இரத்தினபுரி பலாங்கொடை, பான் குடா ஓயாவில் நீராட சென்ற சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி
உயிரிழந்துள்ளனர்.
இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் .உயிரிழந்த மூவரின் விபரங்கள் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவத்திர் 25 வயதான செல்வரட்ணம் திசான் 23 சரவணபவன் கோபிசன் மற்றும் 25 வயதான கோபாலகிருஷ்ணன் சாரங்கன் ஆகிய மூவருமே உயிரிழந்தனர்.
உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக