பள்ளாறு மயில்லோடை வயல் பகுதியில் காட்டு யானை தாக்கி இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தை ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்னளர்.
இச்சம்பவமானது சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளாறு மயில்லோடை வயல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக
தெரியவந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தில் வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இன்று மதியம் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஸ்தலத்திலேயே குறித்த நபர்
உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் சம்மாந்துறை விளினையடியைச் சேர்ந்த 68வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தை ஆவார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சம்மாந்துறை பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக