siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 6 நவம்பர், 2022

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிறந்த பெண் குழந்தைக்கு பதிலாக ஆண் குழந்தையை மாற்றிய பெண் சந்தேகத்தின் பேரில் கைது

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில், பிறந்த பெண் குழந்தைக்கு பதிலாக ஆண் குழந்தையை மாற்றியதாக கூறப்படும் பெண்ணொருவர்
  05-11-2022.அன்று  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதவிய சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக அனுராதபுரம் பொலிஸார் 
கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்த பெண்ணும் கலேன்பிந்துவெவ, தோடாமடுவ சிவலாகுளம் பகுதியை சேர்ந்த 42 வயதான பெண்ணும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் குழந்தைகளை 
பிரசவித்துள்ளனர்.
குழந்தைகள் பிறந்த பின்னர், குழந்தைகள் சுகாதார பராமரிப்பு பிரிவில் வைக்கப்பட்டிருந்த போது, சந்தேக நபரான பெண், 
தனக்கு பிறந்த பெண் குழந்தையை வைத்து விட்டு, 
அங்கிருந்த ஆண் குழந்தையை எடுத்துக்கொண்டதாக 42 வயதான பெண் வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடு
 செய்துள்ளார்.
இதனையடுத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் அதிகாரிகள், பதவிய, சிறிபுர பகுதியை சேர்ந்த 32 வயதான பெண்ணை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
பெண் ஒரு லட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அடுத்த வழக்கு விசாரணை அடுத்தாண்டு மே மாதம் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



மரண அறிவித்தல் திருமதி மகேந்திரம் புஸ்பாநாயகி (புஸ்பா) 04-11-2022

மண்ணில் -09-01-1968-விண்ணில் -04-11-2022.
யாழ் வல்லுவெ ட்டியை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்றோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகேந்திரம் புஸ்பாநாயகி  (புஸ்பா)  அவர்கள் 04-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,திரு மகேந்திரம் அவர்களின் ஆருயிர் மனைவியும் 
கவுதம்  கீர்த்தி மிதுலா (கனடா ) ஆகியோரின் பாசமிகு தாயாரும் 
 (கனடா )திரு திருமதி பொன்னம்பலம் மங்கையற்கரசி
தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை மற்றும் (பிரான்ஸ்) தங்கா  தம்பதிகளின் அன்பு மருமகளும் (சுவிஸ்)  திருமதி சதாநாயகி (சதா ) அவர்களின் பாசமிகு சகோதரியும்  (சுவிஸ்)  திரு உலகநாதன்  (உலகண்ணா )  
அவர்களின் அன்பு மைத்துணியம்  ஆவர்
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-11-2022  திங்கள்கிழமைஅன்று  நல்லடக்கம்  கனடா ரொறன்றோவில் நடைபெறும்
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுவிஸ் சூரிச் - திரு உலகநாதன்  மைத்துனர் 
  கைபேசி-0041 763811726 
அன்னாரின் பிரிவால்
  துயருறும் பாசமிகு கணவர்   பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
பேரப்பிள்ளை , உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 5 நவம்பர், 2022

இடம்பெற்ற கோர விபத்த்தில் வவுனியாவில் மூவர் பலி- 16 பேர் படுகாயம்

வவுனியா – நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் நள்ளிரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரவு 12.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வேகமாக சென்ற அதி சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன்போது விபத்தில் சிக்கி பேருந்து சாரதி மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பேருந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்த
 நிலையில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வெள்ளி, 4 நவம்பர், 2022

நாட்டில் முதலாவது குரங்கு அம்மை நோயாளி அடையாளம்

இலங்கையில் முதலாவது குரங்கு அம்மை நோயாளி கண்டறியப்பட்டுள்ளார். மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்.02-11-2022. நேற்று இலங்கையில் முதன்முறையாக குரங்கு அம்மை தொற்றாளரை கண்டறிந்ததாக, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைத்தியர் ஜூட் ஜயமஹா 
தெரிவித்தார்.
 2-11- 2022 அன்று காய்ச்சல் மற்றும் தோல் கொப்புளங்களுடன் 20 வயதுடைய ஆண் தேசிய பாலியல் தொற்று நோய் கிளினிக்கிற்கு 
சிகிச்சைக்கு வந்துள்ளார்.
நவம்பர் 1 ஆம் திகதி டுபாயில் இருந்து திரும்பிய அவருக்கு நிணநீர் மண்டலங்கள் பெரிதாகி சோர்வாக இருந்தது. அவருக்கு குரங்கு அம்மையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
பல மாதிரிகள் சேகரிக்கப்பட்டு 02-11-2022.அன்று மதியம் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது. மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஒரே இரவில் குரங்கு அம்மையை கண்டறியும் நிகழ்நேர பிசிஆர் சோதனையை மேற்கொண்டது.
ஒவ்வொரு மாதிரியிலும் குறிப்பிட்ட இலக்கு மரபணுக்கள் கண்டறியப்பட்டன. கவனமாகப் பரிசோதித்ததில் நோயாளிக்கு 03-11-2022.அன்று  குரங்கு அம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிகழ்நேர PCR பரிசோதனையை நிறுவியதில் இருந்து, ஆறு 
சந்தேகத்திற்கிடமான நோயாளிகளை குரங்கு அம்மைக்காக
 பரிசோதித்துள்ளது.
7வது பரிசோதனையில், இலங்கையின் முதலாவது குரங்கு அம்மை தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். உலக 
சுகாதார நிறுவன ஆதாரங்களின்படி, குரங்கு அம்மை என்பது ஒரு வைரஸ் ஜூனோடிக் தொற்று, அதாவது விலங்குகளிடமிருந்து 
மனிதர்களுக்கு பரவும்.
இது மனிதர்களிடமிருந்து மற்ற மனிதர்களுக்கும், சுற்றுச்சூழலில் இருந்து மனிதர்களுக்கும் பரவும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வியாழன், 3 நவம்பர், 2022

இலங்கையில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

நாட்டில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 9.1 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், புகைப்பிடிப்பவர்களில் 51 சதவீதமானவர்களில் அதிலிருந்து விலகுவார்கள் என தாம் நம்புவதாக அந்த அதிகார சபையின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வர்த்தக நிலையங்களில் சிகரெட் சில்லரை விலைக்கு உள்ளதே அவர்களுக்கு அதிலிருந்து விடுபட தடையாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அதற்கு தடை விதிப்பதுடன் சிகரட்டிற்கான
 விலை மேலும் அதிகரிக்கப்பட்டு, அதற்காக 
விலைச்சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அதற்கு தடை விதிப்பதுடன், சிகரட்டிற்கான விலை மேலும் அதிகரிக்கப்பட்டு, அதற்காக விலைச்சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்
ஷ குறிப்பிட்டுள்ளார். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




புதன், 2 நவம்பர், 2022

புத்தளம் மாவட்டத்தில் சில பகுதிகளில் கடலில் திடீர் மாற்றம்

புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகளில்.02-11-2022. இன்று  காலை முதல்  கடல் நீர் பச்சை நிறமாக மாறியுள்ளது.
புத்தளத்தின் கற்பிட்டி முதல் வென்னப்புவ வரையிலான கடல் கொத்தளிப்புடன் காணப்பட்டதுடன், கடல் நீரும் பச்சை நிறமாக மாறியுள்ளதாக மீனவர்கள் குறிப்பிட்டனர்.
நுண்ணுயிர் தாவரங்கள் அதிகரித்துள்ளமையே இதற்கான காரணம் என நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடல் மாசடையும் போது இவ்வாறான நிலைமை ஏற்படுவதாகவும், இதற்கு முன்னர் காலி முகத்திடல் உள்ளிட்ட சில பகுதிகளில் கடல் நீரின் நிறம் மாறியதை காண முடிந்ததாகவும் நாரா நிறுவனம்
 குறிப்பிட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 1 நவம்பர், 2022

இசை கச்சேரியில் கூட்ட நெரிசலில் சிக்கி காங்கோ நாட்டில் 11 பேர் உயிரிழப்பு

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கின்ஷாசாவில் உள்ள மிகப்பெரிய மைதானத்தில் பிரபல பாடகர் பாலி இபுபாவின்
 இசைக்கச்சேரி நடந்தது. 
இதையொட்டி அவரது ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் மைதானத்தில் திரண்டனர். 80 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட மைதானத்தில் அதற்கும் அதிகமாக கூட்டம் திரண்டது. 
ரசிகர்கள் பலர் விஐபி இருக்கைகள் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு சென்று அமர முற்பட்டனர். அவர்களை 
போலீசார் தடுத்தனர். 
ஆனால் அதை மீறியும் ரசிகர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்து கொண்டு முன்னேறி சென்றனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 
இந்த நெரிசலில் சிக்கி 2 போலீசார் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். 
இந்த சம்பவம் காங்கோவில் பெரும் சோகத்தை
 ஏற்படுத்தி உள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

திங்கள், 31 அக்டோபர், 2022

நாட்டில் வாகன விபத்து ஒன்றில் மூளை சாவடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம்


வாகன விபத்து ஒன்றில் மூளை சாவடைந்த நபரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் அனுமதி வழங்கியுள்ளனர். இந்நிலையில் குடும்பத்தினரின் இந்த முடிவை பலரும் 
பாராட்டியுள்ளனர்.
ஹசலக மகாஹஸ்வெத்தும கிராமத்தில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 48 வயதான எம்.ஜீ. சந்திம என்பவர் இவ்வாறு விபத்தில் மூளை சாவடைந்துள்ளார்.
ஹசலக பிரதேச சபையில் சாரதியாக தொழில் புரிந்து வந்த இந்த நபர், பணி முடிந்து பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, பேருந்தில் இருந்து விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.
பதுளை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளை சாவடைந்த நபரின் உடல் உறுப்புகளை குடும்பத்தினர் அனுமதியுடன் இன்று (31-10-2022) பதுளை பொது வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சுடன் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) இணங்க இலங்கை விமானப்படை (SLAF) இந்த நடவடிக்கையை
 எளிதாக்கியது. 
விமானப்படையின் கூற்றுப்படி, நன்கொடையாளரின் முக்கிய உறுப்புகள் தேசிய மருத்துவமனையால் தேவைப்படும் நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இதேவேளை, இரத்மலானையை தளமாகக் கொண்ட இல.04 படைப்பிரிவில் இருந்து பெல் 412 உலங்குவானூர்தியானது, தேசிய வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க, வான்வழி அம்புலன்ஸாக
 மாற்றப்பட்டது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 30 அக்டோபர், 2022

நாட்டில் வடமாகாணத்தில் 4 ஆம் திகதி வரை மழைவீழ்ச்சிக்கு கூடிய சாத்தியக் கூறுகள்

 வங்கக்கடலில் தற்போது நிலவி வருகின்ற தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 4 ஆம் திகதி வரை மழைவீழ்ச்சி வடமாகாணத்தில் கிடைக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து 
எதிர்வரும் 9ஆம் திகதி அளவில் ஒரு பலமான
 தாழமுக்கம் ஒன்று உருவாவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதுடன், இதனால் பலத்த மழை வீழ்ச்சி இலங்கையின் பல பகுதிகளுக்கு கிடைக்கலாம். எனஅனர்த்தமுகாமைத்துவமத்தியநிலையம் தகவல் 
வெளியிட்டுள்ளது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 29 அக்டோபர், 2022

நாட்டில் மீண்டும் குறைகிறது லிட்ரோ எரிவாயு விலை

நாட்டில் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் மீண்டும் லிட்ரோ எரிவாயு விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் 
அறிவித்துள்ளது.
இந்த விடயத்தை.29-10-2022. இன்றைய தினம் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று காலை மற்றுமொரு எரிவாயு கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.
இந்த நிலையில் 3,700 மெற்றிக் தொன் எரிவாயு இறக்கும் பணி நாளைய தினம் (30.10.2022) ஆரம்பமாகும். இதேவேளை உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் தற்போது குறைவு ஏற்பட்டுள்ளது
இதன் பயனை மக்களுக்கு வழங்கும் நோக்கில் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் மீண்டும் லிட்ரோ எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வெள்ளி, 28 அக்டோபர், 2022

சவூதி அரேபியாவில் இலங்கை பெண்ணுக்கு மரண தண்டனை

பணிப்பெண்ணாக சவூதி அரேபியா வீடொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அந்த வீட்டிலிருந்த சிறுமிக்கு சூனியம் செய்து கொலை செய்தார் எனக்கூறி சவூதி நீதிமன்றம், அப்பெண்ணுக்கு மரண தண்டனை விதித்திருந்தது.
இந்த நிலையில் சவுதியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளின் தலையீட்டால், சிறுமியின் உடற்பாகங்களை இரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தியபோது சிறுமி புற்றுநோயால் இறந்ததாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.
அதன்பின்னர் இலங்கை பெண் சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் கடந்த 16ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவிசாவலை, தல்துவ என்ற இடத்தைச் சேர்ந்த பாத்திமா என்ற 48 வயதான திருமணமாகாத பெண்ணே இந்த சம்பவத்தில் இருந்து தப்பித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டிலேயே அவர் வெளிநாடு 
சென்றுள்ளார்.
இலங்கை திரும்புவதற்கு தயாரானபோதே அவருக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த குற்றச்சாட்டிற்காக சில வருடங்கள் சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார். அதேவேளை குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு எந்தவொரு இழப்பீட்டு தொகையும் வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



குருமன்காடு பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி குற்றவாளி தப்பியோட்டம்

வவுனியாவில் விபத்தினை ஏற்படுத்தி ஒருவரின் உயிரிழப்பு காரணமான நபர் ஒருவர் தப்பியோடியுள்ள நிலையில் குறித்த நபரை கண்டு பிடிக்க காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை 
நாடியுள்ளனர்.
வவுனியா, குருமன்காடு பகுதியில் கடந்த 1ம் திகதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் விபத்தினை ஏற்படுத்திய உந்துருளியில் தப்பிச்சென்றுள்ளது.
படுகாயமடைந்த நபர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் விபத்தினை ஏற்படுத்தி அவ்விடத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பித்து சென்ற நபர் தொடர்பில் தகவலை வழங்குமாறு பொதுமக்களிடம் காவல்துறையினர் கோரிக்கை 
விடுத்துள்ளனர்.
குறித்த நபர் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றால் அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது 071-8591343, 024-2222226 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி வவுனியா போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவலை வழங்குமாறும் காவல்துறையினர் 
தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வியாழன், 27 அக்டோபர், 2022

மரண அறிவித்தல் அமரர் பொன்னம்பலம் இந்திராணி (இந்திரா ) 27.10..22

தோற்றம் -20-03-1951-மறைவு-27-10-2022.
யாழ்.  நவற்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர் பொன்னம்பலம் இந்திராணி  (இந்திரா ) அவர்கள் 27.10.2202  அன்று காலமானார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

நாட்டில் பக்கவாதத்தினால் வருடாந்தம் 4,000 பேர் உயிரிழப்பு

இலங்கையில் வருடத்திற்கு சுமார் 4,000 பேர் பக்கவாதம் காரணமாக உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு 
தெரிவித்துள்ளது.
உயர் இரத்த அழுத்தமே பக்கவாதத்திற்கு முக்கிய காரணமாக அமைவதால் வருடத்திற்கு இரண்டு முறையாவது இரத்த அழுத்தத்தை அளவிட வேண்டும் என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சமிந்தி சமரகோன் 
சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு
 தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 26 அக்டோபர், 2022

உதுவன்கந்த பகுதியில் இடம்பெற்ற கோரவிபத்து..! 37 பேர் காயம் ஒருவர் உயிரிழப்பு

மாவனெல்லை – உதுவன்கந்த பகுதியில் 25-10-2022.அன்றுஇரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 37 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிததுள்ளனர்.
கேகாலையிலிருந்து கண்டி நோக்கி தனியார் பேருந்து பயணித்துள்ளதுடன், மாவனெல்லையிலிருந்து கேகாலை நோக்கி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பயணித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த 38 பேர் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், அவர்களில் பெண் ஒருவர் 
உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.விபத்துடன் தொடர்புடைய இரண்டு பேருந்துகளினதும் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவனெல்லை பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 25 அக்டோபர், 2022

நுவரெலியாவில் திடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அருந்தப்பு

நுவரெலியா நகரில் ஒரே குடும்பத்தினர் பயணித்தஓட்டோவொன்று  25-10-2022.இன்று பிற்பகல் தீப்பிடித்து எரிந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் 
தெரிவித்தனர்.
நுவரெலியா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருளை நிரப்பிக்கொண்டு லவர்ஸ்லிப் பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே, முச்சக்கரவண்டி இவ்வாறு தீப்பற்றி 
எரிந்துள்ளது.
ஓட்டோ இவ்வாறு தீப்பற்றி எரிந்த போது, ஓட்டோவுக்குள் தாய், தந்தை மற்றும் மகளும் பயணித்துக்கொண்டிருந்ததுடன், தந்தையே ஓட்டோவை செலுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
எனினும் சம்பவத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள நுவரெலியா பொலிஸார், இந்த தீவிபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் 
தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





திங்கள், 24 அக்டோபர், 2022

இன்சியான் நகரில் இருந்து பயணித்த விமானம் ஓடுதளத்தை விட்டுவிலகி புல்வெளிக்குள் பாய்ந்தது -

அடைமழை காரணமாக விமானத்தை அவசரமாக தரையிறக்க, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் விமானம் புல்வெளிக்குள் நழுவிச்சென்று மயிரிழையில் 173 பயணிகள் பாதுகாப்பாக 
வெளியேறியுள்ளனர்.
இந்த சம்பவம் .23.10.2022.அன்று  பதிவாகியுள்ளது.
தென்கொரியாவின் இன்சியான் நகரில் இருந்து 162 பயணிகள் 11 பணியாளர்கள் என மொத்தம் 173 பேருடன் பயணித்த விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதையடுத்து பிலிப்பைன்ஸ் நாட்டின் மேக்டன்-செபு சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அப்போது, அங்கு கடும் மழை பெய்துகொண்டிருந்ததால் 2 முறை விமானத்தை தரையிறக்க மேற்கொண்ட விமானியின் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்றாவது முறையாக விமானத்தை விமானி தரையிறக்க முற்பட்டதாகவும் அப்போது, கனமழை காரணமாக மழைநீர் தேங்கியதால் விமான ஓடுதளம் வழுவழுப்புடன் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், விமானத்தை விமானி தரையிறக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி அருகில் இருந்த 
புல்வெளிக்குள் பாய்ந்துள்ளது.
இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் உட்பட 173 பேரும் அவசரகால வழியாக விமானத்தில் இருந்து வெளியேறி தப்பித்துள்ளனர். இந்த சம்பவத்தில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தை தொடர்ந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 23 அக்டோபர், 2022

சாவகச்சேரி டச் வீதியில் வீடொன்றில் வெடித்து சிதறிய சமையல் எரிவாயு

சாவகச்சேரியில் வீடொன்றில் 22-10-2022 அன்று மதியம் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.
இச் சம்பவம் சாவகச்சேரி டச் வீதியில் இடம் பெற்றுள்ளது வீட்டில் இருந்த பெண்மணி சமையல் செய்துகொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் அடுப்பு சேதமடைந்ததுடன் வீட்டில் இருந்த எவருக்கும் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என்று
 தெரிய வந்துள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

சனி, 22 அக்டோபர், 2022

நாட்டில் புலமைப்பரிசில் பரீட்சையில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள்

நாட்டில்  இம்முறை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை நடத்தும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி.தர்மசேன வெளியிட்டுள்ள அறிக்கையில் 
தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் இரண்டாவது வினாத்தாளை முதலிலும் முதலாவது வினாத்தாளை இரண்டாவதாகவும் வழங்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் கடந்த ஆண்டு நேர
 அட்டவணை சம்பந்தமாக விரிவா ஆராய்ந்து இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் ஆணையாளர் அந்த அறிக்கையில் 
கூறியுள்ளார்
புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி நடத்த பரீட்சைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.இரண்டாம் வினாத்தாளுக்கான பரீட்சையை காலை 9.30 முதல் 10.45 வரை ஒரு மணி 45 நிமிடங்களும், முதலாம் வினாத்தாளுக்கான பரீட்சையை முற்பகல் 11.15 முதல் மதியம் 12.15 வரை ஒரு மணி நேரமும் நடத்த பரீட்சைகள் திணைக்களம் 
தீர்மானித்துள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 21 அக்டோபர், 2022

நாட்டில் சப்ரகமுவ பல்கலைக்கழக விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் பல்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய மாணவன் இன்று அதிகாலை பல்கலைக்கழக விடுதியில் 
உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இதுவரை இடம்பெற்றுள்ள நிலையில், மரணத்திற்கான காரணம் இதுவரை கணடறியப்படவில்லை.
உயிரிழந்த மாணவரும் பல்கலைக்கழகத்தின் கபடி 
அணியில் அங்கம் வகித்தவர் என பல்கலைக்கழக மாணவர் நலன்புரி பணிப்பாளர் பேராசிரியர் மனோஜ் ஆரியரத்ன தெரிவித்தார்.
சடலம் தற்போது பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>