கொழும்பு தாமரைக் கோபுரத்திலிருந்து வீழ்ந்து தமிழ் இளைஞன் விழுந்தமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.கிளிநொச்சியை சேர்ந்த கோணேஸ்வரன் என்ற இளைஞன் தாமரைக்கோபுரத்தின் மின்தூக்கியிலிருந்து விழுந்து உயிரிழந்திருந்தார்.மரணத்திற்கான உண்மையான காரணத்தை கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர வெளியிட்டுள்ளார்.
தாமரைக் கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கி இதுவரை முழுமையாக செய்து முடிக்கப்படவில்லை. மின்தூக்கி செயற்படுவதற்கான செங்குத்தான வழி மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளது. எனினும், அந்த பகுதி கடுமையான இருள் நிறைந்ததாக காணப்படுகின்றது. அதற்கான கதவுகளும் பூட்டப்பட்டிருக்கவில்லை.
இந்த நிலையில், புதிதாக பணிகளுக்கு செல்பவர்களுக்கு அது தொடர்பில் அறிவுருத்தப்படுவதும் இல்லை. மின் தூக்கியில் செல்வதற்காக காலடி எடுத்து வைத்தால் எந்த வித தடையுமின்றி விழுந்து உயிரிழக்க நேரிடும்.அந்த வகையிலேயே குறித்த இளைஞரும் தாமரைக்கோபுரத்தின் 16 ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார் என திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட வரும் அதியுயர் கோபுரமான தாமரை கோபுரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில்இ 19 வயதான கோணேஸ்வரன் உயிரிழந்தார்.மிகவும் குடும்ப வறுமை காரணமாக தனது மகன் வேலை தேடி கொழும்புக்கு வந்ததாக கோணேஸ்வரனின் தந்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக