யாழ் இளவாளையில் தனது வீட்டில் பேய் ஒன்று கோழியைப் பிடித்து இரத்தம் உறுஞ்சியதாக முகப்புத்தகத்தில் ஒருவர் தெரிவித்துள்ளார். இவர் இதனை உண்மை என்றே தெரிவித்து தனது முகப்புத்தகத்தில் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார்.
அவரது முகப்புத்தக கருத்துக்களை இங்கு வெளியிட்டுள்ளோம். யாழ் இளவாலை வீட்டில் நேற்றிரவு இடம் பெற்ற உண்மை சம்பவம்.... சுமார் 1:20(அதிகாலை) மணியளவில் நாய் அதிகமாக குரைக்கும் சத்தம் கேட்டு யன்னல் வழியாக பார்த்த போது .... ஊஞ்சலில் யாரே ஆடிக் கொண்டிருந்தார்கள்...பயத்துடன் மெதுவாக அடுத்த அறைக்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி...
இந்த உருவம் ஒரு கோழியை பிடித்து தின்று கொண்டிருந்தது.... உடனே சைகை மூலமாக லைட்டை போடும் படி சொல்லி விட்டு திரும்பினால் கோழி மட்டும் கீழே கிடக்கிறது....
வெள்ளை உருவம் இல்லை... பயத்துடன் இரவு கழிந்தது... காலையில் 6மணியளவில் வெளியே வந்து கோழியை பார்த்தால் கறுத்த இரத்ததுடன் செத்து கடக்கின்றது...(வேறு இடத்தில் நாய் தூக்கி போட்டிருக்கலாம்.) பின்பு ஜயர் ஒருவரை அழைத்து செய்ய வேண்டியவைகள்
எல்லாம் செய்தாயிற்று.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக