siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 15 மார்ச், 2022

நாட்டை எரிபொருட்களைத் தாங்கிய கப்பல்கள் வந்தடையவுள்ளன

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுபாட்டை குறைக்கும் முகமாக இன்று எரிபொருட்களைத் தாங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 37,500 மெற்றிக் டன் பெட்ரோல் அடங்கிய கப்பல் ஒன்றும், தலா 20,000 மெற்றிக் டன் டீசல் மற்றும் விமானத்திற்கான எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்றும் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இக்கப்பல்களில் உள்ள எரிபொருளைத் தரையிறக்குவதற்கான நாணய கடிதங்களை விடுவிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் 30,000 மெற்றிக் டன் எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்றும் இன்று அல்லது நாளை நாட்டை வந்தடையவுள்ளது.
இவ்வாறு நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ள எரிபொருட்களால் எதிர்வரும் நாட்களில் எரிபொருளுக்கான தட்டுப்பாட்டைக் குறைக்க முடியும் என வலுசக்தி அமைச்சின் செயலாளர் கே.டீ.ஆர்.ஒல்கா
 குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக