இவ்வாண்டு இடம்பெறவுள்ள, க.பொ.த. உயர்த தரப் பரீட்சை ஆரம்பமாகும் திகதியுடன் கூடிய, நேர அட்டவணையொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாகவும், அது போலியாக வெளியிடப்பட்டுள்ளதாகவும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத்
பூஜித தெரிவித்தார்.
க.பொ.த. உயர் தரப் பரீட்சை தொடர்பில், கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் வெளியிடும் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருந்து செயற்படுமாறு, பாடசாலை சமூகத்தைச் சேர்ந்த அனைத்து தரப்பினர்களையும் கேட்டுக்கொள்வதாக, பரீட்சைகள் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் தற்போது காணப்படும் சூழ்நிலைகளுக்கு அமைய, முழு நாட்டினதும் கல்வி தொடர்பான முடிவுகளை தூரதிருஷ்டியாக மேற்கொள்ள வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஒரு
சிலர் இவ்வாறான செய்திகளை
வெளியிடுவதன் மூலம், சமூகத்தை பிழையாக வழிநடத்த முற்படுகின்றமை வருந்தத்தக்கதாகும் என,
சுட்டிக் காட்டியுள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், இது தொடர்பில் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த போலியான
செய்தி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அம்முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக