யாழ். உடுவில் பகுதியில் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டரை வயதுப் பெண் குழந்தைக்கு இறுதிக் கிரியைகள் இடம்பெறும் போது உயிர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ்.உடுவில் ஆலடிப் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமிக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக அந்தக் குழந்தைக்கு அவரது பெற்றோர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதித்துள்ளனர். காய்ச்சல் குறையாத காரணத்தால், குறித்த குழந்தையைப் பெற்றோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குறித்த குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து உயிரிழந்த குழந்தையின் சடலம் குழந்தையின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் உயிரிழந்த குழந்தையின் இறுதிச் சடங்கு உடுவில் ஆலடியிலுள்ள அவரது இல்லத்தில் நேற்றைய தினம் பகல் இடம்பெற்றது. இதன் போது குழந்தையின் சடலத்திலிருந்து சலம், மலம் வெளியேறியுள்ளது. அத்துடன் குழந்தையின் கைகள் அசைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால், குழந்தை உயிருடன் இருப்பதாகப் பலராலும் நம்பிக்கை வெளியிடப்பட்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக