siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 30 ஜூன், 2018

துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி முல்லைத்தீவில் இளைஞன் பலி

முல்லைத்தீவு காட்டு பகுதியில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் ஒருவரின் சடலம் சற்றுமுன் மீட்கப்பட்டுள்ளது. முள்ளியவளை, கற்பூரவெளி காட்டுப்பகுதியில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர். சம்பவத்தில் முள்ளியவளை 1ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 22வயதுடைய மனோகரன் கஜிந்தன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சடலத்தின் தலைப்பகுதியில் துப்பாக்கி சூட்டுகாயங்கள்...

வியாழன், 28 ஜூன், 2018

யாழ் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் அருகில் விபத்து

யாழ் புத்தூர் மீசாலை வீதியில் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு அருகில், வேக கட்டுப்பாட்டை  இழந்த கப் ரக் வாகனம், வீதியை விட்டு பாய்ந்து மின்கம்பத்தை மோதியதில் மின்கம்பம் உடைந்தது. இச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

வீட்டில் உறங்கிய இளைஞன் யாழில் திடீர் மரணம்

யாழ்ப்பாணத்தில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார். 20 வயதான அகிலகுமார் நிலவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். திருமண நிகழ்வொன்றுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய அவர் உறங்கச் சென்றுள்ளார். இதன்போது அவருக்கு மூச்சுத் திணறல்  ஏற்பட்டுள்ளது. உடனடியாக கோப்பாய் வைத்தியசாலக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடல் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்...

வெள்ளி, 22 ஜூன், 2018

ஊரெழுவைச் சேர்ந்த பெண் கொட்டாஞ்சேனையில் கொலை

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணத்திலிருந்து கொட்டாஞ்சேனைக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக வந்த பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் யாழ்ப்பாணத்திலிருந்து சென்றவர்களே இந்தக் கொலையை செய்துள்ளனர் என்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகப்  பொலிஸார் கூறினர். இந்தச் சம்பவம்  செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. ஊரெழு...

மீனவரின் வலையில் மன்னார்பகுதியில் சிக்கிய பிள்ளையார்

மன்னார் பிரதான பாலத்தடி கடற்பகுதியில் இன்று காலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் வலையில் பிள்ளையார் சிலை ஒன்று மாட்டியுள்ளது.இதனைப் பார்க்கப் பலர் அங்கு  ஒன்று கூடினர். மர்மப் பொருள் என நினைத்து அதனைக் கரைக்குக் கொண்டு வந்த மீனவர் பொருளில் இருந்த மண்ணை அகற்றிய போது  பிள்ளையார் சிலை  எனத் தெரிய வந்துள்ளது. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

செவ்வாய், 19 ஜூன், 2018

துப்பாக்கிச் சூட்டில் பலியான இளைஞன் மருத்துவ அறிக்கையில் வெளிவந்த அதிர்ச்சி

மல்லாகத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான இளைஞனின் மரணத்திற்கான காரணமும், மேலும் பல அதிர்ச்சியான விடயங்களும் பிரேத பரிசோதனை அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது.உயிரிழந்த இளைஞனின் உடலில் இருந்து அதிகளவான  குருதி வெளியேறியமையே உயிரிழப்புக்கு காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடைபெற்று 15 நிமிடங்களுக்குள் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தால் குறித்த இளைஞரை காப்பாற்றியிருக்கலாம்  என...

நபரொருவர் ஐந்து சந்தி பகுதியில் தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டுள்ளார்

யாழ். ஐந்து சந்தி பகுதியில் நபரொருவர் தனக்கு தானே நெருப்பு மூட்டிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 55 வயதான நபரொருவரே வீட்டில் வைத்து நெருப்பு மூட்டிக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது. சம்பவத்தையடுத்து குறித்த நபரை அயலவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.  இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

திங்கள், 18 ஜூன், 2018

கோர விபத்து புகையிரதக் கடவையில் இருவர் ஸ்தலத்தில் பலி!

ராகம, பேரலந்த புகையிரத வீதியில் 17.06.2018. மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிலாபத்தில் இருந்த கொழும்பு நோக்கி பயணித்த  புகையிரதத்தில், மோட்டார் சைக்கிள் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.புகையிரத பாதுகாப்பு கடவை மூடி யிருந்த நிலையில் அதன் ஊடாக பயணக்க முயற்சித்த இருவரே இவ்வாறு புகையிரதத்தில் மோதுண்டுள்ளனர்.கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த...

வியாழன், 14 ஜூன், 2018

கிளிநொச்சி இளைஞன் தாமரைக் கோபுரத்திலிருந்த தவறி வீழ்ந்தது காரணம் வெளியாகியுள்ளது

கொழும்பு தாமரைக் கோபுரத்திலிருந்து வீழ்ந்து தமிழ் இளைஞன் விழுந்தமைக்கான காரணம்  தற்போது வெளியாகியுள்ளது.கிளிநொச்சியை சேர்ந்த கோணேஸ்வரன் என்ற இளைஞன் தாமரைக்கோபுரத்தின் மின்தூக்கியிலிருந்து விழுந்து உயிரிழந்திருந்தார்.மரணத்திற்கான உண்மையான காரணத்தை கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர வெளியிட்டுள்ளார். தாமரைக் கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கி இதுவரை முழுமையாக செய்து முடிக்கப்படவில்லை. மின்தூக்கி செயற்படுவதற்கான செங்குத்தான...

புதன், 13 ஜூன், 2018

திருப்பாம்புரத்தில் பூமணத்தோடு நடமாடும் பாம்பு

காரைக்கால் அருகேயும் ஒரு திருப்பாம்புரம் இருக்கிறது. இங்குள்ள பாம்புரநாதர் கோயில் கருவறையில் இன்றும் பாம்பின் நடமாட்டம் உள்ளது. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை  நாட்களில் ஆலயத்தினுள் மல்லிகைப்பூ, தாழம்பூ வாசனை வீசுகிறது. அச்சமயங்களில் அங்கு பாம்புகள் நடமாட்டம் இருப்பது வழக்கமாம். இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

திங்கள், 11 ஜூன், 2018

இளவாளையில் கோழி இரத்தம் குடிக்கும் பேய்

யாழ் இளவாளையில் தனது வீட்டில் பேய் ஒன்று கோழியைப் பிடித்து இரத்தம் உறுஞ்சியதாக முகப்புத்தகத்தில் ஒருவர் தெரிவித்துள்ளார். இவர் இதனை உண்மை என்றே தெரிவித்து தனது முகப்புத்தகத்தில் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார். அவரது முகப்புத்தக கருத்துக்களை இங்கு வெளியிட்டுள்ளோம். யாழ் இளவாலை வீட்டில் நேற்றிரவு இடம் பெற்ற உண்மை சம்பவம்.... சுமார் 1:20(அதிகாலை) மணியளவில் நாய் அதிகமாக குரைக்கும் சத்தம் கேட்டு யன்னல் வழியாக பார்த்த போது .... ஊஞ்சலில் யாரே ஆடிக்...

சனி, 9 ஜூன், 2018

உடுவில் பகுதியில் இறதந்த குழந்தை இறுதிக் கிரியையின் போது உயிருடன் விழிப்பு

யாழ். உடுவில் பகுதியில் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டரை வயதுப் பெண் குழந்தைக்கு இறுதிக் கிரியைகள் இடம்பெறும் போது உயிர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.உடுவில் ஆலடிப் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமிக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக அந்தக் குழந்தைக்கு அவரது பெற்றோர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதித்துள்ளனர். காய்ச்சல்...

வெறியுடன் தன்னைக் கொன்றவனை பழிவாங்கிய பாம்பு

அமெரிக்காவில் உள்ள ஹுஸ்டன் நகரில் வெட்டப்பட்ட பாம்பின் தலைக்கு உயிர் வந்து இளைஞரை கடித்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்தச் சம்பவம் கடந்த மாதம் 27ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது; அமெரிக்காவில் உள்ள ஹுஸ்டன் நகரை சேர்ந்தவர் ஜெனீபர் சுட்கிளிப் என்ற பெண்ணின் கணவர் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போது குறித்த இளைஞர் செல்லும் பாதையில் சினேக் எனப்படும் கிளுகிளுப்பை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது.அதை...

வெள்ளி, 8 ஜூன், 2018

தெரனியகல நகரில் குழந்தையின் உயிரை பறித்த மண்மேடு!

கேகாலை மாவட்டத்தில் தெரனியகல நகரில் மண்மேடு சரிந்து வீடொன்றின் மீது விழுந்ததில் மூன்று வயது குழந்தையின் உயிர் காவுகொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவிவருகின்ற நிலையில், நேற்று (வியாழக்கிழமை) குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. குறித்த அனர்த்தத்தில் மூவர் படுகாயமடை ந்துள்ள நிலையில், அவர்கள் தெரனியகல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 3 வயது குழந்தையின் தாய், தந்தை மற்றும் நான்கரை...

புதன், 6 ஜூன், 2018

மரண அறிவித்தல், திருமதி செல்வநாயகம் யோகானந்தசிவம்

பிறப்பு : 2 யூலை 1966 — இறப்பு : 5 யூன் 2018 யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், வளலாய், ஆவரங்கால் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகானந்தசிவம் செல்வநாயகம் அவர்கள் 05-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னமணி தம்பதிகளின்  அன்பு மருமகளும், செல்வநாயகம்(செல்வா காட்வெயர்- ஆவரங்கால்) அவர்களின் பாசமிகு மனைவியும், சாமினா அவர்களின்...

ஞாயிறு, 3 ஜூன், 2018

யாழில் வயோதிபத் தம்பதியரைத் தாக்கி கொள்ளை

யாழ் மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வீடொன்றுக்கு இன்று அதிகாலை புகுந்த கொள்ளைக் கும்பல், அங்கு வாழ்ந்த வயோதிபத் தம்பதியரைத் தாக்கிவிட்டு 8 பவுண் தங்க நகைகள் உட்பட பெறுமதியான பொருள்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் மானிப்பாய் ஆனந்தா வீதியில் இன்று (02) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றது. கொள்ளையர்களின் தாக்குதலில் தலையில் காயமடைந்த குருநாதர் இரட்ணம் (வயது 69) என்ற வயோதிப மாது யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம்...

சனி, 2 ஜூன், 2018

கிரிகம்பமுனுவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண்: பிணவறையில் விழித்தெழுந்தார்

ஹோமாகம பிரதேசத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட பெண் ஒருவரின் சடலம் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, விழித்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மத்தேகொட கிரிகம்பமுனுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் வயிற்று வலி காரணமாக, ஹோமகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததுடன் தாதியொருவர் ஊசி ஒன்றை  ஏற்றியுள்ளார். அதன் பின்னர் குறித்த பெண் அசைவின்றி காணப்பட்டுள்ள நிலையில்,...

வெள்ளி, 1 ஜூன், 2018

யாழில் தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்த குழந்தை பலி

யாழ்.அராலி கிழக்குப் பகுதியில் இரண்டரை வயதுப் பெண் குழந்தை தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்.அராலி கிழக்குப் பகுதியில் இரண்டரை வயதுப் பெண் குழந்தை தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.குறித்த  சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,வீட்டிற்குள் தாயார் சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது  சகோதரர்களான இரு குழந்தைகளும் வீட்டு...

இணைந்தசேவைக்கு வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் குழப்ப நிலை

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இணைந்தசேவை மேற்கொள்வதில் தனியார் மற்றும் இ.போ.சபைக்கிடையே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று யூன் 1ஆம் திகதி முதல் இணைந்த பேருந்து சேவையை மேற்கொள்வதற்கு வடமாகாணசபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை மேற்கொள்வதற்கு தனியார் சென்றபோது இ.போ.ச சாரதிகள் மற்றும் தனியார் பேருந்து சாரதிகளிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதுடன் இணைந்த சேவை மேற்கொள்வதில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன்...