siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 19 மே, 2020

யாழ் மானிப்பாயில் திருடிய தாலியுடன் சங்குவேலியில் சிக்கிய திருடன்

மானிப்பாய் பகுதியில் பெண்ணொருவரின் தாலி அறுக்கப்பட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் மாவட்ட விஷேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் சங்குவேலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.கொள்ளையடிக்கப்பட்ட தாலி மற்றும் கொடி என்பன மாவட்ட விஷேட குற்றத்தடுப்பு 
போலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரான்சிஸ் தலைமையிலான அணியினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளது என்னவெனில்;யாழ். நவாலியில் 18-05-20. மாலை குடும்பப் பெண்ணின் தாலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது
 செய்யப்பட்டுள்ளனர்.நவாலி சின்னப்பா
 வீதியில் சென்ற இளம் குடும்பப் பெண்ணிடம் 11 பவுண் தாலியை 18-05-20. மாலை அபகரித்துச் சென்ற கொள்ளையர்கள் இருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.முச்சக்கர வண்டியில் சென்ற கொள்ளையர்கள் இருவரே இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். முச்சக்கர வண்டியின் இலக்கத்தைவைத்து 
கொள்ளையர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.சந்தேக நபர் ஒருவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 11 தங்கப் பவுண் தாலிக் கொடியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இதன்போது சந்தேக நபர்கள் பயன்படுத்திய முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டிருந்தமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக