siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 29 மே, 2020

நாட்டில் மத்திய மலையகத்தில் உயிருடன் பிடிபட்ட கருஞ்சிறுத்தை உயிரிழப்பு

மஸ்கெலியா பகுதியில் உள்ள மரக்கறி தோட்டம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த வலை ஒன்றில் கடந்த 26ஆம் திகதி உயிருடன் பிடிக்கப்பட்ட கருஞ்சிறுத்தை இன்று (29) உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி  வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மஸ்கெலியா – நல்லதண்ணி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட லக்ஷபான  வாழைமலை பகுதியில் உள்ள மரக்கறி தோட்டத்திலேயே அந்த கருஞ்சிறுத்தை  பிடிபட்டது.அருகிவரும் உயிரினமான கருஞ்சிறுத்தைகள் இலங்கையில் மலைக்காடுகளில் வசிப்பதாக சில மாதங்களுக்கு...

நாட்டில் பொதுப் போக்குவரத்தில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்

பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கமைய மாத்திரம் பயணிகளை அழைத்து செல்வதனை சட்டமாக்குவதற்கு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர யோசனை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.புதிய சட்டத்தை அமுல்படுத்துவதாயின் பேருந்து கட்டணத்தை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை  தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பயணிகளை  அழைத்து செல்லும் சட்டம் அமுல்படுத்தப்பட்டதால் பேருந்து துறை முழுமையாக...

தங்கையை வெட்டிக் கொலை செய்த சகோதரி கணவனுடன் அதிரடியாகக் கைது

வெல்லவாய, குடாஓயா பொலிஸ் பிரிவில் காணாமல் போயிருந்த யுவதி எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல் போன 23 நாளின் பின்னர் காட்டுப்பகுதியில் இருந்து அவரது மண்டையோடு, தோள்ப்பை என்பன மீட்கப்பட்டுள்ளன.இந்த கொலையைச் செய்ததாக  அவரது சகோதரி மற்றும் கணவன கைது செய்யப்பட்டுள்ளனர்.தெலுல்ல பகுதியை சேர்ந்த 21 வயதான யுவதி கடந்த 5ஆம் திகதி காணாமல் போயிருந்தார். அது குறித்து ஊவா குடாஓயா  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.பொலிசார்...

வியாழன், 28 மே, 2020

முக்கிய தகவல் யாழ் மாவட்ட மக்களுக்கு திங்கள் முதல் பொதுச் சந்தைகள் ஆரம்பம்

எதிர்வரும் 01-06-20.. திங்கட்கிழமை யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுச் சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக மீளத் திறக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.தற்போதைய நிலைமைகள் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கும் போது;யாழ் மாவட்டத்தில் தற்பொழுது இயல்பு நிலை படிப்படியாக திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், பொதுச்சந்தைகளையும்...

கோர விபத்து கிளிநொச்சியில் பலியான தாய். மகள் மருத்துவமனையில்

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து .28-05-20.இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது.பூநகரி  திசையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கிளிநொச்சியிலிருந்து யாழ். நோக்கி பயணித்த ரிப்பர் வாகனம் மோதியதிலேயே குறித்த விபத்து  இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில்...

மரணஅறிவித்தல் அமரர் செல்லையா பாலசுப்பிரமணியம் 28-05-20

தோற்றம்-21-01.1928 — மறைவு : 28-05-2020 யாழ்பாணத்தை  பிறப்பிடமாகவும்.பெரியார்குளம் பூந்தோட்டம் வவுனியாவை  வதிவிடமாகவும் கொண்ட அமரர் செல்லையா பாலசுப்பிரமணியம்  அவர்கள் 28-05-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் அமரர் செல்லையா தம்பதிகளின் பாசமிகு மகனும் சரஸ்வதியின்  அன்புக்கணவரும்   அன்னார் பாவனந்தன்  (சுவிஸ்) காசிநாதன் (சுவிஸ்) லலிதாம்பிகை (இலங்கை)  வேதநாயகி  (கனடா ) இந்துமதி (இலங்கை) காந்திமதி...

புதன், 27 மே, 2020

நாட்டில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஓர் அறிவித்தல்

2019 – 2020 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கான இணையத்தள விண்ணப்ப காலம் எதிர்வரும் ஜுன் 2 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

கோர விபத்தில் யாழில் மத்திய கல்லுரி ஆசிரியர் பரிதாபமாகப் பலி

யாழில் இடம்பெற்ற விபத்தில் மரணமான யாழ்.மத்திய கல்லூரி முன்னாள் ஆசிரியர் சிவகாந்தன் அவர்கள் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த ஆசிரியர் சிவகாந்தன் , யாழ்.மாநகர சபை உறுப்பினர் சிவகாந்தன் தனுஜன் அவர்களின் பாசமிகு  தந்தையும் ஆவார். இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

செவ்வாய், 26 மே, 2020

முக்கிய தகவல் உயர்தரப்பரீட்சையை எதிர்நோக்கி காத்திருக்கும் மாணவர்களுக்கு

இவ்வாண்டு இடம்பெறவுள்ள, க.பொ.த. உயர்த தரப் பரீட்சை ஆரம்பமாகும் திகதியுடன் கூடிய, நேர அட்டவணையொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாகவும், அது போலியாக வெளியிடப்பட்டுள்ளதாகவும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத்  பூஜித தெரிவித்தார். க.பொ.த. உயர் தரப் பரீட்சை தொடர்பில், கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் வெளியிடும் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருந்து செயற்படுமாறு, பாடசாலை சமூகத்தைச் சேர்ந்த அனைத்து தரப்பினர்களையும்...

அகால மரணம் லண்டனில் குலசிங்கம் சரண்ஜா 24-05-202

 யாழ் / மண்டைதீவைச் சேர்ந்த சிறுமி லண்டனில் உயிரிழப்பு. லண்டனில் வசித்து வரும் மண்டைதீவு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அகால மரணமடைந்துள்ளார். குலசிங்கம் சரண்ஜா (வயது-13) என்ற சிறுமியே நேற்று (24-05-2020.) ஞாயிற்றுக்கிழமை அன்று உயிரிழந்தார். கழுத்தில் கயிறு போட்டு விளையாடிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக கயிறு கழுத்தை இறுகிக் கொண்டதாலேயே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளர்  ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி ஆத்மா சாந்தி பெற...

திங்கள், 25 மே, 2020

ஊரடங்கு நாளை நீங்க்கம் அரச தனியார்துறைப் பணியாளர்களுக்கு ஓர் அறிவிப்பு

கடந்த மே 11ஆம் திகதி அரச மற்றும் தனியார்த்துறை பணியாளர்களுக்காக வெளியிடப்பட்ட சுகாதார ஒழுங்குவிதிகள், நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி பபா பலிஹவர்த்தன இது  தொடர்பில் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.அரச மற்றும் தனியார்துறை பணியாளர் கொரோனா வைரஸ் தொற்று  ஏற்படுவதற்கு முன்னர் இருந்ததை போன்று நாளை கடமைகளுக்கு...

ஞாயிறு, 24 மே, 2020

மரணஅறிவித்தல் அமரர் செல்வராசா அற்புதநாயகி 24-05-20

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிக்கவும் வசிப்பிடமாககொண்ட அமரர் செல்வராசா அற்புதநாயகிஅவர்கள் .24.05.2020.  இன்று அதிகாலை 2.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார் அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மகளும் ஆவர்  அன்னாரின் இறுதிக்கிரியை  அவரது இல்லத்தில் 13.00 மணியளவில் நடைபெற்று பின்னர்   சிறுப்பிட்டி மேற்கு  இந்துமயணத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.  கண்ணீர்...

வெள்ளி, 22 மே, 2020

வீசிய பலத்த காற்று.கிளிநொச்சி .பொலிஸ் நிலையம் சேதம் பொலிஸ் அதிகாரி காயம்

கிளிநொச்சி மாவட்டத்தில்.21.05-20. அன்று மாலை வீசிய பலத்த காற்று காரணமாக பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கிளிநொச்சி  தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி இராமநாதபுரம் பகுதியில் உள்ள உப பொலிஸ் நிலையம் மீது பாரிய மா மரக்கொப்பு முறிந்து விழுந்ததில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்து கிளிநொச்சி  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.  மாமரம் முறிந்து வீழ்ந்தமையால்...

கடும் காற்று யாழில் 29 குடும்பங்கள் பாதிப்பு. அடுத்த 24 மணி நேரத்திற்கு எச்சரிக்கை

யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஏற்பட்டுள்ள கடும் காற்றுடனான காலநிலை காரணமாக.22-05-20. இன்று வெள்ளிக்கிழமை காலைவரை சுமார் 29 குடும்பங்களைச் சேர்ந்த 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என  மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின்  உதவிப் பணிப்பாளர் என். சூரியராஜா தெரிவித்தார்.இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும் போது;வங்கக் கடலில் உருவாகிய அம்பன் புயலின்  காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அதனுடைய தாக்கம் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம்...

வியாழன், 21 மே, 2020

தலவாக்கலை இடம்பெற்ற ஐ.டி வகுப்பு.ஆசிரியர்கள், மாணவர்கள் சுய தனிமைப்படுத்தல்

சுகாதார முறைமையினை கடைபிடிக்காது மேலதிக வகுப்புகளை இரகசியமாக நடாத்தி வந்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் சுயதனிமை படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.அத்துடன் மேலதிக வகுப்பு நடாத்தி வந்த வகுப்பறைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.தலவாக்கலை லிந்துளை நகரசபைக்குட்பட்ட தலவாக்கலை  பகுதியிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.இரண்டு ஆசிரியர்கள் ஒன்றிணைந்து சமூக இடைவெளி மற்றும் சுகதார முறைமையினை கடைபிடிக்காது உயர்தர மாணவர்கள் 14 பேருக்கு...

பளையில் கோர விபத்தில் கணவர் ஸ்தலத்தில் பலி!மனைவி வைத்தியசாலையில்

கிளிநொச்சி பளையில் விமானப் படையின் அம்புலன்ஸ் வாகனம் மோதி குடும்பத்தலைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் அவரது மனைவி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தத் துயரச் சம்பவம்.21-05-20. இன்று காலை இடம்பெற்றது. பளை – தம்பகாமம் சந்தியில் குடும்பத் தலைவரும்  அவருடைய மனைவியும் வந்து ஏறிய போது, யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி ஏ9 வீதியில் பயணித்த  அம்புலன்ஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.சம்பவத்தில் 55...

புதன், 20 மே, 2020

மரணஅறிவித்தல் அமரர் பாலசிங்கம் சின்னமணி.20-05-20

தோற்றம்-17-05.1947 — மறைவு : 20-05-2020 யாழ். தோப்பு ,அச்சுவேலியை   பிறப்பிடமாகவும். (தோப்பு ,சங்கக்கடை வீதி யை ), வதிவிடமாகவும் கொண்ட அமரர் பாலசிங்கம் சின்னமணி அவர்கள் 20-02-2020 புதன் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்  . அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்  , காலஞ்சென்ற தப்பிப்பிள்ளை அன்னப்பிள்ளை   தம்பதிகளின் அன்பு மகளும் கார்த்திகேசு, முத்துப்பிள்ளை தம்பதிகளின்  அன்பு மருமகளும்...

கொரோனா தொற்றா.கண்டுபிடிக்க 14 நாட்கள் தேவையில்லை 15 நிமிடங்கள் போதுமாம்

கொரோனா வைரஸ் தொற்று ஒருவரிடம் காணப்படும் சந்தர்ப்பத்தில் அதனை 15 நிமிடங்களில் அறிந்து கொள்ளும் வகையில் புதிய கருவி ஒன்று அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய  ஒரு துளி இரத்தத்தினை சோதனைக்குட்படுத்துவதன் மூலம் 15 நிமிடங்களில் கொரோனா தொற்று இருக்கின்றதா, இல்லையா என்பதனை கண்டறிந்து விடலாம் என அந்நாட்டின் தேசிய பல்கலைக்கழகத்தின் வைத்தியர் பேராசிரியர் சஞ்சய சேனாநாயக்க தெரிவித்துள்ளார் என சர்வதேச...

செவ்வாய், 19 மே, 2020

யாழ் மானிப்பாயில் திருடிய தாலியுடன் சங்குவேலியில் சிக்கிய திருடன்

மானிப்பாய் பகுதியில் பெண்ணொருவரின் தாலி அறுக்கப்பட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் மாவட்ட விஷேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் சங்குவேலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.கொள்ளையடிக்கப்பட்ட தாலி மற்றும் கொடி என்பன மாவட்ட விஷேட குற்றத்தடுப்பு  போலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரான்சிஸ் தலைமையிலான அணியினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளது என்னவெனில்;யாழ். நவாலியில் 18-05-20. மாலை குடும்பப் பெண்ணின் தாலியை...

ஞாயிறு, 17 மே, 2020

அமரர் இரத்தினம் தங்காரத்தினம் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.17.05.20

மலர்வு,  08 04 1943-- உதிர்வு, -29, 05 2019 யாழ். நவக்கிரி  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்()ட (தர்போது மானிப்பாயில்   வசித்த)அமரர் இரத்தினம் தங்காரத்தினம் - ¨¨ அவர்ககளின்  1ம் ஆண்டு நினைவஞ்சலி.17,05,20  இன்று  அன்னார், காலஞ்சென்ற அப்பாத்துரை  பொன்னம்மா தம்பதிகளின் மகளும்  அமரர் இரத்தினம்  (வல்லுவெட்டி )அவர்களின் அன்பு மனைவியும் ஆவர் காலஞ்சென்ற சீவரத்தினம் நேசமணி ஆகியோரின்  அன்புச்சகோதரியும்...