நாட்டில்லிட்ரோ நிறுவனம் சற்றுமுன்னர் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, தற்போது கெரவலப்பிட்டிய முனையத்தில் போதியளவு சமையல் எரிவாயு கையிருப்பு உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின்
தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அடுத்த 10 நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில் 01 மில்லியன் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு குறுகிய காலத்தில் களையப்படும் எனவும் குறித்த நிறுவனம் நுகர்வோருக்கு அறிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக