siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 18 மார்ச், 2022

திரு மரியநாயகம் ஜெகநாதன் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்18.03-22

பிறப்பு08 MAR 1963-இறப்பு-18 FEB 2022,
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மரியநாயகம் ஜெகநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.ஓர் திங்கள் ஆனதுவோ... கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா..! அப்பா..! என்றழைக்க என் உதடுகள்
இன்னமும் தான் ஓயவில்லை
அழியாத உங்கள் இனிய முகமும்
எம் நெஞ்சினின்று இன்னமும்
 நீங்கவில்லை
31 நாட்கள் ஆகியென்ன, அழுதுபுரண்டென்ன
மறைந்துபோன எங்கள் அப்பா
மறுபடியும் தான் வருவதெப்போ....!!!
எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும் மறையாது அப்பா!
31 நாள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஓடிமறைந்தாலும்
உங்கள் அன்பும் பாசமும் அரவணைப்பும்
என்றும் எம் நினைவை விட்டு அகலாது
உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்..!!!!அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.அன்னாரின் 31ம் நாள் விருந்துபசாரத்திலும் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்
.முகவரி: Freiestrasse 108952 Schlieren, Switzerland
இங்ஙனம்,
குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக