யாழ்ப்பாணத்தில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
20 வயதான அகிலகுமார் நிலவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திருமண நிகழ்வொன்றுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய அவர் உறங்கச் சென்றுள்ளார். இதன்போது அவருக்கு மூச்சுத் திணறல்
ஏற்பட்டுள்ளது.
உடனடியாக கோப்பாய் வைத்தியசாலக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.
திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டார். உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் கண்டறிய உடற்கூறுகள் கொழும்புக்கு
அனுப்பப்பட்டுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக