யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொட்டாஞ்சேனைக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக வந்த பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
யாழ்ப்பாணத்திலிருந்து சென்றவர்களே இந்தக் கொலையை செய்துள்ளனர் என்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகப்
பொலிஸார் கூறினர்.
இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
ஊரெழு கிழக்கைச் சேர்ந்த குணரட்ணம் விஜிதா (வயது -36) என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
"கணவனைப் பிரிந்து வாழும் இந்தப் பெண், கொட்டாஞ்சேனையிலுள்ள வீடொன்றில் பணிப் பெண்ணாக உள்ளார்.
வேலை செய்யும் வீட்டிலேயே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்டே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஒருவரோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களோ இந்த கொலையை
செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் மற்றும் கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்" என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக