siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 21 மே, 2020

தலவாக்கலை இடம்பெற்ற ஐ.டி வகுப்பு.ஆசிரியர்கள், மாணவர்கள் சுய தனிமைப்படுத்தல்

சுகாதார முறைமையினை கடைபிடிக்காது மேலதிக வகுப்புகளை இரகசியமாக நடாத்தி வந்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் சுயதனிமை படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.அத்துடன் மேலதிக வகுப்பு நடாத்தி வந்த வகுப்பறைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.தலவாக்கலை லிந்துளை நகரசபைக்குட்பட்ட தலவாக்கலை
 பகுதியிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.இரண்டு ஆசிரியர்கள் ஒன்றிணைந்து சமூக இடைவெளி மற்றும் சுகதார முறைமையினை கடைபிடிக்காது உயர்தர மாணவர்கள் 14 பேருக்கு ஐ.டி வகுப்பு நடாத்தி வந்துள்ளனர். இது தொடர்பில் தலவாக்கலை லிந்துளை நகரசபை தலைவருக்கு கிடைக்கபெற்ற
 இரகசிய தகவலுக்கமைய குறித்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்களையும் தலவாகலை லிந்துளை நகரசபைக்கு அழைத்து விசாரனைகளை மேற்கொண்டு சம்பவம் தொடர்பில் தலவாகலை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் தலவாகலை 
பொலிஸார் ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து குறித்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்களும் அவர்களுடைய வீடுகளில் சுயதனிமை படுத்தலுக்கு உட்படுத்தபட்டுள்ளதாக
 தெரிவிக்கபடுகிறது.  குறித்த வகுப்புகளை நடாத்த கொரோனா தொற்று ஏற்படுவதற்கு முன்பு இரண்டு 
ஆசிரியர்களும் தலவாகலை லிந்துளை நகரசபையில் அனுமதி பெற்றுள்ள போதிலும், கொரோனா தொற்று ஏற்பட்மையினால் பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகள் நடாத்த அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக