siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 21 மே, 2020

பளையில் கோர விபத்தில் கணவர் ஸ்தலத்தில் பலி!மனைவி வைத்தியசாலையில்

கிளிநொச்சி பளையில் விமானப் படையின் அம்புலன்ஸ் வாகனம் மோதி குடும்பத்தலைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் அவரது மனைவி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தத் துயரச் சம்பவம்.21-05-20. இன்று காலை இடம்பெற்றது.
பளை – தம்பகாமம் சந்தியில் குடும்பத் தலைவரும்
 அவருடைய மனைவியும் வந்து ஏறிய போது, யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி ஏ9 வீதியில் பயணித்த 
அம்புலன்ஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.சம்பவத்தில் 55 வயதுடைய குடும்பத்தலைவர் ஸ்தலத்தில் உயிரிழந்தார்.விபத்தில் அவருடைய மனைவி படுகாயமடைந்த
 நிலையில், வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை 
முன்னெடுத்துள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக