யாழ்.அராலி கிழக்குப் பகுதியில் இரண்டரை வயதுப் பெண் குழந்தை தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்.அராலி கிழக்குப் பகுதியில் இரண்டரை வயதுப் பெண் குழந்தை தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.குறித்த
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,வீட்டிற்குள் தாயார் சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது
சகோதரர்களான இரு குழந்தைகளும் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது ஒரு குழந்தை எதிர்பாராத விதமாக வீட்டின்
முன்பாக அமைந்துள்ள தண்ணீர்த் தொட்டிற்குள் தவறி விழுந்துள்ளது.
குறித்த குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட போதும்
, குறித்த குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.யாழ். அராலி கிழக்கு வாலையம்மன் கோயிலடியைச் சேர்ந்த பா.சானுஜா எனும் குழந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக