தனிமையில் இருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கைதடி கிழக்கை சேர்ந்த இராசையா ரூபதர்மன் (வயது 32) என்ற இளை ஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவரது சகோதரர்கள் கொழும்பில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளிதினத்தன்று உறவினர் வீட்டில் மதிய உணவு அருந்திவிட்டு சென் றுள்ளார். இரவு உணவு
உண்பதற்கு வரவில்லை.
இந்த நிலையில் அடுத்த நாள்காலை அவரது வீட்டில் சடலமாக காணப்பட்டுளளார். உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டது. இந்த மரண விசாரணையை தென்மராட்சி பகுதி மரண விசாரணை அதிகாரி இளங்கீரன்
மேற்கொண்டிருந்தார்.
இதேவேளை கோப்பாயிலும் தனிமையில் இருந்த முதியவர் சடலமாக மீட்பு
வீட்டில் தனிமையில் வசித்து வந்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப் பட்ட சம்பவம் கோப்பாய் பகுதியில்
இடம்பெற்றுள்ளது.
கோப்பாய் வடக்கை சேர்ந்த சின்னத் தம்பி இராசு (வயது 65) என்பவர் வீட்டில் தனிமையாக வசித்து வந்துள்ளார். கடந்த செவ்வாய்கிழமை இவர் வீட்டில் இருப்பதை அயலவர்கள் அவதானித்துள்ளனர்.
நேற்று முன்தினம் குறித்த நபரை காண வில்லை என வீட்டினுள் சென்று பார்த்த போது இவர் இறந்த நிலையில் சடலமாக இருப்பதை அவதானித்துள்ளனர்.
இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டது. இது தொடர்பான மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம் குமார் மேற்கொண்டிருந்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக