்த போது இவர் இறந்த நிலையில் சடலமாக இருப்பதை அவதானித்துள்ளனர். 
இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டது. இது தொடர்பான மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம் குமார் மேற்கொண்டிருந்தார்.


புதன், 7 நவம்பர், 2018

இரு இளைஞர்கள்! கிளிநொச்சியில் பரிதாபமாகப் பலி

 !
கிளிநொச்சி ஏ-9 வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
நேற்று மாலை 7 மணியளவில்  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இ
தென்னிலங்கையிலிருந்து  யாழ் நோக்கி சென்றுக்கொண்டிருந்த எரிபொருள்தாங்கி  வாகனமும், பரந்தன் பகுதியிலிருந்து கிளிநொச்சி  நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும்  
விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களும் பலியாகியுள்ளனர்.
விபத்தின் போது ஒருவர் சம்பவ இடத்திலேயே  பலியாகியுள்ளார். மற்றொருவர்  வைத்தியசாலைகுக் கொண்டு சென்ற போது இறந்துள்ளார்.  
இந்த விபத்தில்  இறந்த ஒருவர் அடையாளம் 
காணப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த  செல்வராஜா கஜீபன் வயது 18 என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு இதுவரை மற்றைய இளைஞன் அடையாளம் காணப்படவில்லை.
 தீபாவளி தினமான இன்று இடம்பெற்ற இச் சம்பவம் பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


திங்கள், 5 நவம்பர், 2018

அமரர் நாகலிங்கம் ஆனந்தலிங்கம் 2ம் ஆண்டு நினைவஞ்சலி..05.11.18

 ஆண்டவன் அடியில் : 01,10,2017 
யாழ்  அச்சுவேலி தோப்பை பிறப்பிடமாக்கவும்  நவற்கிரியையும்   தோப்பையும்   வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் திரு நாகலிங்கம் ஆனந்தலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு. 01.11.2018 இன்று நினைவஞ்சலி ஆலம் விருட்சம் போல் வேரூன்றி விழுது விட்டு
 கிளை பரப்பி நிழல் தந்த எங்கள் அன்பு அப்பாவே விதியென்னும் இரண்டெழுத்து உங்களை வேரோடு சாய்த்து ஆண்டொன்று ஆனதே அப்பா ஆனாலும் ஆறுமோ எங்கள் துயரம் மாறுமோ உங்கள் நினைவுகள்  பாசத்தின் 
முழு உருவம் எங்கள்  அப்பா  
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அப்பாவாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி 
நிற்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
  முதலாம் ஆண்டு  நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 4 நவம்பர், 2018

கஞ்சா சுருட்டுகளை வைத்திருந்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

திருகோணமலை – சிறாஜ்நகர் பகுதியில் கஞ்சா சுருட்டுக்களுடன் ஐந்து இளைஞர்களை நேற்றிரவு கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தம்பலகாமம் பொலிஸ்
 பொறுப்பதிகாரிக்கு வழங்கப்பட்டஇரகசிய தகவலை அடுத்து சிராஜ் நகர் பகுதிக்கு விரைந்த பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.இதன்போது கஞ்சா 
சுருட்டுகளுடன் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்
.இதேவேளை, குறித்த இளைஞர்களை இன்றைய தினம் கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் 
குறிப்பிட்டுள்ளனர்.

வடமாகாண அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை 5ஆம் திகதி தினம் விடுமுறை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை
 விடுத்துள்ளார்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வடமாகாண மக்கள் அனைவரும் தீபாவளி தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் இந்த விடுமுறையை வழங்கப்பட்டுள்ளது,
இதற்குப் பதிலாக எதிர்வரும் சனிக்கிழமை பதிற் பாடசாலை நடாத்தி அந்த விடுமுறைக்கான தினத்தினை சரி செய்து கொள்ளுமாறும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வடமாகாண ஆளுநர் 
உத்தரவிட்டுள்ளார்.
 இது தொடர்பில் வட மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவித்தல் வழங்குமாறும் வடமாகாண ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


அமரர் மாதர் தம்பிராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி .04.11.18

யாழ்  அச்சுவேலி  விக்கினேஸ்வர  வீதியை சேர்ந்த    அமரர் மாதர் தம்பிராசா அவர்களின்   இரண்டாம்  ஆண்டு நினைவஞ்சலி (திதி .04.11.20178 இன்று 
.எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே 
உங்கள் அரவணைப்பில் 
இல்லறம் வாழ்ந்திருந்தோம் 
இன்று நாம் தவிக்கின்றோம் 
நீங்கள் இன்றி
மீண்டுமொரு பிறப்பிருந்தால் 
எங்களிடமே வந்திடுங்கள் 
இன்று மட்டுமில்லை 
உயிருள்ளவரை அஞ்சலிப்போம் 
உங்கள் ஆத்மா சாந்திபெற! 

எங்களது காவல் தெய்வமாய் 
என்றும் என்றும் இருப்பதாய் எண்ணி 
உங்கள் நினைவுகளுடன் 
வாழ்ந்து கொண்டிருக்கும் நாம்
உங்கள் பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்  உறவுகள் 
 மைத்துனர்கல்  ,  சகோதரர்கள்,
 சகோதரிகள், உறவினர்கள்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
  முதலாம் ஆண்டு  நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 3 நவம்பர், 2018

நாட்டில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் அறிவுறுத்தல்

நவம்பர் 03ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அது மேலும் விருத்தியடைந்து இலங்கையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
பொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது
ஏனைய பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் 
காணப்படுகின்றது
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் (குறிப்பாக கேகாலை, கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களில்) சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி
 எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி 
எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என 
எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


சாந்தசோலையில் ரயிலில் இருந்து விழுந்த யாழ் இளைஞன் பலி

வவுனியா- தாண்டிக்குளம் சாந்தசோலை பகுதியில் ரயிலில் இருந்து விழுந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
யாழ்.மருதனார்மடம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் 
என்ற இளைஞனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். கொழும்பில்
 இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் இருந்து குறித்த இளைஞன் விழுந்துள்ளான்.
ஓமந்தை- சாந்தசோலை கிராமத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த இளைஞன் விளையாட்டாக ரயிலில் இருந்து குதித்ததாகவும்,  தவறி விழுந்ததாகவும் கருத்துக்கள் உள்ளன. ஆனாலும் உண்மையை உறுதிப்படுத்த 
முடியவில்லை.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 1 நவம்பர், 2018

வடபகுதியை புரட்டி எடுக்கபோகும் 3 சூறாவளிகள்

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூன்று சூறாவளிகள் இலங்கையைத் தாக்கக் கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.
இலங்கைக்குக்கு தென்கிழக்கு, தெற்கு மற்றும்
 தென்மேற்கு திசைகளில் உருவாகியுள்ள இந்த சூறாவளிகள் வரும் இரண்டு வாரங்களுக்குள் இலங்கையைத் தாக்கும் என வானிலை ஆய்வாளர்கள் 
கணித்துள்ளனர்.
இதேவேளை, வடக்கு மாகாணத்தில் மழையுடனான காலநிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில்100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டளவியல் திணைக்களம்
 தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று 100 மில்லிமீற்றர் மழைவீச்சியும் ஏனைய சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> </



ரயில் மோதி ஊரெழு சேர்ந்த பல்கலைகழக மாணவன் மரணம்

தெல்லிப்பளை பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பல்கலை கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்
 வெளியாகியுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில் யாழ். பல்கலைகழக முகாமைத்துவ பீட முதலாம் வருட மாணவனான ஊரெழு வடக்கு சுன்னாகத்தை சேர்ந்த அழகராசா புவனநிதர்சன் (22) என்பவரே இவ்வாறு உயிரிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த நபரிடம் இருந்து பொலிஸார் சாரதி உரிமத்தை கைப்பற்றி உள்ளனர். இந்த உரிமத்தை வைத்தே பொலிஸார் விபத்துக்குள்ளான நபரின் அடையாளத்தை 
கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்த விசாரணையை பொலிஸார் 
நடத்திவருகின்றனர்


திங்கள், 29 அக்டோபர், 2018

தகவல் திருட்டு; முகநூல் நிறுவனத்திற்கு 5 கோடி அபராதம்.

உலகம் முழுவதும் அதிகளவிலான பயனாளர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான முகநூல் நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி அபராதம் விதித்துள்ளது இங்கிலாந்து தகவல் ஆணையம்.
சமூக வலைத்தளங்களில் உலகளாவிய அளவில் அதிகளவில் பயன்படுத்தப்படும் முகநூல் நிறுவன பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியான நிலையில், முகநூல் நிறுவனமும் அந்த தகவலை உறுதிப்படுத்தியதுடன் அதற்காக தமது பயனாளர்களிடம்
 மன்னிப்பு கோரியது.
இங்கிலாந்தில் செயல்பட்டு வரக்கூடிய கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற ஆலோசனை நிறுவனம் மூலமாகவே இந்த தகவல் திருட்டு நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தேர்தல் சமயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவே இச்சம்பவம் நடைபெற்றதாக செய்திகள் வெளியானது. இது தொடர்பாக அமெரிக்காவின் செனட் சபையிலும் நேரில் ஆஜராகி விளக்கமும் அளித்திருந்தார் 
முகநூல் நிறுவனர் மார்க்.
அதே சமயம், இங்கிலாந்தின் தகவல் கண்காணிப்பு அமைப்பு அலுவலகம் மேற்கண்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது முகநூல் நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம் பவுண்ட் அபராதம் விதித்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ. 4.75 கோடியாகும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

மரண அறிவித்தல் திருமதி குணம் உதயகுமாரி 02 08.18

பிறப்பு : 28 ஒக்ரோபர் 1965 — இறப்பு : 2 ஓகஸ்ட் 2018
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Schaffhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குணம் உதயகுமாரி அவர்கள் 02-08-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசய்யா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினராசா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணம்(சின்னத்தம்பி) அவர்களின் அன்பு மனைவியும்,
கௌதமன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பாலகுமார், இரவிந்திரகுமார், விஜயகுமார், யோககுமார், ஜெகதலகுமார், இராசகுமாரி, செல்வகுமாரி, சாந்தகுமாரி ஆகியோரின்
 அன்புச்கோதரியும்,
குகராஜா, குணராஜா(ராஜன்), கலாநிதி, வசந்தநிதி, நந்தினி, காலஞ்சென்ற மகேந்திரராசா, ரஞ்சன், காவேரி, ராணி, நந்தினி, நிரஜா(யூலி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யோகசிங்கம், தமோதரம்பிள்ளை, ஜெகதீஸ்வரன், புஸ்பமாலா, சுதர்சினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
ஜான்சி சுரேஸ், லவனியா குபேரன், றெனிஷா கோகுலன், சங்கவி, பிரவின், சஹானா, சாரதா, பிரதீபன், தாரணி, தர்சினி, தர்சிகா, யமுனா, நிரோசா, கரிகரன், அபிஷேக், அஜீவி, அபிமன், பிரியந்தன், சங்கீதன், நிஜனா, பிரஜின், ஜெனின் ஆகியோரின் மாமியும்,
அபிஷனா, விபிஷன், அக்‌ஷியா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
லக்‌ஷனா, அஸ்வினா, பிரகலாதன், கமலதாசன், நிரஞ்சன், ரவிந்தன், ரஜீவி, திலக் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 

வீட்டு முகவரி:
Herblingerstrasse 24, 
Schaffhausen, 
8207, 
Switzerland.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 08/08/2018, 02:30 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Rheinhardstrasse 3, 8200 Schaffhausen, Switzerland 
தொடர்புகளுக்கு
குணம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788256905
கௌதமன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786945061

வியாழன், 5 ஜூலை, 2018

மரண அறிவித்தல் திரு வேலுப்பிள்ளை நாகலிங்கம்,04.07.18

பிறப்பு : 11 நவம்பர் 1934 — இறப்பு : 4 யூலை 2018
யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Thornhill ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நாகலிங்கம் அவர்கள் 04-07-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணபதி, சிவக்கொழுந்து தம்பதிகளின் 
அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
தயாபரன்(லண்டன்), மதுரநாயகி(லண்டன்), பாஸ்கரன்(கனடா), சசிகலா(இலங்கை), சுபாஸ்கரன்(லண்டன்), கெங்காதரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, தங்கம்மா, இரத்தினம், சேனாதிராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மோகனராஜா, காலஞ்சென்ற சந்திரசேகரம், விஜயசிறி, ஜெயாமதி, பகீரதி, காஞ்சனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கந்தசாமி, யோகராஜா, பாலசுப்பிரமணியம், விக்கினராஜா, இரத்தினராஜா, இராஜேஸ்வரி, சீதாதேவி  ஆகியோரின் 
அன்பு மைத்துனரும்,
சிவபாக்கியம், காலஞ்சென்ற ராஜரட்ணம், யோகேஸ்வரி, அரசரட்ணம், நிர்மலாதேவி, அனுசா, தவராசா, கலா ஆகியோரின் தாய்மாமாவும்,
லோசனன் - பிரியந்தி, அபிநயா, அபிசா, கஜன், கயானா, சர்மிலா - திலீபன், கயானி, வர்ஷன், திர்ஷன், லற்றிகா, கிசோன், கிசானா ஆகியோரின் 
அன்புப் பேரனும்,
சதீப் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
வீட்டு முகவரி 
123 Clark Ave,
Thornhill, 
ON L3T 1T1, 
Canada.

தகவல்
பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/07/2018, 07:00 பி.ப — 10:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 09/07/2018, 11:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
கிரியை
திகதி: திங்கட்கிழமை 09/07/2018, 01:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
தகனம்
திகதி: திங்கட்கிழமை 09/07/2018, 04:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Highland Hills,12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada 
தொடர்புகளுக்கு
பாஸ்கரன் — கனடா
தொலைபேசி: +14163193139
தயா — பிரித்தானியா
தொலைபேசி: +447904364609
சுபாஸ் — பிரித்தானியா
தொலைபேசி: +447961056023
கெங்கா — பிரித்தானியா
தொலைபேசி: +14168298195
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 4 ஜூலை, 2018

யாழில் வேலையில்லை! பட்டாதாரி இளைஞன் விபரீத முடிவு

படித்தும் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் பட்டதாரி இளைஞன் யாழில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.குறித்த சம்பவம் யாழ்.தென்மராட்சி கச்சாய்ப் பகுதியில் நேற்றுத் திங்கட்கிழமை(02) பதிவாகியுள்ளதாக கொடிகாமம்
 பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை செய்து கொண்டுள்ள இளைஞன் எழுதியுள்ள கடிதமொன்று மீட்கப்பட்டுள்ளது.அந்தக் கடிதத்தில் "பல்கலைக்கழகப் படிப்பை முடித்தும் எனக்கு வேலை கிடைக்கவில்லை...எனது குடும்பத்துக்கு நான் ஒன்றுமே செய்யவில்லை,படித்தும் வேலை கிடைக்கவில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபகுதியைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை சத்தியசீலன்(வயது- 29) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.
குறித்த சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 3 ஜூலை, 2018

ஆறு வயதுச் சிறுவனின் உயிரைப் பறித்த றம்புட்டான்

சிலாபம் – கற்பிட்டி, ஆலங்குடா பிரதேசத்தில் றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆலங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த விஷேட தேவையுடைய 6 வயதாகிய முஹம்மது நிஜாம் றிகாஸ்தீன் என்ற சிறுவனே
 உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியே உயிரிழந்துள்ளதாக புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரிவின் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிசாம்
 தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சிறந்த தாயாக் 2018 ஆம் ஆண்டிற்கான விருது பெறும் தாய்

செல்போன் மோகத்தில் ஏற்படும் தவறுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், செல்போனை அவதானித்துக் கொண்டு தாய் ஒருவர் செய்த காட்சி பரபரப்பினை
 ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையினை மடியில் வைத்துக் கொண்டு அதற்கு சாப்பாடு தயார் செய்யும் அழகினை நீங்களே காணலாம்.செல்போனை அவதானித்துக் கொண்டு ஒரு குழந்தையை இப்படியா பசியில் உட்கார வைப்பது?. இந்த ஆண்டு சிறந்த தாய் என்ற விருது இவருக்குத்தான்
 கொடுக்க வேண்டும்…
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



கோர விபத்து…கிளிநொச்சியில் பாடசாலை மாணவி ஸ்தலத்தில் பலி

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து இன்று காலை  இடம்பெற்றுள்ளது.
பரந்தன் உமையாள்புரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் யதுர்சா எனும் மாணவியே உயிரிழந்துள்ளார்.தாயுடன் துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்குச் சென்ற மாணவியை தாய் பாடசாலைக்கருகில் உள்ள பாதசாரிகள் கடவையருகில் இறக்கிவிட்டு வீடு திரும்பி விட்டார்.
பாதசாரிகள் கடவையை மாணவி கடந்து சென்ற போது கிளிநொச்சி பக்கத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வான் மோதியுள்ளது.வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, வாகனசாரதியையும் கைது செய்யப்பட்டுள்ளார் எனத்
 தெரிவிக்கப்பட்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>