நாட்டில் பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளாகியதில் ஏறக்குறைய 18 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று கண்டி - யாழ்ப்பாணம் A-9 வீதியின் கட்டுகஸ்தோட்டை, கலுகல பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 17 பாடசாலை மாணவ, மாணவிகளும் வேனின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் பேருந்து கண்டி திசை நோக்கியும், பாடசாலை வேன் அதற்கு எதிர் திசையிலும் பயணித்துக்கொண்டிருந்த போதே
விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக