siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 19 மார்ச், 2022

நினைவஞ்சலி 9ஆம் ஆண்டு அமரர் இளையதம்பி நாகம்மா 19.03.2022

திதி: 19-03-2022 
யாழ் தோப்பு அச்சுவேலியைப்   பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர்.  இளையதம்பி நாகம்மா  அவர்களின்.திதி 9ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி திதி: 19-03-2022, சனிக்கிழமை இன்று 
அன்னார் அமரர்,இளையதம்பியின்  அன்பு மனைவியும் புவனேஷ் 
காலம்சென்ற இராசரத்தினம் காலம்சென்ற நடேஸ் மற்றும் சந்திரன்  குணம் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவர்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
நீங்காத நினைவுகள்>>>
அன்பாலும் பண்பாலும் எம்
 எல்லோரையும் அரவணைத்த
எம் அன்புத் தெய்வமே நீங்கள்
 மீளாத் துயில் கொண்டு ஒன்பது ஆண்டுகள் 
கடந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றும் எம்முடனே வாழும்.பார்க்கும் இடமெல்லாம்
நீங்கள் நிற்பதுபோல்
நீங்கள் எம்முடன் வாழ்ந்த
காலங்கள் எம்முள்ளே
நித்தமும் அலைமோதிய
வண்ணம் உள்ளது அம்மா!!!உங்கள் கைபிடித்து
உங்கள் ஆதரவில்
உங்கள் வழியிலேயே
உங்கள் பின்னால்
நடந்தோம் அம்மா..ஆனால் இன்று கைபிடித்து
அரவணைக்க நீங்கள்
இல்லையே எங்களுடன்...உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் ஆத்மாசாந்தி
அடைய குடும்ப தினரும் நவற்கிரி ,கொம்  நவக்கிரி,கொம் நிலாவரை கொம்
இணையங்களும் உறவினர்கள் கனடா தோப்பு சுவிஸ் நவற்கிரி , நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றன .ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் பிள்ளைகள் ,மருமக்கள் பெறாமக்கள் பேரப்பிள்ளைகள்  .
பூட்டப்பிள்ளைகள்  
தகவல்: குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக